13 ஜன., 2010

ஸ்ரீ விவேகானந்த ஜெயந்தி

நேற்று ஜனவரி 12-ம் நாள். சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள். இந்திய அரசு அந்த நாளை தேசிய இளைஞர் தினம் என்று அறிவித்து, நாடெங்கும் கல்வி நிறுவனங்களும், சேவை அமைப்புகளும், விவேகானந்தரின் பக்தர்களும் பல வருடங்களாக அதைக் கொண்டாடி வருகின்றனர். பக்தர்களுக்கு அவர் 'ஸ்ரீ சுவாமிஜி மகாராஜ்' அல்லது சுருக்கமாக 'சுவாமிஜி'.

என் வாழ்வில் பெரிய மாற்றங்களுக்கு முக்கிய காரணம் என் நெஞ்சில் வைத்துப் பூஜித்து வரும் அவர்தான். அவரது படைப்புகளை (Complete Works of Swami Vivaekananda) நம்பமுடியாத மலிவு விலைப் பதிப்பில் முதலில் எட்டு புத்தகங்களாக அத்வைத ஆஸ்ரமம் வெளியிட்டது. (மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தமிழ்ப் பதிப்பை வெளியிட்டுள்ளது) பிறகு மேற்கொண்டு கிடைத்த, சேகரிக்கப்பட்டவற்றைக் கொண்டு ஒன்பதாவது புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை படிக்க அவகாசமில்லாதவர்களுக்காகவும், இளைஞர்களுக்காகவும், குறிப்பாக மாணவர்களுக்காகவும் "Call to the Nation" என்ற ஒரு அற்புதமான குறுநூல் மலிவுப் பதிப்பாக பல ஆண்டுகளாக விற்பனையாகி வருகிறது. கடைசியாக நான் வாங்கியபோது விலை வெறும் 175 காசுகள் மட்டுமே!

இளைஞர்கள் அவசியம் இந்த நூலை வாங்கிப் படிக்கவேண்டும். சுவாஜியின் ஒப்பற்ற, உற்சாகமூட்டும், தன்னம்பிக்கையூட்டும் மேன்மையான சிந்தனைகளை இந்நூலில் படித்துப் பயன்பெறலாம். மனித மேம்பாடு அறிவியல் அமைப்பின் மூலமாகவும், தனிப்பட்ட முறையிலும் இந்நூலை இளைஞர்கள் பலருக்கு கிடைக்கச் செய்தோம். அதைப்படித்தவர்கள் மனதில் நிச்சயம் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.

விவேகானந்தரின் ஒரு சிறந்த சிந்தனையுடன் இப்பதிவை நிறைவு செய்கிறேன்:

"ஒரு லட்சியத்தோடு வாழுங்கள். லட்சியவாதி ஆயிரம் பிழைகள் செய்தால், லட்சியம் எதுவும் இல்லாதவன் ஐம்பதாயிரம் பிழைகள் செய்வான். மனிதனுக்கு லட்சியம் மிகவும் அவசியம்."

கருத்துகள் இல்லை: