31 அக்., 2021

தத்துவங்களின் வரலாறு : தாவோயிசம் - பேரா.இரா.முரளி


TAOISM- AN INTRODUCTION


தாவோயிசம் காட்டும் வழி -


பேரா.இரா.முரளி

8,822 views

Oct 28, 2021

Socrates Studio

22.9K subscribers

#தவோ,#Tao,#yingyang

தவோயிசம் பற்றிய விரிவான அறிமுகம் இது.

 

Grateful thanks to

பேரா.இரா.முரளி

Socrates Studio

and YouTube and all the others who made this video possible. 

முன்னேற்றப் பாதை : கற்றல் ஒரு வரம் : பேராசிரியை பர்வீன் சுல்தானா


கற்றல் ஒரு வரம்

PROF. PARVEEN SULTANA 

BEST MOTIVATIONAL SPEECH 

EVER TAMIZHI VISION

67,849 views

Premiered Aug 1, 2021

Tamizhi Vision

61.4K subscribers

கற்றல் ஒரு வரம் | Prof.Parveen Sultana Best Motivational Speech Ever | Tamizhi Vision |

#TamilMotivationalSpeech #ParveenSultana

 

Grateful thanks to

Tamizhi Vision

Prof.Parveen Sultana

and YouTube and all the others who made this video possible. 

வாவ்! படங்கள்


நன்றி :

#LooksChallenge 
Lovely Birds ❤ 🐥🐥🐥

Grateful thanks to 

Mr.Heera Lal Sahu, 
AMAZING NATURE, 
FACEBOOK

ஆன்மீக மந்திரங்கள் : ஸ்ரீசுப்ரமண்யர் காயத்ரி

சிரிப்புத்தான் வருகுதையா

நலம் தரும் முத்திரைகள் : மகா சிரசு முத்திரை

நலக்குறிப்புகள்

                                        நன்றி 👆

ஆன்மீக மலர்கள்


நன்றி :

நூல் நயம் : தோட்டியின் மகன் : மலையாள மூலம் : தகழி சிவசங்கரப் பிள்ளை (தமிழில் : சுந்தர ராமசாமி)


#ReadingMarathon2021
#RM223
#ஆண்டுவிழா
#மொழிபெயர்ப்பு
#கிளாசிக்
67/50+

புத்தகம் : தோட்டியின் மகன்
ஆசிரியர் : 
மலையாள மூலம் : தகழி சிவசங்கரப் பிள்ளை அவர்கள்
தமிழில் : சுந்தர ராமசாமி அவர்கள்

வறுமையின் காரணமாக, தோட்டியாக பணிபுரியும் ஒருவர், அவருக்குப் பின் அவரது மகன், அடுத்து, அடுத்து என சந்ததியாகத் தொடரும் தோட்டித் தொழில், தங்கள் உரிமைகளை, உரிமைகள் எனில் மிகப் பெரிய விஷயங்களுக்கான நிர்பந்தங்கள் எல்லாம் இல்லை, தங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற ஊதியம், கல்வி கற்கும் உரிமை, இது போன்ற் அடிப்படை உரிமைகள் தான். இவற்றினைக் கூட, இந்த சமூகம் கொடுக்க மறுக்கிறது. ஆனால், இந்த சமுகத்தால், தோட்டிகள் இல்லாமல், ஒரு நாளைக் கூட நகர்த்தி விட முடியாது. ஆனாலும், அவர்களை மதிக்க மாட்டோம். இப்படியான சமூகத்தில், தோட்டியாக இருக்கும் ஒருவன், தன் சந்ததி, தோட்டியாகி விடக் கூடாது என்று, முனைப்புடன் செயல்படுகிறான். நல்ல எண்ணம், நல்ல மாற்றம், மாற்றம் வேண்டும், வாழ்வில் முன்னேற்றம் வேண்டும் என்றெண்ணும் அம்மனிதனின் ஆசை நிறைவேறியதா?

"மனிதனின் கழிவுகளை, மனிதன் அகற்றும் அவல நிலை தீருமோ?" என்ற வலி நிறைந்த வாசகத்தினை சில காலத்திற்கு முன் வாசித்ததாக நினைவு. இந்த நாவலை வாசித்ததும், அந்த வாசகத்தின் பின்னிருக்கும் வலியை உணர முடிந்தது.

இசக்கிமுத்து மகன் சுடலைமுத்து, இக்கதையின் கதை சொல்லி. இசக்கிமுத்து மரணிக்க, அவரை புதைக்க வழியில்லாமல், அவர்கள் படும் பாடு, வேதனையானது. தந்தைக்குப் பின், தந்தை பார்த்த தொழிலுக்கு தள்ளப்படும் சுடலைமுத்து, தன் பிள்ளை ஒரு தோட்டி ஆகிவிடக் கூடாது என்பதில் முனைப்புடன் இருந்து, வள்ளியை மணமுடித்து, மோகன் என்ற பிள்ளையும் பிறக்க, தானொரு தோட்டியின் மகன் என்பதே தெரியாமல் வளர்க்கப்படும் சூழல் எங்ஙனம் தலைகீழாக மாறுகிறது? தோட்டி குறித்து அந்த குழந்தை என்ன நினைக்கிறது? சுடலை முத்து மீது பாசம் கொண்ட அவன் பிள்ளை மோகன், தந்தையின் பாசத்திற்காக ஏங்கி நிற்கும் தருணங்கள் நெகிழ வைக்கின்றன.

தோட்டி எனில், அவனும் மனிதன் தானே, அவன் தன் பிள்ளைக்கு, தான் விரும்பும் பெயரைக் கூட வைக்கக் கூடாதா என்ன, சுடலையின் மகன், மோகனின் பெயர், பரிகாசத்திற்கு உள்ளாகையில், கோபம் கட்டுப்படுத்த இயலவில்லை.

சமூகத்தில், மனிதக் கழிவுகளை துப்புரவு செய்யும் தோட்டிகளின் வாழ்விடம், ஊருக்கு ஒதுக்குப்புறமாய், கழிவுகள் நிறைந்த இடங்களிலேயே அமைகிறது. தூய்மையற்ற இடம், இவர்களின் வாழ்விடம் ஆகிப் போவதால், ஆண்டு தோறும் வரும் கொள்ளை நோய்கள், இம்மக்களில் பலரையும் காவு வாங்கத் தவறுவதில்லை. இம்மக்களின் எண்ணிக்கை குறைந்தால், தங்களுக்கு அன்றாடம் செய்ய வேண்டிய, கழிவு அகற்றும் பணியினை செய்ய ஆள் தட்டுப்பாடு ஏற்படும் என்று சிந்திக்கத் தெரிந்த மக்களால், அவர்களும் தம்மைப் போன்ற சக மனிதர் தாம் என்று சிந்திக்கத் தோன்றவில்லை.

பல கேள்விகளையும், வலிகளையும் மனதில் ஏற்படுத்திய புத்தகம். இப்புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு, 1946. இன்றுவரை, இத் தொழில்புரியும் மக்கள் இருக்கிறார்கள். இந்தத் தொழில் செய்வதால், பல இன்னல்களுக்கு, நோய்களுக்கு ஆளாகிறார்கள். சிலர் மரணத்தையும் தழுவுகிறார்கள். நாமும் அவற்றை எல்லாம், ஒரு செய்தியாக மட்டுமே பார்த்து, கடந்து போக பழகிக் கொண்டு விட்டோம். சக மனிதனின் துயரில், வலியில், வேதனையில், நாம் அந்த வலி, வேதனை என்றொன்று இருப்பதைக் கூட உணராது, ஒவ்வொரு நாளையும், கடந்து போய்க் கொண்டே தானிருக்கிறோம்.

நன்றி :

திரு.தமிழ் முகில் பிரகாசம், 
வாசிப்பை நேசிப்போம், 
முகநூல்

இன்றைய திருமந்திரம் : பாடல் #1301:


திருமந்திரம் - பாடல் #1301: நான்காம் தந்திரம் - 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

குறைவது மில்லை குரைகழற் கூடு
மறைவது மாரண மவ்வெழுத் தாகித்
திறமது வாகத் தெளியவல் லார்கட்
கிறவில்லை யென்றென் றியம்பினர் காணே.

விளக்கம்:

பாடல் #1300 இல் உள்ளபடி எந்த விதமான குறைகளும் இல்லாத நிலையை அடைந்த சாதகர்கள் மேன்மையான சாம்பவி மண்டலச் சக்கரத்திற்கு ஏற்ப ஞானமும் அருளும் எப்போதும் குறைவில்லாமல் இருப்பார்கள். ஒலிக்கின்ற சிலம்புகளை அணிந்திருக்கும் இறைவனின் திருவடிகளும் சாதகர்களை விட்டு எப்போதும் பிரியாமல் அவர்களுடனே சேர்ந்து இருக்கும். வேதங்கள் சிறப்பித்து சொல்லுகின்ற உண்மை ஞானமாகவே இருக்கின்ற 51 எழுத்துக்களையும் அதனதன் இயல்புக்கு ஏற்ப முழுவதுமாக அறிந்து உணர்ந்து கொள்ள முடிந்தவர்களுக்கு இறப்பு என்பதே இல்லை என்று இந்த நிலையை அடைந்தவர்கள் உறுதியாக சொல்வார்கள். இதை சாதகர்களும் முழுவதுமாக உணர்ந்து கண்டு கொள்ள வேண்டும்.

நன்றி :

இன்றைய குறள்


நன்றி :

காலை நற்சிந்தனைகள்

இயற்கையை நேசிப்போம்!


Good afternoon My friend 

Natural Road 

#Lookingchallenge

நன்றி :

Bunda Alia, 
NATURE BEAUTIFUL WORLD, 
FACEBOOK 

இனிய காலை வணக்கம்!

30 அக்., 2021

தடுப்பூசி தகவல்கள்

நலம் தரும் முத்திரைகள் : கப நாச முத்திரை

ஆன்மீக மலர்கள் : ஸ்ரீமஹாவிஷ்ணு காயத்ரி

அன்றாட வாழ்வில் அபாயங்கள் : மாரடைப்பு

டிஜிட்டல் உலகம்

கருணை உள்ளமே, கடவுள் இல்லமே


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம்

நலக்குறிப்புகள் : ஏலக்காய்

வாவ்! படங்கள்


நன்றி :

தற்சார்பு வீட்டுத்தோட்ட பயிற்சி

புதுச்சேரியில் வானகம் மற்றும் உழுது உண் மரபு விதைகள் சேகரிப்புக் குழு இணைந்து நடத்தும் தற்சார்பு வீட்டு தோட்ட பயிற்சி

பயிற்சி நாள் -31.10.2021
நேரம் காலை 8.30  - 4 மணி வரை

5 சென்ட் இடத்தில் 100 கும் மேற்பட்ட காய்கறிகள் , கீரைகள், கிழங்குகள், பூக்கள், மூலிகைகள்,பழ மரங்கள் போன்றவற்றை எளிமையாக இயற்கை முறையில் வளர்க்கும் நுட்பங்கள்

பயிற்சியில்

🌿தோட்ட வடிவமைப்பு

🌿மண்ணை வளப்படுத்தும் நுட்பங்கள்

🌿நீர் மேலாண்மை

🌿நாட்டு விதைகளின் முக்கியத்துவம்

🌿விதைப்பு முறைகள்

🌿விதை சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு நுட்பங்கள்

🌿பயிர் கலப்பு மற்றும் சுழற்சி முறைகள்

🌿பூச்சி மேலாண்மை

🌿இயற்கை இடுபொருட்கள்

🌿பயிற்சியில் இறுதியில்  சில மரபு காய்கறி விதைகள் வழங்கப்படும்

🌿 அனுமதி - 15 நபர்களுக்கு மட்டும்

🌿 நன்கொடை - 500ரூ/-
 தேனீர்+மதிய உணவு   (உட்பட )

முன்பதிவு அவசியம்

தொடர்புக்கு 
9445188965 (WhatsApp)
8680838197

நன்றி :

இன்று ஒரு தகவல் : பட்டாசு வெடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

உலக சேமிப்பு தினம்

இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம்

சுற்றுச்சூழல் : மரம் வளர்ப்போம்!


நன்றி :

நூல் நயம் : அவமானம் - சாதத் ஹசன் மண்ட்டோ


#ஆண்டுவிழா
#மொழிபெயர்ப்புநூல் 
#பதினொன்றாம்வாரம்

சாதத் ஹசன் மண்ட்டோ எழுதிய 'ஹட்டாக்' என்றழைக்கப்பட்ட 'அவமானம்' நூல் தான் இந்த புத்தகம். 
இந்த புத்தகம் வாங்கும்போது டைட்டில் பார்த்து தான் வாங்கினேன். மொழிபெயர்ப்பு என்பதற்காக இப்படியெல்லாமா மொழிபெயர்ப்பாங்க. 
தவறேதும் இல்லை, படிப்பதற்கு எளிமையாகவும் கிரீன் வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தி எழுதிருக்காங்க. கதைகள் நல்லா இருக்கு.. 

'காலித்' , 'திற' கதைகள் எனக்கு பிடித்திருந்தது. இந்து - முஸ்லிம்- சீக்கிய மக்களின் மனங்களே மண்ட்டோக்களின்  படைப்புகளாகின்றன. மதக்கலவரம் அன்றைய நாளின் தட்பவெப்பமாக இருந்தபோது மனிதர்கள் என்னவாகவெல்லாம் மாற்றம் பெருகிறார்கள் என்பதை அவருடைய எழுத்துக்களில் வாசிக்கிறோம். ஆண்மை, பெண்மை, பண்பு, நற்குணங்கள், வீரம், விவேகம் என எல்லா மனிதக் குணங்களும் சிதைகின்ற கோலத்தை விருப்பு வெறுப்பின்றி, எந்தச் சாய்மானமும் இன்றி மண்ட்டோ தன் படைப்புகளில் முன்வைத்துள்ளார்.

மண்ட்டோ எழுதிய நிறைய கதைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றம் வரை வழக்குகள் நடந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காரணம் என்னவென்றால் ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தி எழுதுவது தான். 

"தண்டா கோஷ்" சிறுகதை ஆபாசமானது என்று தொடரப்பட்ட வழக்கில் லாகூர் உயர் நீதிமன்றம் செக்சன் 292 ஐபிசி படி இவ்வாறு தீர்ப்பளித்தது: 

ஓர் எழுத்தாளனின் குறிக்கோள் என்னவென்பதோ, அது நல்லதா கெட்டதா என்பது பற்றியோ சட்டம் அக்கறை கொள்ள முடியாது. சட்டம் ஒரு வாசகனின் மனநிலை எவ்வழியில் நடத்தி செல்லப்படுகிறது என்பதைப் பற்றி மட்டுமே கவலைப்பட முடியும். ஓர் எழுத்து ஆபாச உணர்வுகளை நோக்கி வாசகனை அழைத்துச் செல்லும் என்றால் அந்த எழுத்தை ஆபாசமானது என்று கருதுவதற்கும் அதற்காகத் தண்டனை கொடுப்பதற்கும் தகுதி உடையது ஆகிறது. 

மக்கள் மண்ட்டோவை மதநம்பிக்கை இல்லாதவன் என்றும் ஆபாசக்காரன் என்றும் சொல்வது விநோதமாக இருக்கிறது. இந்தச் சொற்களின் எல்லைக்குள் வைத்து பார்க்கப்படவேண்டியவர் தான் என்று நானும் நினைக்கிறேன். இதற்குக் காரணம் நாகரீக மற்றது என்று பொதுவாகக் கருதப்படும் விஷயங்களையும், ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருதப்படும் வார்த்தைகளையும் தான் அவர் தன்னுடைய எழுத்துக்களில் உயயோகிக்கிறார். 
இருந்தாலும் அவர் எப்போது என்ன எழுதினாலும் முதல் பக்கத்தின் மேலே பிஸ்மில்லா என்பதைக் குறிக்கும் 786ஐ எழுதி விட்டுத்தான் எதையும் எழுதத் தொடங்குகிறார். இந்த மண்ட்டோ, மதநம்பிக்கை அற்றவன் என்று அறியப்படுகிறவன் காகிதத்தில் மதநம்பிக்கை உள்ளவனாகவும், ஓர் இறைவிசுவாசியாகவும் மாறிவிடுகிறார் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

"என்னுடைய கதைகள் அசிங்கமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், நீங்கள் வாழும் சமூகம் அசிங்கமாக இருக்கிறது என்று பொருள். அந்த உண்மையை நான் எனது கதைகள் மூலம் அம்பலப் படுத்தமட்டுமே செய்கிறேன்".

என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம். 

                                 - சாதத் ஹசன் மண்ட்டோ. 

என்று மண்ட்டோ சொல்லிருக்கிறார். ஓகே கருத்தில் எடுத்துக் கொள்வோம். அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள். 

---------------------------------------------
Reading Marathon 2021 
38/50 
ID : RM 00211
புத்தகம் : அவமானம்
தமிழாக்கம் : ராமாநுஜம்
பக்கங்கள் : 96 
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
----------------------------------------------------
~சரண்யா

நன்றி :

Ms சரண்யா M, 
வாசிப்பை நேசிப்போம், 
முகநூல்

இன்றைய திருமந்திரம் - பாடல் #1251

திருமந்திரம் - பாடல் #1251: நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

பெற்றாள் பெருமை பெரிய மனோன்மணி
நற்றா ளிறைவனே நற்பய னேயென்பர்
கற்றா னறியுங் கருத்தறி வார்கட்குப்
பொற்றா ளுலகம் புகல்தனி யாமே.

விளக்கம்:

பாடல் #1250 இல் உள்ளபடி சாதகர் பெற்ற திருவடிகளின் பெருமையை உடையவள் அனைத்திற்கும் மேலான இறைவனோடு எப்போதும் சரிசமமாக சேர்ந்தே இருக்கும் மனோன்மணி எனும் இறைவியாவாள். நன்மையைத் தருகின்ற திருவடிகளைக் கொண்ட பரம்பொருளான இறைவனை சென்று அடைவதே இந்த உலகத்தில் கிடப்பதற்கு மிகவும் அரிய பயனாகும் என்பதை அவனது திருவடிகளை அடைந்தவர்கள் கூறுவார்கள். அப்படி அடைந்த திருவடிகளால் பெற்ற ஞானத்தின் மூலம் இறைவனை அறிந்து கொண்டு தமது எண்ணத்திலும் அவனை வைத்து முழுவதும் அறிந்து கொள்ள முடிந்தவர்களுக்கு பொன் போன்ற இறைவனின் திருவடிகளை இந்த உலகத்திலேயே அடைய முடியும் என்பதால் அதற்காக இந்த உலகத்தில் பிறவி எடுத்து வந்து அவனோடு ஏகாந்தத்தில் தனித்திருப்பதும் கிடைப்பதற்கு அரிய மிகப்பெரும் பேறாகும்.

நன்றி :

இன்றைய குறள்


நன்றி :

காலை நற்சிந்தனைகள்

இயற்கையை நேசிப்போம்!


நன்றி :

இனிய காலை வணக்கம்!

29 அக்., 2021

ஹோமியோபதி கல்விக்குழு கூட்டம்

நண்பர்களே!

நமது அப்ரோச்-அறக்கட்டளை அமைப்பின் ஹோமியோபதி விழிப்புணர்வு கல்விக்குழு கூட்டம்
இந்த வாரம் ஞாயிறு 
 ( 31-10- 2021) நடைபெறவுள்ளது.

விவரம் :-

இளம் நிலை :-

1.Opium materia Medica,
        --- M.Kumaraguru,

2. Anatomy - Muscular system - Introduction
        --- T.Jamuna,

வளர் நிலை :-

1.Comparative study on rubric - Face, Expression, anxious (in Kent repertory-page 374) (only first grade remedies)

2.Master's article -- 
      The Medical Observer -- Dr.Samuel Hahnemann,M.D.,
(இதற்கான PDF ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது.)


நேரம்:- மதியம் 3.00 மணிக்கு
இடம் :- நடேசனார் பள்ளி, 18, பழைய ESI சாலை,
(கனரா வங்கி பேருந்து நிறுத்தம்),
அம்பத்தூர்.

தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். 
நன்றி.

வாவ்! படங்கள்


Grateful thanks to 

Mayang Sary, 
NATURE BEAUTIFUL WORLD, 
FACEBOOK

சுற்றுச்சூழல் : மரம் வளர்ப்போம்!


தினம் ஒரு மரம் 🌳
நாள் 98
இடம் - நஞ்சை ஊத்துக்குளி .

நன்றி :

மனிதம் பசுமை இயக்கம், 
முகநூல்

நூல் நயம் : காந்தியோடு பேசுவேன் : எஸ்.ராமகிருஷ்ணன்


பொத்தக விமர்சனம்: 112/200
பொத்தகம்: காந்தியோடு பேசுவேன்
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன் 
பக்கங்கள்: 151
விலை:₹175
பதிப்பகம்: தேசாந்திரி 

இந்த பொத்தகத்தில் மொத்தம் 13 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளது. பலரின் எண்ணங்கள் வாழ்கையில் எப்படி உள்ளது? ஒருவரை ஒருவர் எப்படியெல்லாம் புரிந்து கொள்கிறார்கள்?   எதன் மீது பற்றுக் கொண்டு பற்றிக் கொள்கிறார்கள்? இன்றைய சமுதாயத்தில் வேறுபாடான பல மனிதர்கள் உள்ளார்கள். அவர்கள் வாழ்க்கையில் இடம்பெற்ற பல நிகழ்வுகளை அழகாக சுவைபட ஆசிரியர் 
எஸ்.ராமகிருஷ்ணன் எடுத்துரைத்துள்ளார். 

காந்தியோடு பேசுவேன், கடக்க முடியாத பாலம், அஸ்தபோவில் இருவர், பிடாரனின் மகள், ஷெர்லி அப்படித்தான், பசித்தவன், ஒற்றை முள் போன்ற கதைகளை படிக்கும் போது மிகவும் அருமையாக இருந்தது.

இந்த பொத்தகத்தில் காந்தியோடு பேசுவேன் என்ற கதையின் ஒரு பகுதியில்.. உண்மையில் இந்தியர்கள் விசித்திரமானவர்கள். அவர்கள் எதை நேசிக்க விரும்புகிறார்களோ, அதற்கு எதிராகவே செயல்படுகிறார்கள். இந்தியர்களின் பிரச்சினை காந்தியை அவர்களால் இன்னமும் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே. அவர்களுக்கு இப்படி ஒரு அதிசயம் எப்படி சாத்தியமானது என்று வியப்பாக இருக்கிறது. உண்மையில் காந்தியின் செயல்பாடுகள், எண்ணங்கள் நமது பலவீனங் களை, குறைபாடுகளை, மனசாட்சியைக் கேள்விகேட்கிறதே என்று பலருக்கும் கோபமாக இருக்கிறது. இன்றைய இளைஞர்களுக்கு
காந்தி ஒரு விளையாட்டு பொம்மை. அவர்கள் உதைத்து விளையாட
விரும்பும் ஒரு கால்பந்து. அவர்களுக்குப் புதிராக இருப்பது எவ்வளவு
உதைத்தாலும் இந்தப் பந்து திரும்பத் திரும்ப அதன் இயல்பிற்கு வந்துவிடுகிறதே என்பதுதான்.

காந்தியை நெருங்கிச் செல்வதற்குத்தான் ஈடுபாடு தேவை. வெறுப்பதற்கு எவ்வளவோ காரணங்கள் முன்னதாக உருவாக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் இவ்வளவு மோசமான வசைகள், அவதூறுகள், தூஷணைகளைச் சந்தித்த மனிதர் வேறு யாராவது இருக்கக் கூடுமா என்ன? அப்படியிருந்தும் காந்தியின் வசீகரம் குறையவேயில்லை. ஒருவேளை காந்தியை வெறுப்பது என்பது அவரை நேசிக்கச் செல்வதற்கான ஒரு பயிற்சிதானோ என்னவோ.

அடுத்ததாக கடக்க முடியாத பாலம் இந்த சிறுகதையில்: 

நகரங்களில் சாதியில்லை என்பது பொய். நகரங்களில் சாதி வேற்றுருவம் எடுத்திருக்கிறது. கிராமம் போல வெளிப்படையாக சாதி கண்ணில் படுவதில்லை. ஆனால் தொழில்பிரிவுகளில், குடியிருப்பில், வணிகத்தில், திருமணத்தில், பழக்கவழக்கங்களில் சாதி நீக்கமற நிறைந்திருந்தது, ஒவ்வொரு சாதிக்கும் ஒரு ரௌடி உருவாகியிருக் கிறான். ஒவ்வொரு சாதியிலும் நாலைந்து அரசியல்வாதிகள் சாதிய நாயகர்களாக மாறியிருக்கிறார்கள்.

பலவரிகளில் பல உணர்வுகளை எளிதாக தன் எழுத்தின் மூலம் நமக்கு கடத்தியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள். மேலும் இந்த பொத்தகத்தில் இடைப்பட்ட நாட்கள், நிகழ்காலத்தின் சுவர்கள், வெயில்போய் வரும் போன்ற கதைகளை படிக்கும் போது சற்று தொய்வாக இருப்பது போல உணர்ந்தேன். 

நன்றி..
- யாழினியன் 

நன்றி :

திரு.யாழினியன்,
வாசிப்பை நேசிப்போம், 
முகநூல் 

அருள்வாக்கு

இன்றைய திருமந்திரம் - பாடல் #1249


திருமந்திரம் - பாடல் #1249: நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித்
தாயம் புணர்க்குஞ் சலந்தீ யமலனைக்
காயம் புணர்க்குங் கலவியுள் மாசத்தி
ஆயம் புணர்க்குமவ் வியோனியு மாமே.

விளக்கம்:

அசையா சக்தியாகிய இறைவனுக்குள் அண்ட சராசரங்களையும் அதிலிருக்கும் அனைத்து உலகங்களையும் அதற்குள் அனைத்து உயிர்களையும் படைக்க வேண்டும் என்கிற எண்ணம் வரும் போது அவரிடமிருந்து அசையும் சக்தியாகப் பிரிந்து வருகின்ற இறைவியின் மாயா அம்சத்தோடு உலகங்களும் உயிர்களும் உருவாக வேண்டும் என்ற காரணத்திற்காக சேருகின்ற நீண்ட சடையை உடைய மாசற்ற இறைவன் தம்மை அறிந்து அடைய வேண்டும் என்று ஆசைப்படுகின்ற உயிர்களுக்கு அருள வேண்டும் என்கிற பெருங்கருணையில் உயிர்களின் உடலை பஞ்ச பூதங்களிலுள்ள நீரையும் நெருப்பையும் கலந்து உருவாக்கும் போது தமது திருவடியையும் சேர்த்தே வைத்து உருவாக்கி அருளுகின்றான். உயிர்கள் பிறவி எடுப்பதற்கு தேவையான உடலை உருவாக்க வேண்டி இறைவனுடன் சேர்ந்து கலக்கின்ற பராசக்தியாகிய இறைவியும் தங்களின் கலப்புக்குள்ளிருந்து பலவித உருவங்களோடு உயிர்கள் அனைத்தையும் ஒரு மாபெரும் கூட்டமாக உலகங்கள் அனைத்திலும் சேர்ந்து பிறப்பதற்கு மாபெரும் காரணமாக இருக்கின்றாள்.

உட்கருத்து:

கர்மங்களைத் தீர்த்துக் கொள்ள மாயையுடன் உயிர்களைப் படைத்தாலும் அந்த மாயை நீங்கி உண்மையை உணர்ந்து தம்மிடம் வந்து அடைவதற்கான ஆதாரமாக தமது திருவடியை உயிர்களுக்குள் வைத்தே படைத்து அருளுகின்றான் இறைவன். தமக்குள் ஆதாரமாக இருக்கின்ற இறைவனின் திருவடிகளை உணர்ந்து பற்றிக் கொண்ட உயிர்களுக்கு கிடைக்கும் மாபெரும் ஆதேயமாக இறைவனின் திருவருள் இருக்கின்றது.

நன்றி :

இன்றைய குறள்