திருமந்திரம் - பாடல் #1244: நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
தாங்கி யுலகிற் தரித்த பராபரன்
ஓங்கிய காலத் தொருவ னுலப்பிலி
பூங்கிளி தங்கும் புரிகுழ லாளன்று
பாங்குட னேற்பப் பராசத்தி போற்றே.
விளக்கம்:
பாடல் #1243 இல் உள்ளபடி உயிர்களுக்குள்ளும் சோதியாக வீற்றிருக்கின்ற பரம்பொருளான இறைவன் அண்ட சராசரங்களையும் தாங்கி நின்று அதிலிருக்கும் அனைத்து உலகங்களாகவும் அதிலிருக்கும் அனைத்து பொருட்களாகவும் இருக்கின்றான். அனைத்தும் அழிந்து போகின்ற பேரூழிக் காலத்திலும் கூட தான் ஒருவன் மட்டும் எப்போதும் அழியாமல் இருக்கின்றான். பசுமையான கிளியை தனது திருக்கையில் ஏந்திக் கொண்டு சுருண்ட அழகிய கூந்தலை உடைய இறைவியானவள் அப்போதும் இறைவனின் மேன்மையான நிலைக்கு ஏற்பவே தாமும் அவனுடன் சரிசமமான பாகமாகக் கலந்து நின்று இருவரும் சேர்ந்து இருக்கின்ற தன்மையில் பராசக்தியாக இருக்கின்றாள். ஒன்றாகச் சேர்ந்து இருக்கும் இவர்கள் இருவரையும் போற்றி வழிபடுங்கள்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக