💓🍀 உலகை ஆச்சரியப்படுத்திய இந்தியா.
ஒரு நாட்டின் போர் கருவிகளே அந்த நாட்டின் பாதுகாப்பின் அடையாள சின்னங்கள். அந்த வகையில் இன்றைய தேதியில் அதிநவீன பல ஆயுதங்களை கொண்ட நாடு அமெரிக்கா என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை....
ஆனால்....
ஆனானப்பட்ட அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்திய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று உலக அளவில் முன்னிலை பெற்று இருக்கிறது.
அதுதான் இந்திய HAL நிறுவன தயாரிப்பு LCH எனும் இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர். வெறுமே சொல்லக்கூடாது...... அதகளம் பண்ணியிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் அதிநவீன ஹெலிகாப்டர் என்றால் அது அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் தான். தரத்தில்... செயல்திறனில்.... இந்த போயிங் நிறுவன தயாரிப்பு அப்பாச்சி ஹெலிகாப்டர்களுக்கு இந்த உலகில் எதுவும் இல்லை என்று பெயர் பெற்றவை. நாமும் நம் இந்திய ராணுவ படையணியில் இந்த ரக ஹெலிகாப்டர்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
இந்த அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை நம் இந்திய டாட்டா நிறுவனம், அமெரிக்க போயிங் நிறுவனத்தின் கூட்டு தயாரிப்பில் தான் 72 % உடற்பாகங்கள் தயாரிக்கப்பட்டு உலக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது நம்மில் பலருக்குமே தெரியாத சமாச்சாரமாகவே இருக்கிறது.
ஆனால்....
பெங்களூரு HAL நிறுவனம் தயாரிக்கும் LCH ஹெலிகாப்டர்கள் முழுக்க முழுக்க நம் இந்திய தயாரிப்பு.
இதன் பறக்கும் உயரம் 6600 மீட்டர்.இது கிட்டத்தட்ட கடல் மட்டத்திலிருந்து ஆறரை கிலோமிட்டர் உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது.
அமெரிக்க போயிங் நிறுவனத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டரின் பறக்கும் உயரம் 6100 மீட்டர்கள் மாத்திரமே.
இதனை அவர்கள் AAH எனும் பிரிவுக்குள் கொண்டு வந்து இருக்கிறார்கள். அப்படி என்றால் அட்வான்ஸ்டு அட்டாக் ஹெலிகாப்டர் என்பதின் சுருக்கம் தான் AAH ஆகும்.
இந்த தர மேம்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்கள் கூட அதி உயர பனிச் சிகரங்களில் இயங்குவதில் திணறுகிறது என்கிறார்கள்.
ஆனால் HAL நிறுவன தயாரிப்பு LCH பிரிவின் கீழ் வகைப்படுத்தி இருக்கிறார்கள். சரியாக சொன்னால் லைட் காம்பேக்ட் ஹெலிகாப்டர் எனப்படும் இந்த இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் செயல் திறன் அபாரமாக இருக்கிறது.... தவிர அதி உயர பனிச் சிகரங்களில் ...... 21,300 அடியுரத்தில் கூட அநாயாசமாக செயல்படுகிறது என்கிறார்கள்.
அது அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை காட்டிலும் ஆயிரத்து இருநூறு அடி உயரம் அதிகம்.
உலக அளவில் இது தான் அதிஉச்ச செயல் திறன் கொண்ட இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் என்று பெயர் பெற்று இருக்கிறது.
ஏற்கனவே தற்போது துபாயில் நடைபெற்ற வரும் விமான கண்காட்சியில் நம் தேசத்தின் இலகு ரக ஒற்றை இஞ்சின் கொண்ட தாக்குதல் போர் விமானம் சக்கைபோடு போடுகிறது. மூன்றாவது முறையாக பாகிஸ்தானிய ஒற்றை இஞ்சின் தாக்குதல் போர் விமானம் JF-17 கண்காட்சியில் கூட கலந்து கொள்ளாமல் பயந்து ஓடுவதாக உலக செய்தி ஊடகங்கள் பகடி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
நம் தேஜாஸ் விமானங்களை பார்க்க சமோசா மாதிரி இருக்கிறது என்று பழிப்பு காட்டி வந்த பாகிஸ்தான் சந்தடி இல்லாமல் பின்வாசல் வழியாக ஓடிவிட்டது என்று கேலி பேச ஆரம்பித்து விட்டனர் பலரும்.
இந்த சூழ்நிலையில் தான் தற்போது இந்திய இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் களம் இறங்குகிறது.
உலகின் பலரது புருவத்தை உயர செய்து இருக்கிறது என்றால் அது மிகையில்லை.
💓நாளை புதன்கிழமை 17/11/21 முதல் இந்திய சுதந்திர தின 75 ஆம் ஆண்டு விழா உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜான்சியில் மூன்று நாட்களுக்கு நடக்க இருக்கிறது.
இதில் நிறைவு நாளன்று அதாவது 19 ஆம் தேதி அன்று இந்த இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை முறைப்படி இந்திய விமானப் படையிடம் கையளிக்க இருக்கிறார்கள். நம் பாரத பிரதமர் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.
அன்றைய தினம் ஜான்சியின் ராணி லக்ஷ்மி பாயின் பிறந்த நாள் விழா கொண்டாடங்களுக்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதல் இந்திய விடுதலை போர் என்பது இவரால் முன்னெடுக்கப்பட்டதாக சரித்திரம் நமக்கு சொல்கிறது...... அதனை சிறப்பிக்கவும் இந்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த விழா தற்போது ராணுவ மட்டத்தில் முன்னெடுப்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது.
அவர் மேஜர் ஷைத்தான் சிங். 1962 ஆம் ஆண்டு சீனாவுடனான எல்லை மோதலில் போது எல்லையை காத்து நின்ற மாவீரன். அவரது அந்த ரத்த சரித்திரம் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய சமாச்சாரம்.
இவர் குறித்து நாம் கடந்த காலத்தில் நம் பதிவுகளில் விரிவடைய பார்த்து இருக்கிறோம்.... வேண்டுவோர் கீழேயுள்ள சுட்டியில் ஒரு பார்வை பார்த்துவிடுங்கள். இவரது அறுபதாவது ஆண்டு நினைவு தினம் நவம்பர் 18 அன்று வருகிறது.
https://www.facebook.com/100008307349149/posts/3046058302347718/?app=fbl
அதுபோலவே ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் குறித்து விஷயங்களை நாம் முன்பே நம் பதிவில் பார்த்து இருக்கிறோம்...
https://www.facebook.com/100008307349149/posts/2889545301332353/?app=fbl
இவர் போல்வார்களின் வீரம் நிறைந்த மண் நம்முடையது.... நம் பாரம்பரிய கலாச்சாரத்தின் பெருமையும் இதுவே......
அதன் பொருட்டே......
இந்த மண்ணுக்கு என்று தனிப்பட்ட பெருமை இல்லை...... இந்த மண்ணில் தோன்றிய மக்களால் தான் இந்த மண்ணுக்கு பெருமை என்கிறார்கள்.....
அந்த வாசகங்களில் காணப்படும் நிதர்சனம்.... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தான் மேலே உள்ளவர்களின் வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம்.
நம் தேசத்தில்...... வீரத்திற்கு ஆண் பெண் பேதமில்லை. அது அன்றும் சரி.... இன்றும் சரி.....
❣️வாழ்க பாரதம்
ஓங்கட்டும் அதன் புகழ்.
ஜெய் ஹிந்த் 💕
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக