கொலைபுலை, கூத்தி, குடிகளவு சூதாம்
வலுத்த நரக வழி.
மனித வாழ்வைத் துன்பகரமாகக வழியாவன ஆறு இழிநடைகள்:
1. கொலை: உயிர்க்கொலை கூடாது. சீவனைச் சிவமயமாகக் கருதவேண்டும். அஹிம்சா விரதமே அரிய பெரிய தருமமாகும்.
2. புலை: புலாலுண்ணல், கொன்றதைத் தின்று உண்ணல், உடலை வளர்க்கப் போதுமான தாவரப் பொருள் இருக்கையில், பிற உயிர்களைக் கொன்று அவற்றின் ஊனை உண்ணல் எவ்வளவு கொடுமை!
3. கூத்தி: வேசையுறவு, விபச்சாரம். தருமபத்திநியுடன் கூட இல்லறம் நடத்த வேண்டும். வேசை என்னும் மாசு உலகிற் படராதொழியவேண்டும்.
4. குடி: தென்னங்கள்: ஈச்சங்கள், திராட்சைக்கள், விஸ்கி, பிராந்தி, தேயிலை, காப்பி, சுருட்டு முதலிய மயக்கப் பொருட்கள் நரம்பைத் தளர்த்தும். மனத் திட்பத்தைக் கெடுக்கும். பிணி பல செய்யும்.
5. களவு: மனத்தை, வாழ்வை, மானத்தைக் கெடுக்கும் கொடிய பாவம் களவு. பிறருக்குரியதை தன்னலத்துடன் அபகரித்தல் களவாகும்.
6. சூது: சகுனிவலை; சீட்டு, பகடை, உழக்குருட்டல், குதிரைப்பந்தயம், வீண் போதுபோக்கல் எல்லாம் சூதாட்டமே. வீண் போதுபோக்கல் காலத்தைச் சூதாடலாகும். பொய்வாய்ச் சூதாகும். சீருஞ் செல்வமும், பண்பும், பரிசும் சூதால் கெடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக