காற்றைக் கனலைக் கதிரைக் கடலுலகைத்
தோற்றினான் அன்பர் துணை.
அன்பருக்குத் தோன்றியும், மறைந்தும் துணை புரிகிறான் பரமன். உயிர்க்குலமேல்லாம் அவனது அருட்குலம், அன்புச் சேய்கள். அவன் தந்தை. அவனது சக்தி தாய். ஞாயிறின் கதிர்கள் போன்று அவனிடமிருந்து அருட்கதிர்கள் விரிகின்றன. அக்கதிர்கள் நுட்பமான ஆகாயமாகப் பரிணமிக்கின்றன. அதில் எண்ணரிய பரமாணுக்கள் சுழல்கின்றன. அவற்றின் வேகத்தால் தீயும், தீயின் வேகத்தால் நீரும், நீரின் வேகத்தால் மண்ணும், மண்ணின் இயல்பால் பயிர்களும் தழைக்கின்றன. இவ்வாறு எல்லாம் வல்ல ஒரு சக்தியிறைவன் சந்நிதிக்கே அனைத்தும் இயல்பாக உண்டாகின்றன. ... உயிர்க்கக் காற்றையும், உயிர் இயங்கும் சக்திக்கனளையும், ஒளியும், மழையும் அளித்து உலகைப் பேணும் கதிரவனையும், மழை மேகங்களுக்குப் பிறப்பிடமான கடலையும் , இவை அனைத்தாலும் உயிர் வளமும் பயிர் வளமும் பெற்றுச் செழிக்கும் உலகையும் சக்தியிறைவன் தனது அருளினின்று தோன்றச் செய்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக