3 பிப்., 2010

இன்று ஒரு தகவல்-24: "ஆப்பிளின் 'ஐபேட்' (Apple's iPad)'"

'பெர்சனல் கம்ப்யூட்டர்' (Personal Computer), 'ஐபாட்' (iPod), 'ஐஃபோன்' (iPhone) என்று சாதனை மேல் சாதனை படைத்து , டிஜிட்டல் உலகில் கொடிகட்டிப் பறக்கும் ஆப்பிள் நிறுவனம் மற்றுமோர் சாதனை படைத்துள்ளது. இதன் புதிய சாதனை 'ஐபேட்' (iPad). மொபைல் ஃபோன், லேப்டாப் கம்ப்யூட்டர், மற்றும் -ரீடர் போன்ற பலவற்றையும் உள்ளடக்கியது 'ஐபேட்' . கிட்டத்தட்ட பத்து அங்குல திரை, மிகக் குறைந்த எடை, பத்து மணி நேரம் இயங்கும் பேட்டரி போன்ற பல சிறப்பு அம்சங்களைக் கொண்டது. இதில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் செயல்வசதிகள் இருக்கின்றன! இதன் தற்போதைய விலை ரூபாயில் இருபத்து நாலாயிரம் முதல் நாற்பத்து ஒன்றாயிரம் வரை. 16 ஜிபி முதல் 64 ஜிபி வரை நினைவுத்திறன் உள்ள பல மாடல்கள் உள்ளன. இது இந்தியாவிற்கு எப்போது வருமோ தெரியவில்லை.

மேலும் தகவல்கள் அறிய:

The best way to experience the Web, Email, Photos, Video

http://www.apple.com/ipad/features/


iPad lesson: Apple is in control
http://www.salon.com/tech/htww/2010/01/28/apple_is_in_control.html

நன்றி: ஆப்பிள் நிறுவனம் மற்றும் சலோன்.காம்.

1 கருத்து:

SURI சொன்னது…

நன்றி. சுபு!