3 பிப்., 2010

நலக்குறிப்புகள்-41: "கொசுக்களை ஒழிக்கும் கம்பூசியா மீன்கள்!"

தமிழகத்தில் சிக்குன்குன்யா, வைரஸ் காய்ச்சல் என பலதரப்பட்ட நோய்கள் பரவ, காரணமாக இருந்துவரும் கொசுக்களை அழிக்க சுருள், மேட், திரவம், கிரீம் என பலவகையான கொசுவிரட்டிகளை மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனாலும் கொசுக்கள் ஒழிந்தபாடில்லை.

இந்நிலையை மாற்ற, சுகாதாரத்துறையினர் 'கம்பூசியா' என்ற மீனை அறிமுகப்படுத்தினர். கடல் அல்லாத நீரில் மட்டுமே வளரும் இந்த மீன்கள், மிகச்சிறிய உருவம் கொண்டவை. இவற்றை வீடுகளில் தண்ணீர் தேங்கும் தொட்டிகள், கிணறு, குட்டிகள், குளங்களில் விட்டால் அங்குள்ள கொசுக்களை உணவாக உட்கொள்ளும்.

இதனால், கொசு உற்பத்தி தடுக்கப்படுகிறது. இது உபயோகப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொசுத்தொல்லை குறைந்து வருவதால் இம்மீன்களுக்கு தற்போது புது மவுசு ஏற்பட்டுள்ளது. ஓரிரு ரூபாய் மட்டுமே செலவாகும் என்பதால் மக்கள் இவற்றை வாங்கத் துவங்கி உள்ளனர். மற்ற மீன்களைப் போல் அல்லாமல் பிறக்கும்போதே குஞ்சாக வெளிவரும் இந்த மீன் ரகம், அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்டவை. கண்ட கண்ட ஆபத்தான இரசாயனப் பொருட்களை வங்கி, உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளாமல், அனைவரும் இந்த மீன்களை வாங்கிப் பயன்படுத்தி கொசுத்தொல்லையைக் குறைக்கலாம். அரசும் இந்த மீன்கள் அனைவருக்கும் எளிதாகக் கிடைக்க வழி செய்யவேண்டும்.

தகவல்: தினமலர், 3.2.2010
நன்றி: தினமலர், நாளிதழ்.

கருத்துகள் இல்லை: