கொள்ளு உண்பதால் கிடைக்கும் 8 அசத்தலான ஆரோக்கிய நன்மைகள்
கொள்ளில் அடங்கியுள்ள சத்துக்கள்
கொள்ளில் கால்சியம், மெக்னீசியம், புரதம், இரும்புசத்து, மாவுசத்து, நார்ச்சத்து, பாஸ்போரோஸ், பொட்டாசியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.
1. உடல் எடை குறையும்
ஆயுர்வேதம் சொல்வது என்னவென்றால் தினமும் கொள்ளினை உணவில் சேர்த்து வருபவர்களின் உடலில் தேங்கியுள்ள கொழுப்புகள் அனைத்தும் கரையும்.
தினமும் சிறுதளவு கொள்ளினை ஊறவைத்து வெறும் வயிற்றில் உண்டு வந்தால் உங்களின் உடல் எடை விரைவில் குறியும் மேலும் உங்களுக்கு கட்டுடல் கிடைக்கும்.
2. ஆரோக்கியமான இதயம்
உங்கள் உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளே உங்களின் இருதய கோளாறு, இரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளை கொண்டு வரும். தினமும் நீங்கள் கொள்ளினை உண்டு வந்தால் உங்கள் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைக்கப்பட்டு உங்களின் இருதய ஆரோக்கியம் மேம்படும்.
3. மலசிக்கல்
மலசிக்கல் பிரச்சினை ஏற்பட முக்கிய காரணமாக அமைவது நார்ச்சத்து குறைபாடு ஆகும். கொள்ளில் தேவையான அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் அதனை தினமும் உண்டு வரும்பொழுது உங்களுக்கு மலசிக்கல் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.
4. இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்
இயற்கையாகவே கொள்ளுக்கு இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கும் சக்தி உண்டு. இதில் நிறைந்துள்ள அதிக அளவு நார்ச்சத்து உங்களின் இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கும். மேலும் உங்களுக்கு நீரிழிவு போன்ற நோய் ஏற்படாமல் காக்கும்.
5. சிறுநீரக கற்கள் வராமல் காக்கும்
கொள்ளில் பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிக அளவில் நிறைந்துள்ளது. இவை உங்களுக்கு சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்கும். கால்சியம் ஆக்சாலேட் என்பதே சிறுநீரக கற்கள் ஆகும். இதனை உடைக்கும் தன்மை கொள்ளுக்கு உண்டு.
6. மூல நோய்க்கு மிகவும் சிறந்தது
மூல நோய் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் சிறிதளவு கொள்ளினை ஊறவைத்து உண்டு வந்தால் உங்களுக்கு மூல நோய் விரைவில் குணமடையும். எனவே கொள்ளினை அடிக்கடி உண்டு வரவும்.
7. தசைகளின் வளர்ச்சி
கொள்ளில் அதிக அளவு உடலிற்கு தேவையான புரத சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்களின் தசைகளின் வலிமை அதிகரிக்கும் மேலும் உங்களுக்கு ஆரோக்கியமான தசைகள் கிடைக்கும்.
மேலும் இதில் அதிக அளவில் நிறைந்துள்ள கால்சியம் உங்களுக்கு வலிமையான எலும்புகளை அளிக்கும்.
8. ஆண்களின் விந்தணுக்களை அதிகரிக்கும்
கொள்ளுக்கு இயற்கையாகவே ஆண்களின் விந்தணுவினை அதிகரிக்கும் சக்தி உண்டு. தினமும் சிறிதளவு கொள்ளினை உண்டு வருபவர்களுக்கு விந்தணு குறைபாடு, பிரச்சினைகள் ஏற்படாது.
இத்தனை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கொள்ளினை தினமும் உண்டு வாருங்கள்.
கொள்ளினை தேவைக்கு அதிகமாக உண்டு வந்தால் உங்களுக்கு உடல் சூடு போன்ற பிரச்சினை ஏற்படும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள்;. எனவே கொள்ளினை அளவோடு உண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக