29 ஆக., 2021

குட்டிக்கதை : கௌதாரியின் கதை

சந்தையில் ஒரு வியாபாரி கௌதாரி விற்பனை செய்து கொண்டிருந்தான். அவர் பெரிய வலையால் மூடப்பட்ட  கூடையில் நிறைய கௌதாரி பறவைகள்  வைத்திருந்தார்! பக்கத்தில் ஒரு சிறிய  கூடையில் ஒரே ஒரு  கௌதாரி இருந்தது!

ஒரு வாடிக்கையாளர் கேட்டார்  கௌதாரி எவ்வளவு? "400 ரூபாய்..!"

வாடிக்கையாளர் சிறிய கூடைய பார்த்து ஏன் இந்த கௌதாரி  தனி கூடையில் உள்ளது மற்றும் இதன் விலை என்ன என கேட்டார்.
வியாபாரி, "நான் அதை விற்க விரும்பவில்லை..." என்றார்.

ஆனால் வாடிக்கையாளர்  வலியுறுத்த, இதற்கு ரூ.5000 என சொல்லுகிறார் வியாபாரி ..!  வாடிக்கையாளர் ஆச்சரியத்துடன் கேட்டார்,
 "ஏன் இவ்வளவு விலை அதிகமாக இருக்கு, இதற்கு என்ன விசேஷ தன்மை உள்ளது..?"

"உண்மையில் இது என் செல்லப்பிராணி மற்றும் இது மற்ற கௌதாரிகளை சிக்க வைக்கும் வேலை செய்கிறது ..!"
           "ஆம் இது கத்தும்போது, ​​மற்ற பிற கௌதாரிகள் இது இருக்கும் இடத்தில்  கொஞ்சமும் யோசிக்காமல் கூடி வருகின்றன, பின்னர் நான் அனைத்தையும் எளிதில் வலையில் சிக்க, நான் அனைத்தையும் பிடித்து கூண்டில் அடைத்து விடுகிறேன்..!" என்றான் வியாபாரி.

அப்புறம் அது விரும்பும் உணவை இந்த கௌதாரிக்கு "டோஸாக" தருகிறேன், அது மகிழ்ச்சி அடைகிறது..!
அதனால்தான் அதிக விலை..!" என்றான்.

அந்த புத்திசாலி வாடிக்கையாளர் 5000 ரூபாயை  கொடுத்து, சந்தை என்றும் பாராமல் கௌதாரியின் கழுத்தை முறுக்கினான்..!

ஒருவர் கேட்டார்,
ஏன் இப்படி செய்தாய் ..?
அதற்கு அந்த வாடிக்கையாளர்.... 
            "தனது சொந்த சமுதாயத்தை, தனது சுய லாபத்திற்காக, தனது மக்களை ஏமாற்றி காட்டிக் கொடுக்கும் ஒரு துரோகிக்கு உலகத்தில் வாழ உரிமை இல்லை ..!" என்று கூறினார்.

நம்மைச் சுற்றி ரூ .5000 விலையுள்ள பல கௌதாரிகள் உள்ளன..!  அவர்களிடம் ஜாக்கிரதையாக நாம் தான் இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: