SPB சார் இருக்கும் போது ராயல்டி நோட்டீஸ் அனுப்பிவிட்டு ,இப்பொழுது நாடகம் ஆடுகிறார் இளையராஜா : சிலர் ..
சிம்பிள் ! பிரச்சனை எப்படி ஆரம்பித்தது என்றால் ..
சில ஆண்டுகள் முன் டைரக்டர் சுந்தர்ராஜன் தன் திரை உலக நண்பருக்கு போன் செய்கிறார் ..
காலர் tune வந்த புதுசு , அடே பாட்டு எல்லாம் வெச்சு அசத்துரியே பா என்று சொல்ல ..
சரி நாமும் நம் பட பாடலை " மெல்ல திறந்தது கதவு" பாட்டை வைக்கலாம் என்று முடிவு செய்து நெட்ஒர்க் ப்ரொவிடரை தொடர்பு கொண்டால் ,மாதத்திற்கு 50 ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிய வர ...
நாம் உருவாக்கிய பாட்டை நாமே காசு கொடுத்து வாங்குவதா ? நம் பாட்டை இன்று எவனோ தன் தளத்தில் விற்று காசு பார்த்து கொண்டு இருக்கிறான் ..
ஒருவரிடம் மாதம் 50 ரூபாய் என்றால் ,கோடிகணக்கான நபர்களிடம் இருந்து ?
இதனை உடனே ராஜா அவர்களிடம் இவர் சொல்ல ..
அதிர்ந்த ராஜா சார் ,வக்கீல் மூலமாக மேற்கொண்ட முயற்சிகளே தன் பாடல்களுக்கு கேட்ட ராயல்டி ..
பிற இசை அமைப்பாளர்கள் பலர் என்றோ இதனை செய்து விட்டார்கள் ..
குறிப்பு : இன்று வரும் பாடல்கள் அதற்கான உரிமை பெற்றே பொது தளங்களில் வருகிறது ..
You tube இல் வரும் official பாடல்களை நீங்கள் டவுன்லோட் செய்து FB யில் போஸ்ட் செய்து பாருங்கள் அடுத்த விநாடி அந்த பாடல் நீக்கப்பட்டு இருக்கும் .லிங்க் மட்டுமே பகிர சாத்தியம் ..
ஏதோ கிராமங்களிலும் / சிறு ஊர்களின் கல்யாண கோவில் விசேஷங்களிலும் தன் பாடல்களை மேடைகளில் பாடி பிழைப்பு நடத்தும் ஜீவன்களிடம் அவர் ராயல்டி கோரவில்லை ...
ஒரு டிக்கெட் 500 இல் ஆரம்பித்து 50,000 வரை விற்று நடக்கும் கச்சேரிகளில் தான் பாடப்படும் அவரின் பாடல்களுக்கு அதுவும் 1% கீழ் தான் கேட்டு உள்ளார் ..
அதுவும் நலிந்த இசை கலைஞர்களுக்கு ஒரு பகுதி நிதி செல்லும் வகையில் ...
இந்த நிலையில் SPB அவர்களின் வேர்ல்ட் tour ஆரம்பிக்கறது ,கோடிகளில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள் ..
நண்பர்களுக்குள் மன கசப்பு ,என்னிடமே ராயல்டி கேட்கிறாயா என்று ..
பின் நடந்தது ஊர் அறியும் ...
சில நாட்களில் நண்பர்கள் இருவரும் நடந்த கருத்து வேறுபாடுகள் மறந்து ,நட்பை போற்றி மீண்டும் மேடைகளில் இணைகிறார்கள் ..
2019 ஜூன் இல் அப்படி ஒரு கச்சேரியை கோவையில் நேரில் பார்த்தபோது ,அவர்கள் மேடையில் சொன்னது "நண்பர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு பேசி தீர்த்து விட்டோம் இல்லடா?" என்று உரிமையாக
தொழில் சார்ந்த விஷயங்களில், கூட பிறந்தவர்கள் கிட்டயே பிரச்சனை வரும் போது , நண்பர்களுக்குள் ?
வெளியே இருந்து பார்க்கும் நமக்கு என்ன தெரியும் அவர்கள் நட்பு பற்றி ?
மருத்துவமனையில் கவலைக்கிடம் என்று வதந்தி வந்ததும் "சீக்கிரம் எழுந்து வா பாலு நான் காத்து கொண்டு இருக்கிறேன்" என்று பேசி முதல் வீடியோ விட்டு பாலுவிடம் இதனை காட்டுங்கள் என்று சொன்னது ராஜாசார் தான் ..
இப்போ இவர் தீபம் ஏற்றி யாருக்கு தன்னுடைய நிலையை புரிய வைக்க வேண்டும்?
Ilayaraja sir is beyond that ...
அவர் திமிர் பிடித்தவர் யாரையும் மதிக்க மாட்டார் என்று ஒரு கூற்று ..
அது அவருக்கு அவரே போட்டுக்கொண்ட வேலி ..
அதனால் தான் இன்றும் அவர் "ராஜா "..
கொஞ்சம் தாண்டினாலும் மது / மாது / சூது நிறைந்த சினிமா உலகத்தில் கடித்து கொதறிவிடுவார்கள்
என்று அவருக்கு நன்கு தெரியும் ..
அவரது ஆன்மிக தேடலும் அவருக்கு அரணாக அமைந்தது..
இதற்கு சிறந்த உதாரணம் கங்கை அமரனின் வாழ்கை முறை ..
அதனால் தான் தன் தம்பியிடமே ஒதுங்கி இருந்தார் ..
அவரின் கர்மா இன்று இளைய மகன் யுவன் மூலம் சில சங்கடங்களை சந்திக்கிறார் ..
இன்று சில பதிவுகள் கமெண்ட் எல்லாம் பார்க்கும் போது ,அஜித் அவர்களின் வசனம் தான் ஞாபகம் வருகிறது ..
" ஒருத்தரிடம் உங்கள் விஸ்வாசத்தை காட்ட ,இன்னொருவரை கொச்சை படுத்தாதீர்கள் "
இருவரும் தங்கள் தனி தன்மையில் உச்சத்தை அடைந்தவர்கள் ..
Lets not Degrade the Legends,
Lets Celebrate them..❤️
நண்பர் Premnath OM VainavShaiva அவர்களின் பதிவு.
நன்றி :
திரு.Premnath OM VainavShaiva
மற்றும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக