29 டிச., 2020

கருத்து மேடை : மருத்துவ குணம் கொண்ட பானத்தை வருடத்தில் ஒரு முறையாவது குடியுங்கள் !

மருத்துவ குணம் கொண்ட பானத்தை வருடத்தில் ஒரு முறையாவது குடியுங்கள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள்.... 🌳 🌳 
#ஒரு மரத்துக் #பனங்கள் குடித்தால்
அடி மரமாய் உடம்பு வரும் !
#பனை மரத்துக் #கள் குடித்தால்
கட வெலும்பும் இரும்பாகும் !

கள் நமக்குச் சுகமளிக்கும் !
வெள்ளை ரத்தம் – அந்தக்
#கரும்பனையும், தென்னையும் நம்
கழனித் தெய்வம் !

#கள் குடித்துக் #கெட்டாரைக்
கேட்ட துண்டா?
கள் குடித்துச் #செத்தாரைப்
பார்த்த துண்டா?

#எலும்புறுக்கி நோய் தீரும்
தென்னங் #கள்ளால் !
எரிசூட்டு நோய் தீரும
#பனையின் கள்ளால் !

அதிகாலைக் #கள் கடித்தால்
அச்சம் போகும் !
அந்திக் #கள் குடித்தால்
ஆயுள் நீளும் !

#தாகம் எடுக்கையிலே
தமிழ்க்கிழவி அவ்வை
#கள்ளை அருந்தித்தான்
களிப்போடு வீற்றிருந்தாள் !

கடையேழு #வள்ளல்களும்
கவிஞர்கள் எல்லோர்க்கும்
#கள் விருந்து கொடுத்தன்றோ
கௌவரம் செய்தார்கள் !

வில்வேந்தர் வேல்வேந்தர்
வீரவாள் வேந்தர்
#கள்ளை அருந்தியன்றோ
கட்டுடம்பு வளர்த்தார்கள் !

#சித்தர்கள் நமக்குச்
சீதனமாய் கொடுத்த
முத்தனைய கள் வேண்டி
முழக்கம் செய்திடுவோம் !

விருந்தாகி #மருந்தாகி
விடிகாலை உணவாகி
#விவசாயி வாழ்க்கையிலே
வருமானம் வழங்குகிற
வரம் கொடுக்கும் தேவதைகள் !

அளவான #போதை
அளிக்கும் பொருளென்றால்
அருந்தலாம் என்று
அரசியல் சாசனமே
அதிகாரம் தருகிறது!

அளவான #போதை
அளிக்கின்ற #கள்ளை
ஏனருந்தக் கூடாது!
ஏனிறக்கக் கூடாது!

நன்றி :

கருத்துகள் இல்லை: