21 மார்., 2021

இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #1056: நான்காம் தந்திரம் - 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

பராசத்தி மாசத்தி பல்வகை யாலும்
தராசத்தி யாய்நின்ற தன்மை யுணராய்
உராசத்தி ஊழிகள் தோறும் உடனே
புராசத்தி புண்ணிய மாகிய போகமே.

விளக்கம்:

பாடல் #1054 இல் உள்ளபடி ஞானத்தின் மொத்த வடிவாக இருக்கும் பராசக்தியானவள் மாபெரும் சக்தியாக பலவகைகளிலும் உயிர்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் அந்தந்த செயல்களுக்கு ஏற்ற சக்தியாக நின்று அருளுகின்றாள். பராசக்தியின் இந்த தன்மையை உயிர்கள் உணராமல் இருக்கின்றார்கள். இந்தப் பராசக்தியே யுகம் யுகமாக தொடர்ந்து பிறவி எடுக்கும் ஆன்மாக்களுடன் உடனிருந்து பாதுகாக்கின்றாள். திரிபுரையாகிய இந்த பராசக்தியே உயிர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ற பலனை அருளி இன்பத்தை வழங்குகின்றாள்.

நன்றி :

கருத்துகள் இல்லை: