18 செப்., 2019

சுற்றுச்சூழல்-69: "காவேரி கூக்குரல்" இயக்கத்தினால் என்னென்ன நன்மைகள் நிகழும்?



காவேரி கூக்குரல்" இயக்கத்தினால் 
என்னென்ன நன்மைகள் நிகழும்?

1. தமிழகத்தில் பசுமைப் போர்வை பெரிய அளவில் அதிகரிக்கும்.

2. மரங்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கும்.

3. மரங்கள் அதிகமாவதால் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்.

4. மரங்கள் பெருகுவதால் மழை அளவு அதிகரிக்கும்.

5. மரங்கள் அதிகரிப்பதால் "பறவைகள்" சரணாலயம் அதிகரிக்கும்.

6. பறவைகள் பெருகுவதால் இயற்கையாகவே பல மரங்களின் விதைகள் 
பல இடங்களில் இயற்கையாகவே தரமாக விதைக்கப்படும்.

7. ஒரு மரம் என்றால் கிளைகள், இலைகள் மட்டுமல்ல.  அது 
பல வித உயிரினங்கள் வாழும் கூடாரம்.  புழுக்கள், பூச்சிக்கள், 
வண்டுகள், ஊர்வன, அணில், எலி போன்ற சிறு விலங்குகள், 
பல விதமான பறவைகள் வாழக்கூடிய இடம்.

8. காடுகள் பெருகும் போது ஆடு, மாடுகளுக்கு தேவையான உணவு 
அதிகரிக்கும். கால்நடைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். 
அவைகளின் சாணம் நல்ல உரமாக மாறும்.

9. உரங்களில் வாழும்  புழுக்கள், சிறுபூச்சிகள், வண்டுகள் தான் 
பெரும்பாலும் இலைகளை மக்கச் செய்து மண்ணை வளப்படுத்துகின்றன.

10. மண் வளம் பெற்றால் தாவரங்கள் செழித்து வளரும். மழைநீரை 
தேக்கி பிடித்து வைத்துக் கொள்ளும். மண் செழிப்பாக இருந்தால் 
ஈரத்தன்மை இருக்கும். ஈரத்தன்மை மரங்கள் வளர உதவி செய்யும்.

11. மண்,  வளம் பெற்றால் சிறு மழை பெய்தாலும் தேவையான நீரை 
பிடித்து வைத்து மீதமுள்ள நீரை வெளியேற்றும். இது ஆற்றில் 
எப்போதுமே நீர் வரத்தை உறுதி செய்யும்.

12. காவேரியில் நீர் தூய்மையாக இருக்கும். ஆற்று உயிரினங்கள் 
பெருகும். இதனால் மீன் வளம் அதிகரிக்கும்.

13. பூச்சி மருந்து விவசாயம் ஒழிந்து இயற்கை விவசாயம் வளரும்

14. நாம் உண்ணும் உணவு விஷமாக இல்லாமல், ஆரோக்கியமான 
உணவாக இருக்கும்.

15. பருவ மழை பொய்த்தாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. நல்ல 
குடிநீர் எப்போதுமே கிடைக்கும்.

16. முக்கியமாக நம் குழந்தைகள் எதிர்காலத்தில் குழாயடியில் 
சண்டை போடமாட்டார்கள். அவர்களுக்கு ஒரு ஆரோக்கியமான 
சமூகத்தைக் கொடுப்பது நம் கடமை.

17. ஆற்றில் எப்போதுமே தண்ணீர் போனால் அங்கே மணல் 
அள்ளுவதற்கு வாய்ப்பே இல்லை. மணல் கொள்ளை தடுக்கப்படும்.

18. விவசாய மக்களின் வருமானம் பெருகும். விவசாயிகள் தற்கொலை 
தடுக்கப்படும். படித்த இளைஞர்கள் விவசாயத்தில் இறங்குவார்கள். 
பல புதிய கண்டுபிடிப்புகள் நிகழும்.

19. காவேரி நதி கட்டாயம் கடலினை சேர வேண்டும். அப்படிச்  
சேரவில்லை என்றால் சில ஆண்டுகளில் கடல் நீர் நிலத்தில் நுழைந்து, 
நிலத்தடி நீர் உப்பாகி விடும். கடலோர நிலங்கள் பாதுகாக்கப்படும்.

20. இந்த காவேரி கூக்குரலில் கட்டாயம் ஆண்டு முழுவதும் காவேரி 
நீர் கடலில் கலக்கும். இதனால் பல கடல் மீன்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும்.

21. கடலோர மக்களின் நிலத்தடி நீர் அதிகரிக்கும். அவர்களின் குடிநீர் 
தேவை பூர்த்தியாகும்.

22. பல்லூயிர் பெருக்கம் நம் இயற்கையை காப்பாற்றும். காவேரி 
தொட்டுச் செல்லும் பல ஆயிரம் கிராமங்கள் புன்னகையால் பூத்துக்  
குலுங்கும்.

நதிக்கரையில் தான் நாகரிகம் தோன்றியதாக படித்திருக்கிறோம். 
நதிகள் அழிந்தால் நாம் நம் நாகரிகத்தை அழிக்கின்றோம்.

 நாகரிகம் அழிந்தால் மீண்டும் நாம்  காட்டுவாசிகள் தான்.

10000 வருடங்களாக விவசாயம் செய்து வரும் ஒரே இனம் நம் தமிழ் 
இனம். கடந்த 100 ஆண்டுகளில் அதனை அழிக்க முயல்வது அபத்தம்.

நம் தமிழ் சமூகம் நம் நாகரிகத்தின் அடையாளத்தை, நதியின் மதிப்பை 
இந்த உலகத்திற்கு உரக்கச் சொல்வதில் முன்னோடியாக இருப்போம். 
வாருங்கள் கரம் கோர்ப்போம்.

#காவேரிகூக்குரல்

கருத்துகள் இல்லை: