எல்லாம் அவனுடைமை; எல்லாம் அவனாணை;
எல்லாம் அவன்; பொதுவென்றெண்.
தோன்றும் உலகெல்லாம் அவனது சக்தி விரிவே. நிலமின்றிப் பயிரில்லை. கதிரவிநின்றிக் கதிர்களும், ஒளியும், பகலும், உலக வாழ்வும் இல்லை. அதுபோல இறைவநின்றி எதுவுமில்லை. ஆதாரம், ஆதேயம் எல்லாம் அவனே. ஆதலால் ஆராய்ந்து பார்த்தால் எல்லாப் பொருட்களும் அவனுடைமையே. அவனே உடையான். தோன்றும் உலகும் தோன்றா உலகும் நடப்பது அவனது ஆணையான பராசக்தியாலேதான். அவனது இச்சா கிரியா ஞான சக்தியினால்தான் எண்ணரிய உலகங்கள் நடக்கின்றன. எல்லாம் அவனே. உருப்போருட்களுட் கருப்பொருளாய் இருப்பவன், உடல்களில் உயிராகவும், உயிர்களில் உயிர்க்குயிரான சுத்தான்மாவாகவும் நிறைந்தவன் அவனே. இயற்கை உலகம் ஒரு மின்பொறி. இறைவனருள் மின்சாரம். அப்போரி எத்தனை கோடி வியன்களைச் செய்தாலும் எல்லாம் அந்த மின்வன்மையாலஅல்லவோ? எல்லாம் அருளால் ஆக்கி, அளித்து, மாற்றிப் புதுக்கும் இறைவன் அனைத்திற்கும் பொதுவாக எங்கும் நிறைந்திருக்கிறான். அவனை எண்ணுக. தியானஞ் செய்க. தியானத்தால் அவனை உள்ளே உணரலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக