30 ஜூலை, 2021

நூல் நயம் : கி.ரா.வின், "கிடை"

கிடை :
கி.ரா


எதார்த்த எழுத்தால் யாரையும் வசப்படுத்தும் வல்லமைபொருந்தியவர் கி.ரா
அவரின் எழுத்து"பட்டி"யிலிருந்து வெளிவந்து கரிசல் மணணை வளப்படுத்தியது "கிடை" எனும் குறு நாவல்
              கதையின் துவக்கமே அசல்பெயர் விடுத்து பட்டபெயருடன் பயணத்தை தொடங்கியது...ஆம் நுன்னுகொண்ட நாயக்கர் திருமாளிகை என்பது போய் ரெட்டகதவு நாயக்கர் வீடு என்றாக...
  
         பழைய செல்வந்தரின் வீட்டமைப்பை எழுத்தின் வழி கண்ணோட விட்டிருக்கிறார்.கதவை திரந்தவுடன் இருபுறமும் திண்ணை அதனருகில் மடக்கு கட்டில்,டானா கம்பு, முக்காலியும் அதன் வேலைப்பாடு என அவரின் செழிப்பான வாழ்வும். கையில் கம்பரகத்தி, வாக்கூடு பின்னுதல்,நாரில் கயிறு திரித்தல் என தன் ஓய்வு பொழுதிலும் உழைப்போடு பொருத்தியிருந்தார்

        இவர் பிராயத்தில் பெரிய கீதாரி எனவும் தற்போதய கீதாரி ராமசுப்பு நாயக்கர் எனவும் கூறி

           இரு கீதாரியின் சந்திப்பு கதையில் நிகழ்ந்ததையும், முடிவையும் தீர்மானிக்கிறது

           கி.ரா கதையின் மூலம் அக்கால கட்டுகதைகள் குறிப்பாக பேய்கதைகள் தைரியம் பொருந்திய திருடர்களே கிளப்பி விடப்பட்டதாக அறியமுடிகிறது....அக்கதைகள் இன்னும் நிசமென நம்பப்படுவது வியப்பாகவும் அவை பரிணாம அடைந்துள்ளது சினிமாக்களில் காண முடிகிறது. கிடையில் வரும் பொன்னுசாமி நாயக்கர் -கம்மம்மாள் பலே கதைகட்டிகள்(திருட்டுக்காக)

        வர்ணங்களையும் கிடையையும் ஆடுகளையும்  அதை மேய்ப்பவரகளையும், ஆட்டின் வகைகளையும்,தொழிலில் பிரிக்கும் பாகங்களையும் தானும் மூத்த கீதாரிபோல கி.ரா விவரிக்கிறார்.....
       
        அப்பாவி பாமர மக்களின் உழைப்பின் ஊடே தாங்கள் அதிகம் நம்புவது கடவுளையும் அதிஷ்டத்தையுமே , அவ்வாறே கதையில் வரும் கிட்ணகோனாரும் அவரது கொச்சை ஆடும்..இதுவே தன் மொய்க்கு (21ஆடு) காரணம் என நம்புகிறார்...அதேபோல பச்சை போர்வை கோபால் நாய்க்கரும் ,ராமகோனாரின் முருக வழிபாடுமாகும்......
          
           கிடை ஆடுகள் பருத்திகாட்டில் அழிமான செய்ததால் ஏற்பட்ட கிடை மறிப்பும் அதன்பின் ஊரார் கூட்டமும், ஊர்க்கூட்டத்தின் விசாரணை ,மூவர் குழு அமைப்பு இதனூடே குறி கேட்டல், மக்களின் அழிமான குறித்த கருத்தோட்டம், வழக்கம்போல் விசாரணை குழு உண்மைக்கு புறம்பான மக்கள் விரும்பும் அறிக்கை சமர்ப்பிப்பு  என தற்கால அரசியலை அப்பவே காட்சிபடுத்தியிருக்கிறார்....

           இங்கும்  ஒரு காதல் மறைக்கப்படுகிறது.இம்முறை ஆண் உயர்சாதி பெண் கீழ்சாதி என்பதே மாறுதலான விசயம்

               தலைவிரிகோளமாக ஓடி வரும் ராக்கம்மா தன் காடு கிடை ஆடுகளால அழிக்கப்பட்டது என ஊரை கூட்டுகிறாள்.பின்னர் ஊர்கூட்டம் விசாரணை குழு அமைக்கிறது..இதில் திறமையான விசாரணை அதிகாரி திம்மைய்யா நாயக்கர்....தான் எதையும் துப்பு துலக்கவள்ளலவர்..ஒருகண் தெரியாது என்பது குறையல்ல இவருக்கு
              
           இவரை காட்சிபடுத்திய பாங்கும் ,தடையங்களை சேகரிக்கும் விதமும் இவரது மனவோட்டமும் போன்றவற்றை எழுதிய கி.ரா விடமிருந்த பல கிரைம் நாவல் எழுத்தாளரும் சினிமா இயக்குனர்களும தற்போது எழுத்தை களவாடியது போல் தோன்றுகிறது.....
      
        திம்மைய்யா விசாரணையில் கண்டறிந்ததவர்கள் குற்றவாளிகள் மட்டுமல்ல காதலர்கள் என்று (என்னால் ஏற்க முடியவில்லை).......அதற்கு ஆதாரமாக வளையல்கள் முள்வாங்கி என தடையங்களையும் சேகரித்தார்.....

       இதனூடே அழிமான பற்றிய ஊரார் பார்வை பல விதமாக ஓடியது...ஆடு மேய்ப்பவர்களை மக்கள் தரம்பிரித்தனர்.. ராமக்கோனார் ஆடுமேய்ப்பின் நேர்மையும் பாராட்டிய மக்கள்...பொன்னுச்சாமி நாய்க்கரின் அழிமானத்தையும் கூறி மக்கள் சந்தேகித்தனர்......

        மக்கள் சந்தேகத்திற்கேற்றார்போல் குறிகேட்டு வந்த குழு பொன்னுச்சாமி நாயக்கரை குற்றவாளி என்றபோது ஊராரை வாயையும் வார்த்தையையும் அவரால் மிஞ்சமுடியவில்லை....

                  ஆனால் திம்மையா நாயக்கரும், தற்போதய கிதாரி ராமசுப்பு நாயக்கரும் அறிவர் பெரிய கீதாரி நுன்னுகொண்ட பேரன் எல்லப்பன் மற்றும் செவனி என்று.....

        எல்லப்பன்-செவனி(பூப்பெய்தாதவள்) அவர்களுக்குள் இருக்கும் அன்யோன்யம்  அறிந்து எல்லப்பனுக்கு திருமண நிச்சயிக்கப்படுகிறது...எல்லப்பன் நினைப்போடு செல்லும் செவனி காட்டில் பெரியவளாகிறாள் ....எல்லப்பன் நினைவில் பித்து கொள்கிறாள்......பெற்றோர் பேய் பிடித்ததாக கோடாங்கி கொண்டுவந்து உடுக்கெடுத்து அடிக்கிறார்கள்.....வேதனையுடன் செவனி பாடுகிறாள் தன் கதையை
              என முடிக்கிறார் கி.ரா

(ஒருவேளை இப்படி பாடிருப்பாளோ செவனி

         வர்ணங்கள் மனிதனில் மட்டுமல்ல ஆட்டிலும் உள்ளன ,ஆட்டினை ஏற்கும் மனிதன் ..... ஏன் சக மனிதனை மனிதன் ஏற்பதில்ல.....
         
                 கருப்பசாமி   
                 கோமதிபாண்டியன்

நன்றி :

கருத்துகள் இல்லை: