உணவில் பழங்களையும், பழச்சாருகளையும் சேர்த்துக் கொள்வது நல்லது. இதனால் சருமம் மென்மையும், பொலிவும் பெற்றுத் திகழும். சதைகளின் சுருங்கி விரியும் தன்மை இயல்பாகிறது. உடல் நன்றாக வளைந்து கொடுக்கும். குரல் இனிமை பெரும். உடல் சூட்டைக் குறைக்கும். மலச்சிக்கலை அகற்றும்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, நாம் சாப்பிடும் பழம் நமக்கு ஒத்துக் கொள்கிறதா என்பது. ஒவ்வாமை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையாக இருக்கும். குறிப்பிட்ட நோய்க்கு ஆட்படும் தன்மை கொண்டவர்களுக்கு சில பழங்கள் ஏற்றுக் கொள்ளாது. அதையும் நாம் அறிந்து கொள்ளுதல் நலம். அடுத்து, தற்போது விற்கப்படும் பழங்களில் பூச்சி மருந்து தோய்ந்திருப்பதால் அவற்றால் நன்மைக்குப் பதிலாக தீமையே மேலிடுகிறது. இயற்கை விவசாய முறையில் பயிரடப்பட்டுக் கிடைக்கும் பழங்கள் மிகச் சிறந்தவை. மற்றொரு விஷயம், உலகில் எல்லாவற்றிலும் நன்மையையும், தீமையும் கலந்தே இருக்கின்றது. எனவே, எதையும் அளவோடு, முறையோடு உண்ணவேண்டும். முரணான குணம் கொண்ட பழங்களை அடுத்தடுத்து உண்ணக் கூடாது. எனவேதான் பொதுவாக, ஒரு நேரத்திற்கு ஒரு பழம் என்று பரிந்துரைக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக