காரைக்குடி புத்தகத் திருவிழாவின் பொறுப்பு முதல் நான்கு ஆண்டுகள் என் பொறுப்பில் இருந்தது.
மனிதமேம்பாட்டு அறிவியல் அமைப்பால் (FASOHD) நடத்தப்பட்ட இத்திருவிழாவிற்கு காரைக்குடியின் பல முக்கிய அமைப்புக்களின் ஆதரவைத்தேடிக் கேட்டுப் பெற்றேன். அதனாலேயே இத்திருவிழா முதல் ஆண்டிலேயே பெரும் வெற்றி அடைந்தது.
காரைக்குடியி்ன் பல முக்கிய மனிதர்கள் தொடர்பும் நட்பும் எனக்குக் கிடைத்தன. அப்படி நான் அறிந்தவர்தான் பேராசிரியர் அய்க்கண்.
சிறந்த பேராசிரியர். சிறந்த எழுத்தாளர். சமுதாயத்தில் பெரிதாக மதிக்கப்படுபவர்.
அவருடன் பழகிய அந்த நாட்கள் மிக இனிமையானவை.
விழாவின் வெற்றிக்கு அவரது பங்களிப்பு, பன்முக ஆளுமை மிக முக்கியமானது.
அந்த அமைப்பிலிருந்து விலகியபின், விருப்ப ஓய்வுபெற்று சென்னை சென்றபிறகு தொடர்பு இல்லாமல் போனது.
இன்று காலை செய்தித்தாளில் அவரது நினைவேந்தல் செய்தி கண்ணில் பட்டபோது பழைய நினைவுகள் மனதில் ஓடின.
அன்னாருக்கு எனது மனமார்ந்த அஞ்சலி!
- சூரி
அவரது மறைவைப் பற்றி அறிந்தபோது வருத்தமாக இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக