22 மார்., 2021

ஆன்மீக சிந்தனைகள்

🌸🌻🌸🌻🌸🌻🌸
ஓம் மகத்தான அகத்தீசாய நமஹ!!

ஓம் அகஸ்திய பரமசித்தாய நமஹ!!!

நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே அதாவது இறைவனின் அம்சமே நமது உயிர். இவ்வாறு இருப்பின் ஒருவர் செல்வந்தராகவும், மற்றொருவர் ஏழையாகவும், ஒருவர் ஆரோக்கியமாகவும் மற்றொருவர் ஊணமாகவும், நோய் வாய்ப்பட்டும் இருப்பது ஏன்? நம் பிறப்பை , இறப்பை நிர்ணயிப்பது எது?

இதற்கு விடை நாம் இப்பிறப்பிற்கு முன் பற்பல பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களே தான்.

அவரவர் செய்த செயல்களே புண்ணியம் என்றும் பாவம் என்றும் இரு வினைகளாகி அதற்குரிய பலன்களை அவரவரே அனுபவிக்க செய்கிறது. இதுவே இறை நியதி.

எத்தனையோ பிறவிகளாக நாம் செய்த நல்வினை, தீவினைகள் இப்படி மூட்டை மூடையாக இருக்கிறது. ஆனால் இறைவன் நம் மீது இரக்கம் கொண்டு, கருணை கொண்டு அவ்வளவு வினைகளையும் நம்மிடம் தராமல் நல்வினை தீவினை இரண்டிலும் கொஞ்சமாக எடுத்து நம் உயிரோடு இணைத்து பிரார்த்துவ கர்மத்துடன் விதிக்கப்பட்ட கர்மத்துடன் நம்மை மனிதனாக இப்பூவுலகில் பிறப்பிக்க செய்துள்ளார். பிறப்பின் ரகசியம் இது.
இப்பிரார்த்துவ வினைகள் போக மீதம் உள்ளது சஞ்சிதம் (சஞ்சித கர்மம்) எனப்படும்.

பிராரத்துவ வினைகளோடு பிறந்த மனிதன் புரியும் கர்மங்கள் ஆகாமியம் எனப்படும். பிராரத்துவம் – விதி-ஆகமியத்தொடு சேர்ந்து வினை கூடவோ குறையவோ , அதாவது புண்ணியம் செய்து நல்வினை கூடலாம், அல்லது பாவம் செய்து தீவினை கூடலாம். இப்படி எதாவது செய்து எதையாவது பெற்று அந்த வினைகளோடு மரிக்கிறான்.

ஒவ்வொரு மனிதனும் செத்து உடன் கொண்டு போவது அவனவன் செய்த வினை பயன்கள் மட்டுமே.

ஆதலின் சத்தியம், தர்மம், பரோபகார சிந்தனை, நல்லொழுக்கம், மேலும் நற்பண்புகளை வளர்த்துக் கொள்வோமாக!!!

🌸🌻🌸🌻🌸🙌🙌

கருத்துகள் இல்லை: