26 பிப்., 2020

உங்கள் கவனத்திற்கு

ராணிப்பேட்டையில் வரும் 29ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 29ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் இணைந்து படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலை பெறும் நோக்கில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 29.02. 2020 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆற்காடு எஸ்.எஸ்.எஸ் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இம்முகாமில் தனியார் நிறுவனங்களான TVS groups, Hyundai steels, Saint- Gobain, Apollo Hospitals & Pharmacy, Overseas manpower corporation limited (தமிழ்நாடு அரசு நிறுவனம்) MM Forgings, Nippon Steels போன்ற 100க்கும் மேற்பட்ட தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான தகுதியான நபர்களைத் தேர்வு செய்து பணி நியமனம் செய்ய உள்ளனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8ம்வகுப்பு தேர்ச்சி முதல் SSLC, HSC, ITI, Diploma, Nursing, Any Degree BE, MBA உள்ளிட்ட கல்வித் தகுதிகளை உடைய வேலைநாடுநர்கள், கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வேலையினை தங்கள் அளவிலேயே தேர்வு செய்து பயன்பெறலாம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து புதுப்பித்துள்ள பொது மற்றும் ஓராண்டிற்கு மேல் உயிர்பதிவேட்டில் உள்ள மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பங்கள் இம்முகாமில் வழங்கிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ள பதிவுதாரர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் அசல் கல்வி சான்றிதழ்களை சமர்பித்து விண்ணப்பத்தினை பெற்று பயன்பெறலாம். விருப்பமும் தகுதியும் உள்ள வேலைநாடுநர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் தற்குறிப்பு(Resume) மற்றும் அனைத்து கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம். இவ்வாறு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: