29 நவ., 2021

ஆன்மீக மலர்கள்

கார்கலந்த மேனியான் கைகலந்த
                                                            ஆழியான் 
பார்கலந்த வல்வயிற்றான்
                     பாம்பணையான் -- சீர்கலந்த
சொல் நினைந்து போக்காரேல்
                            சூழ்வினையின் ஆழ்துயரை 
என்நினைந்து போக்குவர்இப் போது  ?(2670)

பொருள் :

உலக மக்கள் இறைவன் திருக்குணங்களை சொல்லி அனுபவியாமல் வீணே பொழுது போக்குகின்றார்களே !

அப்பெருமான் மேகம் போன்ற திருமேனி உடையவன் ;
பிரளய காலத்தில் உலகமெல்லாம் வந்து சேரப்பெற்ற வலிய திருவயிற்றை உடையவன் ;
கையோடு சேர்ந்தத திருச் சக்கரத்தை உடையவன் ல
ஆதிசேடனை படுக்கை ஆக கொண்டவன் ;
இப்படிப்பட்ட பெருமானின் திருக்குணங்களை சொல்லிசைத்த வண்ணம் துதித்து வந்தால் நம் பாவங்களால் வரும் துயர் தொலையும். இவற்றை போக்கிக் கொள்ளாமல் இவ்வுலகத்தவர் வீணே கழிக்கிறார்களே.! 
பகவத் குணம் பேசாமல் இவரகள் பொழுதை எப்படித் தான் கழிக்கிறார்களோ?.... 

சிறப்பு பொருள் :
---------------------------
1).கார் கலந்த மேனியான் =இராம பிரான் 
   அவன் சீர் கலந்த சொல் =இராமாயணம் 
2).கை கலந்த ஆழியான்= கண்ண பிரான் 
அவன் சீர் கலந்த சொல் = பாகவதம், 
            மகா பாரதம், அரிவம்சம் முதலியன. 
3).பார் கலந்த வல் வயிற்றான் 
அவன் சீர் கலந்த சொல் =புராணங்கள். 
4).பாம்பணையான் =திருவரங்கன். 
அவன் சீர் கலந்த சொல் =திருவரங்கனின் பெருமை பேசும் திருவாய் மொழி.. 

இது ஒரு 
சாற்றுப் பாசுரம்...

நன்றி:

திரு கருணா மூர்த்தி, 
முகநூல்

கருத்துகள் இல்லை: