29 டிச., 2020

நூல்மயம் : அமரர் தொ.மு.ப. அவர்களின் ஆய்வு நூல்கள்

டிசம்பர் 24, 2020
வியாழன், இரவு 9.00

சற்றுமுன் நாட்டார் பண்பாட்டு மானிடவியல் ஆய்வாளர் தொ.பரமசிவன் ஐயா நெல்லையில் இயற்கை எய்தினார்.

பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழகத்தின் மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக வெகுசன மக்கள் எளிதாக புரிந்து கொள்ளுமாறு எடுத்துரைத்து வந்தவர். பல்லாண்டு கால வரலாறு முதல் சமகால பன்னாட்டு ஒப்பந்தங்கள் வரை ஒப்பிட்டு சிறப்பான ஆய்வை நமது மக்களுக்காக முன்வைத்து வந்தவர்.

அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைத்து வந்தவர்.

இவரின் நூல்கள்:-

1.மானுட வாசிப்பு - தடாகம் வெளியீடு
(நேர்காணல்)

2.இந்து தேசியம் - கலப்பை வெளியீடு

3. உரைகல் - கலப்பை வெளியீடு

4. செவ்வி - கலப்பை வெளியீடு

5. விடுபூக்கள் - மணி பதிப்பகம்.

6. சமயம் ஓர் உரையாடல் - அன்னம், அகரம்‌ வெளியீடு

7.பாளையங்கோட்டை - காலச்சுவடு

8.தொ.பரமசிவன் நேர்காணல்கள் - காலச்சுவடு

9. இதுவே சனநாயகம் - காலச்சுவடு

10.பண்பாட்டு அசைவுகள் - காலச்சுவடு பதிப்பகம்

11.மரபும் புதுமையும் - காலச்சுவடு

12.தெய்வம் என்பதோர் - காலச்சுவடு

13.மஞ்சள் மகிமை - காலச்சுவடு

14. அழகர் கோயில் - மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடு. (அழகர் கோயில் குறித்த இவரது முனைவர் பட்ட ஆய்வேடு; கோயிலாய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்கிறது)

பதிப்பில் இல்லாத ஐயாவின் புத்தகங்கள்:-

1.பரண்

2.வழித்தடங்கள் - கலப்பை

3..சமயங்களின் அரசியல்- வானவில் பதிப்பகம்.

4.அறியப்படாத தமிழகம்(1997) - ஜெயா பதிப்பகம்.

5.தெய்வங்களும் சமூக மரபுகளும்(1995) - நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்.
இன்னும் இந்தப் பட்டியலில் ஏதேனும் விடுபட்டுப் போனால் நண்பர்கள் பகிரவும்.

நூல்கள் தொகுப்பு நன்றி இராமமூர்த்தி நாகராஜன் சகோ.

ஐயாவின் பல கட்டுரைகள் சில பதிப்பகத்தால் வெவ்வேறு தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது; அதைக்குறித்து தெளிவாக அறிந்து கொண்டு நூல்கள் பெற கீழேயுள்ள பதிவு உதவும்:-
https://m.facebook.com/story.php?story_fbid=927083641156937&id=100015659290793

சென்ற ஆண்டு சூழலியல் எழுத்தாளர் சு.தியோடர் பாஸ்கரன் அவர்களால் பல்லாண்டுகளாக எழுதப்பட்டு வெவ்வேறு தலைப்பில் புத்தகங்களாக வெளிவந்தவை அனைத்தும் தொகுக்கப்பட்டு "கையிலிருக்கும் பூமி" என்ற அழகிய நூலாக உயிர்மை பதிப்பகம் மூலம் வெளிவந்தது.

இதைப் போன்றே தொ.ப அவர்களின் அனைத்து எழுத்துக்களும் கட்டுரைகளும் ஓர் முழு விலையடக்க தொகுப்பாக தொகுக்கப்பட்டு விரைவில் அரசே அனைத்து மக்களுக்கும் சென்றடையுமாறு வெளியிட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.  இதுவே நமது பேராசனுக்கு செய்யும் மாபெரும் இறுதி அஞ்சலியாக இருக்கும். 

தோழர் பெரியார் நினைவு நாளன்று அவரது வழிவந்த தொ.பரமசிவம் ஐயாவும் இயற்கை எய்தியுள்ளார். எழுத்துக்கள் வாயிலாக அவர் நமக்கு விட்டுச் சென்ற கருத்துக்களை தலைமுறை கடந்து கடத்துவோம்.

#தொப
#அழகர்கோயில்
#பண்பாட்டுஅசைவுகள்

நன்றி :



கருத்துகள் இல்லை: