25 பிப்., 2020

ஆன்மீக சிந்தனை

*அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்*

❓ *கேள்வி: சுவாமிஜி, மனித அறிவில் தோன்றும் குறைபாடுகள் யாது?*

✅ *பதில்:* மனிதன் நான்கு விதக் குறைபாடுகளால் துன்பமடைகிறான்; அமைதியிழந்து அல்லலுறுகிறான். அவையாவன;

1. கடவுளைத் தேடிக்கொண்டேயிருந்தும் காணமுடியாத குறை

2. வறுமை என்னும் பற்றாக்குறை.

3. விளைவறியாமலோ, விளைவையறிந்தும் அலட்சியம் செய்தோ, அவமதித்தோ, செயலாற்றி அதன் பயனாகத் துன்பம் அனுபவிக்கும் குறை.

4. மனிதனின் சிறப்பு அறியாமல் பிறர் மீது அச்சமும், பகையும் கொண்டு துன்புறுத்தியும், துன்புற்றும் அல்லலுறும் குறை.

இந்த நான்கு குறைபாடுகள் ஒன்றோடொன்று இணைந்து விட்டன. வாழ்க்கையில் பலவிதமான சிக்கல்களாகி அவற்றை எளிதில் தீர்த்து விடுதலை பெறமுடியாமல்..... வழிகாணாமல்...... மனிதன் தவிக்கிறான். வாழ்வின் நலமிழந்து தான் வருந்தியும், பிறரை வருத்தியும் வாழ்கிறான்.

வாழ்க வளமுடன்!!

*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*

Grateful thanks to K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

கருத்துகள் இல்லை: