திருமந்திரம் - பாடல் #1013: நான்காம் தந்திரம் - 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)
நமவது வாசன மான பசுவே
சிவமது சித்திச் சிவமாம் பதியே
நமவற வாதி நாடுவது அன்றாஞ்
சிவமாகு மாமோனஞ் சேர்தல்மெய் வீடே.
விளக்கம்:
உயிர்களின் ஆன்மா தன் ஆசைகளினால் நான் எனும் அகங்கார மாயையோடு பல பிறவி எடுக்கிறது. ஆன்மாவின் தலைவனாகிய இறைவன் சிவமாக உயிர்களுக்குள் தாமாகவே மறைந்து இருக்கின்றான். சாதகர்கள் பாடல் #1003, #1004 மற்றும் #1005 இல் உள்ளபடி அருச்சினை செய்து நான் எனும் அகங்காரம் இல்லாமல் இறைவனை நாடும் போது அன்றே எண்ணங்களே அற்ற நிலையை பெற்று இறைவனோடு சேர்வதே உண்மையான வீடுபேறாகும்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக