27 ஜூன், 2010

யோக சித்தி-35: இயற்கை-1

இயற்கையின்  புத்தகமே  இன்பாக  நோக்கிற்
பயக்கும்  அறிவுப்  பழம். 

கான், மலை, ஆறு, கடல், வான், கதிர், மதி, மீன், காலை மாலை வனப்பு, தென்றல், மலர், உயிரினங்கள் இவையெல்லாம் நம்முன் விளங்கும் இயற்கையான  புத்தகங்கள்.  இவற்றுடன் மனமொன்றி உள்ளுறவு பேணவேண்டும்.  இவற்றின் புத்தகத்தை (புதிய உள்ளத்தை) களிப்புடன், பரவசமுடன் ஆராய்ந்து  பார்க்கவேண்டும்.  அவ்வாறு இயற்கையின் மாசற்ற உள்ளத்துடன் ஒன்றிய ஆராய்ச்சி, நமக்கு அறிவென்னும் கனியைத் தரும். 

கருத்துகள் இல்லை: