உலக குடும்ப நாள் (Global Family Day) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதலாம் நாள் கொண்டாடப்படுகின்றது.
அமெரிக்க மக்கள் இதை அமைதிக்கும், பகிர்தலுக்கும் ஏற்ற நாளாகக் கொண்டாடுகின்றனர்.
அமெரிக்காவில் லிண்டா குரோவரால் முன்னெடுக்கப்பட்ட அமைதியான குடும்பம் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில், பின்னர் ஐக்கிய நாடுகள் சபையால் மில்லென்னிய இலக்காக பரவலாக்கப்பட்டது.
1996ல் வெளியான ஸ்டீவ் டயமண்ட் மற்றும் ராபர்ட் ஆலன் சில்வர்ஸ்டெய்ன் எழுதிய "அமைதியான ஒருநாள், ஜனவரி முதல்நாள்" என்ற குழந்தைகளுக்கான நூல் இதை வலியுறுத்தியது. இந்த நூல் 22 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
லிண்டா குரோவரும் தொடர்ந்து மரத்தீவு என்ற கற்பனை உலகைக் கொண்ட ஒரு புனைவை உருவாக்கினார்.
அமைதியான, ஆனந்தமான குடும்பமே லட்சிய உலகின் அடிப்படையாக இருக்கவேண்டும்.
உலக குடும்ப நாள் வாழ்த்துக்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக