30 ஜூன், 2020

ஆன்மீக ஞானிகள் : வள்ளலார்


வள்ளலார் வாழ்க்கை வரலாறு

44,469 views•Jun 3, 2020
Adiguru ஆதிகுரு
66.8K subscribers

இராமலிங்க அடிகளார் திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்புப்பெயர் பெற்றவர். இவர் கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தார். பெற்றோர்இராமையா - சின்னம்மையார்.

ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம் ஆகிய நூல்கள் இவர் எழுதியவை. இவர் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் இவரே. இவர் அனைத்து மத நல்லிணக்கத்திற்காக  சன்மார்க்க சங்கத்தையும், பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும் அமைத்தவர். அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது. வடலூர் சத்திய தருமச்சாலையில் பசியால் வாடும் மக்களுக்குச் சோறிட இவர் அன்று மூட்டிய அடுப்பு இன்றும் அணையாமல் தொடர்ந்து பசிப்பிணி தீர்த்து வருகிறது. இவர் வாழ்ந்த காலம் 05.10.1823 முதல் 30.01.1874 வரை ஆகும்.

நன்றி: ஆதிகுரு மற்றும் யூடியூப்.  

கருத்துகள் இல்லை: