10 ஏப்., 2022

தொண்டை சதை வளர்ச்சி (Tonsillitis) - சில குறிப்புகள்



ஹோமியோ சிந்தனை - 12
********************

தொண்டை சதை வளர்ச்சி (Tonsils) தொந்தரவுகளுக்கு சில குறிப்புகள்:-

தீவிரமான டான்சில் வேக்காடு -  பெரும்பாலான இத்தகைய துயரத்தின் ஆரம்ப நிலையில் தொண்டை சிவப்பாக இருந்தால் "பெல்லடோனா" கொடுத்தால் அந்த நிலையை சரிசெய்யும். அவ்விடம் கருஞ்சிவப்பாக இருந்து புண்ணும் துர்நாற்றமுள்ள மூச்சும் இருந்தால் "மெர்க்குரியஸ்" குணப்படுத்தும். அத்துடன் சீழ் உண்டாகும் போன்ற நிலை இருந்தால், "ஹிபார்(Hepar) கொடுக்கப்பட வேண்டும்.

டாக்டர்.கஸ்டிஸ், M.D.


டான்சில் வேக்காடு ஏற்பட்டு அதற்குப் பின்பு தன்னிச்சையாக இழுப்பு (chorea) உண்டாதல்; அத்துடன் கீல்வாதமும் (Rheumatism) ஏற்படுதல். இத்தகைய, சிறுவயதில் ஏற்பட்ட கீல்வாதத்தினால் பிறகு இதயம் பாதிக்கப்படுதல் -   இவைகளில் துயரர் எந்த நிலையில் இருந்தாலும்  "ஸ்ட்ரெப்டோகாகின்" என்ற மருந்து அவரை முழுமையாக நலப்படுத்துகிறது.

டாக்டர். டைலர்,M.D.


ஒரு மருத்துவ குறிப்பு:- டான்சில் அழற்சி உண்டாவது கீல்வாதம் ஏற்படுவதற்கான ஒரு முன்னறிவிப்பு. நம்மிடம் வரும் டான்சில் அழற்சி (Tonsillitis) துயர்நிலைகளையும், தொண்டையில் ஏற்படும் தொற்றுக்களையும் நாம் மருத்துவம் செய்யும்போது நாம் சரியான முறையில் நல்ல கவனம் செலுத்தினால், பின்னாட்களில் கீல்வாதமும், அதனால் இதயம் பாதிக்கப்பட்டு துயர்நிலை உண்டாவதையும் நம்மால் தடுக்க முடியும். தொண்டையில் ஏற்படும் தொற்றுகளுக்கும்,அதன் பின் கீல்வாதத்தினால் இதயம் பாதிக்கப்பட்டு துயர்நிலை உண்டாவதற்கும் இருக்கும் உறவை பற்றி பொதுமக்களின் மனதில் பதியும்படி கூறவேண்டும். 



தவிர்க்க முடியாத காரணங்களினால் அறுவை செய்தால் -

டான்சில் அறுவைக்கு பிறகு சிலருக்கு வாந்தி உண்டாக நேரிடும். அந்த சமயத்தில் பெர்ரம் மெட்டாலிகம் மருந்தின் 30 வீரியத்தில் கொடுத்தால் ஓரிரு வேளையிலேயே  சீக்கிரம் குணமாகும்.

டாக்டர். பௌபிஸ்டர்.


டான்சில் அறுவை செய்தபிறகு துயரர் வெளுத்தும் மெலிந்தும் கண்களுக்குக்கீழ் கருவட்டம் படிந்தும், பசியின்றி உற்சாகமின்றி இருந்தால் அந்த சமயத்திலும் "ஸ்ரெப்டோகாகின் 1M" வீரியத்தில் அவருக்கு அளித்தால் விரைவில் நலமடைவார். 

டாக்டர்.R.B.தாஸ்.

கருத்துகள் இல்லை: