கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்
எல்லையில் மறைகளாலும் இயம்பரும் பொருள் ஈதென்னத்
தொல்லையில் ஒன்றேயா கித் துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்
பல்பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல் பரந்ததன்றே.
மலையில் தோன்றி ஓடிக் கடலிற் கலந்த ஆற்று வெள்ளம், வேதங்களாலும் அளவிட்டு உரைக்க முடியாத பரம்பொருளைப் போல் ஆதி தொடக்கம் ஒன்றே ஆனது. பின்னர்ச் சமயங்களினால் மாறுபட்ட தெய்வம் போல், தான் செல்லும் பல இடங்களிலும் பல வகையில் பரவி (ஏரி, குளம், வாய்க்கால், ஓடை எனப் பல பெயர் பெற்று) நின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக