*ஆவீன மழை பொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளக்
கோவேந்தருழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்,
பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப்
பாவி மகன் படுந்துயர் பார்க்கொணாதே*
- விவேக சிந்தாமணி (77) எண்சீரடி ஆசிரிய விருத்தம்.
பசு கன்றைப் பெற, மழை விடாது பெய்ய, வீடு இடிந்து விழ, மனைவி பிரசவ வேதனைப்பட, வேலையாள் இறந்துவிட, ஈரங்காய்ந்து விடுகிறதென்று வயலில் விதைக்க விதை எடுத்து கொண்டு ஓட, கடன்காரர் மறித்துக் கொள்ள, அந்தச் சமயத்தில் வேளாண்மை செய்து சாப்பிட்ட பூமிகளின் தீர்வையைத் தரும்படியாக அரசர் கேட்க, அதேநேரம் குருக்களானவரும் குறுக்கே வந்து நின்று தட்சணை கேட்க, கவிகளைப்பாடி வித்துவான்கள் சன்மானஞ் செய்யும்படி வினவ, பாவிமகன் அடையும் துன்பம் பார்க்கச் சகிக்க இயலாது.
அடக்கடுக்காய் துன்பங்கள்.
என் நெஞ்சைத் தொட்ட கவிதை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக