29 ஆக., 2021

தினம் ஒரு திருமந்திரம் : பாடல் #1256

திருமந்திரம் - பாடல் #1256: நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

வன்னி யெழுத்தவை மாபல முள்ளன
வன்னி யெழுத்தவை வானுற வோங்கின
வன்னி யெழுத்தவை மாபெருஞ் சக்கரம்
வன்னி யெழுத்திடு மாறது சொல்லுமே.

விளக்கம்:

பாடல் #1255 இல் உள்ளபடி சுழுமுனை நாடியின் நடுவில் ஏரொளிச் சக்கரமாக இருக்கும் அக்னியின் எழுத்தானது ஒளி ஒலி வடிவத்தில் மிகப்பெரும் சக்திகளாக இருக்கின்றன. இந்த மாபெரும் சக்திகளே ஆகாயம் வரை நீண்டு வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த சக்திகளே மிகவும் பெரிய சக்தி மயமாக இருக்கின்றன. இந்த சக்திகளின் எழுத்துக்களை சரியாக வடிவமைக்கும் வழிமுறைகளை ஏரொளிச் சக்கரமே உள்ளிருந்து அறிய வைக்கின்றது.

கருத்து:

ஏரொளிச் சக்கரம் ஒளி ஒலி வடிவத்தில் இருக்கின்ற எழுத்துக்களை சரியாக அமைக்கும் வழி முறையை உள்ளுக்குள் இருந்து அறிவுறுத்தும். அந்த வழி முறைகளை சரியாக கடைபிடிக்கும் சாதகர்கள் இறைவனின் பேரொளியோடு இணைந்து விடுவார்கள்.

நன்றி :

கருத்துகள் இல்லை: