என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
30 டிச., 2022
இன்று சில தகவல்கள்
1) சீயக்காய், தேய்த்து குளிக்க சொன்னது கூந்தல் வளர அல்ல, ஈரு/பேன்/கொசுவை ஒழிக்க..!!!
2) தினமும் குளிக்க சொல்வது உடல் சுத்தத்திற்காக அல்ல, கெட்ட ஆவீயை (உடல் சூட்டை) தனிக்க...!!!
3) பெண்களை மஞ்சள் தேய்த்து குளிக்க சொல்வது...!!!மஞ்சள் ஒரு கிருமி நாசினி, பெண்களின் முகத்தில் எளிதில் தோன்றும் கரும்புள்ளி, முகப்பரு, தோள் வரண்டு கடினமாகுதல் போன்றவையை ஒழிக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு...,மஞ்சள் ஒரு மிகப்பெரிய மருத்துவம்...!!!
4) கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஒரு கொத்து வேப்பிலையை வைக்க சொல்வது...!!! பேய்/பிசாசு அண்டாமல் இருக்க அல்ல...!!! பொதுவாக சாதாரண பெண்களைவிட கர்ப்பிணி பெண்களின் உடல் சூடு அதிகளவில் வெளிப்படும், வேப்பிலையின் மருத்துவம் அறிந்த நாம் அவற்றை சாமி என்றும் வணங்குகின்றோம்...!!!
5) சாணி தெளித்து அரிசி மாவில் கோலம் இடுதல், சாணியை கரைத்து அடுப்பு புடையை பூசுதல், வீட்டு தூண்களில் மஞ்சள் குங்குமம் பூசுதல், வீட்டின் வாசற்படி கொல்லையில் வேப்பமரம், துளசி செடி வைத்தல், கதவு கைப்பிடிகளில் மஞ்சள் கொண்டு பொட்டு வைத்தல்...!!! போன்றவை எல்லாம் சாமி அல்ல... இவையாவும் தமிழரின் அறிவியல் மருத்துவமே... சில படித்த முட்டாள்கள் இவற்றை மூடநம்பிக்கை என்றும் அறிவில்லாத்தனம் என்றும் புறக்கணித்து ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாய் அலைந்து திரிகிறார்கள்...!!!
6) தண்ணீர் அதிகம் குடிக்க சொல்வது தாகம் தீர அல்ல, உடலின் 75% தண்ணீர் இருக்கிறது தண்ணீர் உடலுறுப்புகளை சுத்தம் செய்கிறது, அதிகாலையில் பழைய சோறு நீர் அருந்தும் பழக்கமுடையவர்களுக்கு வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது ஆயுள் அதிகரிக்கும் என்று வெள்ளைக்காரன் இப்போது விளம்பரம் செய்கிறான்...!!!
7) தரையில் சம்மணம் போட்டு சாப்பிட சொல்வது கேவளம் அல்ல...!!!
தரையில் அமருவது ஒருவகை யோகாசனம், முதுகெலும்பு நேர்கொண்டு வயிறு விரிய உதவிடும் ஆதலால் நீங்கள் சாப்பிடும் உணவு திகட்டாது உணவின் ருசி மூலைக்கு சென்று அதை நம்மை உணர வைக்கிறது,
8) குச்சிப்பாய்/கோரப்பாயில் படுத்துறங்க சொல்வது...!!!பாய் உடல் சூடை உள்வாங்கக்கூடியது, கல்வி கற்கும் சிறு பிள்ளைகள் பாயில் உறங்குவது இளம் வயது கூண்முதுகு விளாது, கர்ப்பிணி பெண்கள் பாயில் படுத்துறங்குவது இடுப்பு எலும்பு விரிந்து சுயபிரசவத்திற்கு உதவிடுகிறது, ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது குஷன் பெட், பஞ்சு மெத்தை யாவும் குச்சிப்பாய்கு ஈடாகாது,
9) பாத்திரம் கழுவ இலுப்பைத்தூள், அடுப்பு சாம்பல் பயன்படுத்திய காலத்தில் சாக்கடையில் தவளைகள்/தேரைகள் வாழ்ந்தன, வீட்டினுள் தவளை வந்தால் அதை கொல்லவேண்டாம் பிடித்து வெளியே விட்டுவிடு என பெரியோர்கள் சொல்வார்கள் அது ஏன் தெரியுமா???
தவளை மனிதனின் மருத்துவன், ஒரு தவளை ஆயிரக்கணக்கில் உருவாகும் கொசு முட்டைகளை உண்டு மனிதனை காலரா/டெங்கு/காய்ச்சல், போன்ற நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றும், ஒரு தட்டான்பூச்சி நாள் ஒன்றுக்கு ஆயிரம் கொசு முட்டைகளை தின்றுவிடும் புதர்கள், குட்டை, குளங்கள், காடு, கரைகளை எல்லாம் நாம் ஒழிக்க .இப்பொழுது தவளையும் இல்லை; தட்டானும் இல்லை...
10) உலகிலேயே மட்டமான சமையல் எண்ணெய் எது தெரியுமா???
"சூரியகாந்தி எண்ணெய்தான், டிவி,யில் மணிக்கொரு முறை விளம்பரம் போட்டு நம்மை முட்டாளாக்கிவிட்டனர், "சூரியகாந்தி" எண்ணெய்யில் எந்த புரத நார் சத்துக்களும் கிடையாது,
11) வயதானவர்களுக்கு வரும் மூட்டு வலிக்கு கடலை/நல்லெண்ணையே ஊர வைத்த வெள்ளை துணியை கொண்டு வலிக்கும் அந்த இடத்தில் கட்டிக்கொள்வார்கள் அது ஏன் தெரியுமா???
12) கைக்குழந்தை அதிகமாக அழும்போது அதன் தொப்பிளில் நாளு சொட்டு நல்லெண்ணை விடுவார்கள் அது ஏன் தெரியுமா???
13) நெஞ்சு சளி அதிகமாக இருக்கிறது என்றால் கர்பூரத்தை சூடு ஆக்கி வெற்றிலையில் தடவி நெஞ்சில் வைப்பார்கள் அது ஏன் தெரியுமா???
இவையெல்லாம் மருத்துவம் அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டவை... சிலர் இவற்றை சாமி என்பார்கள்... அதாவது நல்லது செய்பவை யாவும் சாமி என்று பொருள்...
இயற்கையை மறந்து செயற்கையாய் கொசுவர்த்தி Allout எனில் வாங்கி... மஞ்சள்காமாலை, காலரா, டெங்கு காய்ச்சல்... போன்ற நோய்களை மனிதனைக் கொல்கிறது .முடிந்தவரை இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.நம்மால் இயற்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற வகையில் செயல்பட வேண்டும்.
நாம் இயற்கையை அழித்தல் இயற்கை நம்மை அழித்துவிடு...
இன்றைய மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம், அவன் இயற்கையை மறந்து செயற்கைக்கு மாறியதே...
இயற்கை மனிதனை வாழவைக்கும் , செயற்கை மிஷின் வாழ்க்கை மனிதனை கொன்றழிக்கும்.

நன்றி:
திரு கே எம் கிருஷ்ணன், சிதம்பர ராஜ்யம் வாட்ஸ்அப் குழு
29 டிச., 2022
28 டிச., 2022
நூல் நயம்
" குதிரைக்காரனின் புத்தகம் ".
மஞ்சுநாத் .அகநாழிகை வெளியீடு .
முதல் பதிப்பு 2021 விலை ரூபாய் 200 மொத்த பக்கங்கள் 168.
பனிரெண்டு சிறுகதைள் உள்ள 'குதிரைக்காரனின் புத்தகம்' என்ற இந்தத் தொகுப்பு, புதிதாக எழுத முனைகிற ஒருவரது கடந்த, நிகழ் காலங்களின் கதைப் பதிவுகளை உள்ளடக்கியதாக உள்ளது. தொடர்ச்சியான தீவிர வாசிப்பும், பயிற்சியும், அதன் மூலம் அவரது மொழி அடைந்திருக்கும் மேம்படுத்தலையும் உணர்த்துவதாக உள்ளது.
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்*, என்று அப்பர் பெருமான் அருளிச் செய்தார். திரு மஞ்சுநாத் அவர்களின் கதைகள் படிப்போர் உள்ளத்தை பரவசம் ஆக்குகின்றன .அதில் தெள்ளுதமிழ் துள்ளுகிறது.இனிமை தேன் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுகின்றது .பொருள் நயம் களிநடம் புரிகின்றது..
கதைகளில் இனிமை இருக்கின்றது .அழகு இருக்கின்றது .எளிமை இருக்கின்றது. இவைகளுக்கும் மேலே உயிரோட்டம் இருக்கின்றது .
எடுக்கவோ கோர்க்கவோ என்று சிந்திவிட்ட முத்துக்களை பார்த்து துரியோதனன் சொன்னதுபோல இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு எதை எடுத்துச் சொல்வது எதை விடுத்துச் செல்வது என்று புரியாமல் தவிக்கின்றேன்.
He who finds elevated and lofty pleasure in the feeling of poetry is a true poet, though he never composed a line of verse in his entire life -time.
Mad.Dudevant.
எவனொருவன் க(வி)தையை படிக்கும் போது தன்னை மறந்து ஓங்கிய இன்பம் அடைகின்றானோ அவன் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு அடிகூட க(வி)தை எழுதாதவன் ஆயினும் அவனே உண்மை கவிஞன்,கலைஞன் ஆவான் என்கிறார் அறிஞர் Mad.Dudevant.
இது முற்றிலும் மஞ்சுநாத் அவர்களுக்கு பொருந்தும்.
#######
ஆசிரியர் குறிப்பு:
மஞ்சுநாத் ,கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஆலூரில் பிறந்து,தற்போது புதுச்சேரி, பாகூர் பகுதியில் வசித்து வரும் இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாற்று அறிவியலும், சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் மருந்தாளுநர் கல்வியும் நிறைவு செய்தவர்.
பன்முகத்தன்மை கொண்ட தீவிர வாசிப்பாளர். மாறுபட்ட எழுத்தாக்கமும் ஆழமான விமர்சகத் திறனும் கொண்டவர். இவரது சிறுகதைகள், புத்தகத் திறனாய்வுகள், விமர்சனங்கள், பயணங்கள், உணவு மற்றும் நலவாழ்வு தொடர்பான கட்டுரைகள் சிற்றிதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் தொடர்ந்து வெளியாகி வாசகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. துடிப்பான ஊர்சுற்றியான இவரது பட்டியலில் இமயமலைச் சிகரங்கள் ஒவ்வொரு ஆண்டும் நீங்காமல் இடம்பெறுகின்றன. இவரது குறுங்கவிதைகள் அகத்தை அசைக்கும் அனுபவத்தைக் கொண்டவை. பாரம்பரிய தமிழர் மருத்துவமான சித்த மருத்துவத்தின் மருந்து செய்யும் கலையில் திறன் பெற்றவர்.
புதுச்சேரியில் மூத்த சித்த மருத்துவ மருந்தாளுநராக பணிபுரிந்து வருகிறார்.
####
* பெருநீர்க் கல் பொரு சிறு நுரை*என்ற தலைப்பில் அணிந்துரையாக
பொன். வாசுதேவன் அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்
"வாழ்க்கையின் சம்பவங்களோடும் அதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களோடும் பின்னிப்பிணைந்து எழுதப்படுகிற படைப்புகள் எப்போதும் வாசிக்கச் சலிப்பேற்படுத்துவதில்லை. எழுதுவென்பது சில நேரங்களில் ஆத்மார்த்த திருப்தியைத் தருவதாகவும், சில நேரங்களில் துயர்களைத் தருவதாகுமே இருக்கிறது. முழுமையாக்கி எழுத முடியாத எத்தனையோ விஷயங்களை எழுத்தாளனின் மனம் கருக்கொண்டிருக்கிறது.
சிதைக்கப்பட்ட தனி மனித உணர்ச்சிகளை, தேயும் மனதின் சக்திகளைப் பற்றிய சித்தரிப்புகளை கதைகளில் விவரிக்கும் போது அதில் ஓர் அழகியல் அம்சம் வந்து விடுகிறது."
"மனித வாழ்வின் அவலங்கள், அகச்சிக்கல்கள், மனிதாபிமானம், ஆன்ம சுத்தி, சித்த மூலங்கள், வாழ்க்கை மீதான ஏளனங்கள், அலட்சியங்களைப் பேசுகின்ற இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் வேறு வேறு பரிமாணங்களில் பயணிக்கின்றன. வளர்ந்து வந்த வாழ்க்கை, பல்வேறு தரப்பட்ட மக்களோடு பழகும் வாய்ப்பு, அவர்களது வாழ்க்கை, எண்ணங்கள், ஆசைகள், அபிலாஷைகள் பற்றியெல்லாம் கூர்ந்து கவனிப்பதற்கான ஒரு நிலை நூலாசிரியர் மஞ்சுநாத்திற்கு வாய்த்திருக்கிறது. இவையே அவரது கதைகளின் அடிநாதமாக உள்ளது. இது கதைசொல்லலுக்கு பலம் சேர்க்கிறது."
"எளிமையான முறையில், அதே சமயம் நிகழ்ச்சிகள் ஆழமாக, ஒழுங்காகப் பின்னப்பட்டிருக்கும் நுட்பத்தைப் பேசுகிற கதைகள் ஈர்க்கின்றன.
"தொகுப்பின் கதைகளை வாசித்து முடிக்கையில் அலையடித்து மோதும் கடலின் பொருமிய தன்மைதான் உணர்வில் பளிச்சிடுகிறது."என்கிறார் தனது அணிந்துரையில் பொன். வாசுதேவன்
####
*புனைவுகளில் பொதிந்த பூரணம்*என்ற தலைப்பில் தனது முன்னுரையில் கீழ்கண்டவாறு கூறுகிறார் ஆசிரியர்:,
" வாழ்க்கையானது இந்தக் கணத்தில் கூட உங்கள் சுவாசத்தின் வழியே வெளியேறிக் கரைந்து கொண்டிருக்கிறது. உண்ணும் போதும் உறங்கும் போது புணரும் போதும் அல்லது எந்தவொரு செயலை செய்யும் பொழுதும், உங்கள் சுவாசம் போல் வாழ்க்கை, அதாவது உங்கள் மகிழ்ச்சி கரைந்து கொண்டிருக்கிறது.
இதை உணரும் போது வாழ்க்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிகழ்வும் அல்ல அல்லது எதிர்காலத்தில் செயல்கள் பல செய்து அடைய வேண்டிய நோக்கமும் அல்ல. அது இங்கே இப்பொழுதே நிகழ்ந்து கொண்டிருக்கும் நிதர்சனம். இந்த நிதர்சனம் தரிசனமாகும் போது நமது செயல்கள் மகிழ்ச்சிக்காக அல்ல. மாறாக செயல்களே மகிழ்ச்சியின் நீட்சிதான் என்பது புலனாகும். ஒவ்வொரு மூச்சுக்காற்றும் மகிழ்ச்சியின் உயிர்த்துடிப்பு என்று உணர்ந்தவர்களுக்கு இந்த வாழ்க்கை இங்கேயும் எங்கேயும் இப்பொழுதும் எப்பொழுதும் கொண்டாட்டம்தான்.
இந்த உண்மையை இலக்கியங்கள் பல்வேறு வடிவங்களில் உணர்த்தி வருகின்றன.
வாழ்வின் உயிர்ப்பான அனுபவங்கள் புனைவாகும் பொழுது அங்கு புனைவு என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு உயிர்ப்பு மட்டுமே பிரதிபலிக்கிறது."என்கிறார் தனது முன்னுரையில் ஆசிரியர்.
####
இனி இந்த புத்தகம் குறித்து பார்ப்போம்:
இந்த புத்தகத்தில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் இடம் பெற்றிருக்கிறது.
1. நகுநா
2.மரம் சொன்னது
3. தனிமையின் விபத்து
4. பரம சந்தோஷம்
5. நிலவு சாட்சி
6. இருட்டுக்குள் வெளிச்சம்
7.சுவானா
8. குதிரைக்காரனின் புத்தகம்
9. ருத்ர விந்து
10. ஊருக்கெல்லாம் ஒரே வானம்
11. புகைச்சல்
12. மூக்கைப் பொத்தாதே.
இந்த புத்தகம் எனது கைக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிறது .அவ்வப்போது எடுத்து படிக்கிறேன் .பதிவு செய்யவேண்டும் என்று விரும்பிய நாட்கள் இப்போ முட்களாய் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. நேற்று இரவு ஒரு கனவு .கனவில் ஒரு பக்கம் திறந்த வெள்ளம் ஓடி வருவது போலவும், மறு பக்கத்தில் அதை தடுத்து நிறுத்தக் கூடிய அளவில் ஏதோ அடைத்துக் கொண்டிருப்பது போலவும் ஒரு கனவு .இந்த புத்தகத்திலும் சில பல கனவுகள் அதிகமாக வருவதின் எதிரொலியாக கூட எனக்கு கனவுகள் பரிமளம் கண்டிருக்கலாம்.
1) நகுநா:
நகுநா ஒரு கரகாட்டக்காரியின் கதை .புனைவு கதை என்றாலும்
அ -புனைவு கதைக்குரிய எல்லா பரிமாணங்களையும் உள்ளடக்கி எழுதப்பட்டிருக்கிறது .ஒரு சிறுகதைக்குள் 30 ஆண்டுகால அனுபவத்தை கடுகைத் துளைத்து தந்தது போல் இருக்கிறது.
நான் ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது எனது பக்கத்தில் ராஜேந்திரன் என்கிற நெசவு தொழிலாளி மகன் அமர்ந்திருப்பான்.ராஜா ராணி கதைகள் எம்ஜிஆர் கதைகளை குதிரையில் செல்லும்போது குதிரை குளம்படி ஓசை எல்லாம் வாயினால் சொல்லி கதை சொல்லுவான் .
அது போன்றதொரு கதாபாத்திரம் சந்தோஷ்குமார் .அவனும் பாவுகளுக்கு நூலிழைழைகளுக்கு சாயம் ஏற்றுவதற்கான சாயப்பட்டறைகள் நடத்திவந்த ஒருவனின் மகன்.
பள்ளி நண்பர்களோடு இவன் கதை சொல்வான் .தனியே ஒரு கூட்டம் இருக்கும் இவளை சுற்றி கதை கேட்க.இவனது கதைகள் பெரும்பாலும் பெண்களை குறித்த வர்ணிப்பு தான் அதிகமாக இருக்கும் .
பெண்களின் மார்பகங்களை விதவிதமாக வர்ணிப்பான். மார்பகங்களின் கவர்ச்சியை வார்த்தைகளில் கொண்டு வருவான் வாயைப் பிளந்து கொண்டு கேட்பவர்களின் உடல் சிறு ஆனந்த அதிர்வில் படப்படப்பாக இருக்கும். ஒருவேளை பெண்களுக்கு மார்பகங்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மனிதனின்பிறப்புச்சங்கிலி அறுந்து போயிருக்கும் என்பான். அதில் இருக்கும் கவர்ச்சியும் ஈர்ப்பும்தான் மனிதனில் இச்சைக்கு காரணம். இச்சையின்றி ஜனனம் கிடையாது என்பான்.
தஞ்சை பெரிய கோயிலின் நிழல் கீழே படியாமல் இருக்குமாறு கட்டிடம் செய்ததற்கு காரணமே பெண்ணின் மார்பகம் தான் என்று கூறுவன்.
அந்த ஊரில் கரகாட்டம் நடக்கிறது திருவிழாவின்போது.
நகுநா என்கிற அழகான இளமையான கரகாட்டக்காரி . இவன் ஊரை விட்டு அவளோடு செல்வதுதான் கதை .எப்படி சென்றான் ஏன் சென்றான் என்பது தான் கதை.
நகுநா யாருக்குமே அடிபணியாமல் போனதால் சிலர் ரவுடி கூட்டம் அவளின் இளமை பொங்கும் அழகை அறுத்து எறிந்து விடுகிறார்கள் .இவன்தான் அருகில் இருந்து காப்பாற்றி எங்கோ அழைத்துச் சென்று வாழ்கிறான்.
நகுநா எனும் செந்தமிழ் சொல்லுக்கு சிரிக்கும் நெற்கதிர் என்று அர்த்தம்.
கதை படித்த கண்கள் கலங்காமல் இருக்க முடியாது.
2) குதிரைக்காரனின் புத்தகம்:
* திரிகுடா : ஜம்முவிலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலுள்ள வைஷ்ணவ தேவி புனித குகை ஆலயம். கட்ராவிலிருந்து 15 கி.மீ. தூரக் கடினமான மலையேற்றத்தில் அமைந்துள்ளது. குகை ஆலயத்தில் உள்ள மூன்று சுயம்பு தேவிகளைக் குறிக்கும் விதமாக இப்புனித மலைக்கு (1700 மீ. உயரம்) 'திரிகுடா' என்று பெயர்.
கட்ராவிலிருந்து திரிகுடாவிற்கு பயணிகளை குதிரை மூலம் ஏற்றி செல்பவன் அவன் .அவ்வாறு ஏற்றி செல்லும் போது கனிவான குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் தரிசனம் முடித்து இரவு தங்கிய பின் மறுநாள் காலையில் புறப்பட்டு வரும் பொழுது இவன் மீண்டும் அவர்களை குதிரையில் செல்ல அழைக்க , அவளோ இவனை தம்மோடு ஹெலிகாப்டரில் வருமாறு அழைக்க,
அது அவனுக்கு புது அனுபவமாக இருக்கிறது .அன்றைய தினம் சில கனவுகள் காண்கிறான் .தனது பிள்ளைக்கு வாங்கிய புத்தகம் குறித்து கனவு காண்கிறான்.. வினோதமான கனவு.
ஹெலிகாப்டர் மூலம் வீடு வந்து சேர்ந்த பிறகும் தூங்கச் சென்றாலும் கனவு.
கவிதை போல புரியாமல் கனவு எனக்கு இருந்தாலும் இனிக்கிறது.
3) ருத்ர விந்து:
பெரியவர் சுப்பிரமணியம் திடீரென மாரடைப்பால் இறந்து விடுகிறார் சித்த மருத்துவமனையில்.
சிவகுருவுக்கு மூன்று நாள் பழக்கம் உள்ளவர் அவர் சிவகுரு மருந்தாளுனர் சுவாமிநாதன் அங்கு மருத்துவர். சிவகுருவிற்க்கும் பெரியவர் சுப்பிரமணி திற்கும் உள்ள தொடர்பில் இந்த கதை எழுதப்பட்டிருக்கிறது.
நேற்று முன்தினம்தான் சிவகுரு சித்த மருத்துவ மருந்தாளுநராக இந்த இடத்திற்கு மாற்றலாகி வந்திருந்தார். பாரம்பரிய சித்த மருத்துவ நூல்கள் கூறும் 32 புறமருந்து வகைகளும் 32 அகமருந்து வகைகளும் அவருக்கு அத்துபடி.
தாது மருந்துகள் செய்வதில் தேர்ச்சியும் ரசக்கட்டு செய்வதில் ஆழ்ந்த திறனும் படைத்தவர். நவீன விஞ்ஞான முறைகளால் பாதரசத்தை (மெர்க்குரி) திடநிலைக்கு மாற்றமடையச் செய்ய இயலாது; சித்த வைத்திய முறைப்படி முடியும்.
ரசத்தின் அனேக பெயர்களை அவர் அறிவார் : "பாரதம், பூதம், கனல், வேதம், விஜயம், விக்கியம், நாகம், போகம், ஞானம், கற்பம், காரம், சுக்கிலம், சூதம், சூத்திரன், ருத்ர விந்து, பாய்ந்திடு தூமம், பனிமை, பராபரம், கனிமை, ஆதி, அந்தகரந்தன், சுந்தரன், மகாமரம், கந்தம், கேசரி, வேந்தன், வஞ் சகம், ரௌத்ரகாரம், அரவீரியம், மகாதேவபலம், கமலினி, சிவம்"என.
பணியில் சேர்ந்த மறுநாள் சிவசுப்பிரமணியம் மருத்துவமனைக்கு தண்ணீர் குப்பி விநியோகிக்க வர இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது சிவகுரு கழுத்திலிருந்த பசுஞ்சாம்பல் நிற ரசமணி குறித்து பெரியவர் வினவினார்.
பெரியவருக்கு மருமகளும் மகனும் வேலைக்கு செல்ல, பள்ளியில் படிக்கும் பேத்தியை அழைத்து வர வேண்டும். முன்னாள் அஞ்சல் துறை சிப்பந்தி தனது செலவில் நோயாளிகளுக்கு காகித டம்ளர்கள் தந்து கொண்டிருக்கிறார்.
"இது செய்வதற்கு தப்த கல்வமும்* சித்தர்களின் பாடலும்,பாரம்பரிய தொழில்நுட்ப அறிவும் இறையருளும் தேவை. ரசத்தை சரியான வகையில் சுத்தப்படுத்தினால்தான் அதிலுள்ள எட்டு வகையான தோடங்கள் (உண்டீனம், கௌடில்யம், அநவர்த்தம், சங்கரம், சண்டத்தவம், பங்குத்வம், பளுவால் சமளத்வம், சவிஷத்வம் ) நீங்கும்.இதையெல்லாம் அறிந்து கொள்ளவே எனக்கு மூன்று வருடங்கள் பிடித்தது”
" எதுக்காக உருவாக்கினீங்க?” பெரியவர் கேட்க,
"பொன்னுலகை அடக்கும் சித்தியாகும் மலமாகும் தேகத்தையும் மலரச்செய்வோம்" . மேலும்,
"நிறைய பிச்சைக்கார சாமியார்கள் கஞ்சாவை புகைத்துக் காண்டு ஞானம் என்று உளறுவார்கள். குரு குளிகையை சரியான யமத்தில் நாம் பயன்படுத்தும்போது மனம் கட்டவிழ்ந்து பாகாமல் நமது கட்டுப்பாட்டில் இருக்கும். ஞானம் நோக்கிய பாதையை விரைவுபடுத்தும். மூப்பை ஒழித்து மரணத்தையும் வல்லவும் முடியும்"
. "ரசம் எல்லாவற்றுக்கும் சக்ரவர்த்தி. சகல மந்திர தந்திரங்களுக்கும் இது எமன் போன்றது. உலகத்துல இதற்கு ஈடானது எதுமே கிடையாது" என்று என்று சொல்லி அந்த மாலையை பெரியவர்தான் வாங்கி அணிந்து கொண்டு அவன் தோள் மீது சாய்ந்து இறந்துவிட்டார் சாவு கிடங்கில் கிடைத்திருக்கிறார்கள் சிவகுரு அவர்களின் வீட்டுக்கு தொலைபேசி கிரான் 4 மணி நேரம் கடந்துவிட்டது ஓடிப்போய் பெரியவர்களும் சடலத்தை பார்ப்பதற்காக செல்கிறான்.
" பெரியவர் உயிரற்ற உடலாகக் கிடந்த அந்த நீண்ட மர இருக்கையின் மீது சம்மணமிட்டபடி அமர்ந்திருந்தார். தனது கையில் வைத்திருந்த சிவகுருவின் பசுஞ்சாம்பல் நிற ரசமணி மாலை எனும் ருத்ர விந்துவையே பார்த்துக்கொண்டிருந்தார்.
சிவகுரு புன்னகை பூத்தார்.
(எங்கள் குடியாத்தம் வீட்டில் 60 ஆண்டுகளுக்கு முன் ஒரு தபால்காரர் குடியிருந்தார் .அவரும் சித்தமருத்துவத்தில் நாட்டம் கொண்டு பாதரசத்தை கெட்டிப்படுத்தும் புடம் போடும் பணியை செய்து கொண்டிருப்பார். நானும் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். எனது பழைய நினைவுகளை இந்த கதை கிளறிவிட்டு விட்டது
தப்த கல்வம்: இரும்பு அல்லது நன்னி கல்லினால் செய்ப்பட்ட புதிய கல்வத்தை தனிவீட்டில் பள்ளம் தோண்டி அதில் வைத்து அதன் மீது வெள்ளாட்டு ரோமத்தையும் நெல் உமியையும் போட்டு அதில் நெருப்பிட்டு அந்த தீ அதில் படரும்படி செய்வதால் அக்கல்வம் தப்த கல்வமாகிறது. மருந்தின் மூலப்பொருளாக பயன்படுத்துவதற்கு முன்பு பாதரசத்தினை சுத்திகரிப்பதற்கு இந்த தப்த கல்வம் பயன்படுத்தப்படுகிறது)
######
When you turn the last page and feel a little as if you have lost a friend. ஒரு புத்தகத்தை படித்து முடித்த பிறகு ஒரு நல்ல நட்பினை இழந்து விடுவோமோ என்கிற எண்ணம் மரத்தடி அளவில் அந்த புத்தகத்தின் பாதிப்பு இருக்குமேயானால் அது நல்ல புத்தகத்தை அடையாளம் என்று படித்த நினைவு அது இந்த புத்தகத்திற்கு பொருந்தும்.
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம் மஞ்சுநாத் கன்னி முயற்சி கண்டதொரு குதிரைக்காரன் புத்தகம் .
* இரும்புக்குதிரை *எழுதியவர் உலக வாசகர் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்டது போல இந்த *குதிரைக்காரன் புத்தகம் * எழுதிய ஆளனும் நாளை இந்த உலகை ஆளும் நாள் வரணும்.
வித்தகம் நிரம்ப அவன் சித்தம் உள்ளதினால் புத்தகம் தத்தை தரும் முத்தம் போல் சித்திக்கிறது ; தித்திக்கிறது ; வற்றாத ஜீவநதி, இவன் காலடிபட்ட இமயமலை கங்கை போல் பரிசுத்தமாய் பாரிஜாதம் உணர்வில் காட்டுகிறது.
எத்திக்கும் தித்திக்கும் இன்ப கவிதைகளை சித்திக்கும் வித்தாக செப்புகின்றான்-
சத்திக்கும்
மஞ்சு நாதா தன் கொஞ்சு தமிழால் வண்ணம் வாங்கி எண்ணம் விதைதுச் செல்கிறான் இமய மலை கங்கை
கருணையினால்
வண்ண முடன் வாழி மகிழ்ந்து.
நன்றி :
திரு கருணா மூர்த்தி
மற்றும்
முகநூல்
குட்டிக்கதை
பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்த காலத்தில் பாண்டவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்து விட்டு வரலாம் என்று நினைத்தார் கிருஷ்ணர். உடனே புறப்பட்டு காட்டுக்கு போனார். அவர்களைப் பார்த்தார். அவர்களோடு ஓர் இரவு தங்கினார்.
அப்போது பாண்டவர்கள் அவருக்கு காவல் காத்தார்கள். இரவு காவல் ஒருவர் மாறி ஒருவர் கண் முழித்துக் காவல் காக்க வேண்டும். ஆளுக்கு கொஞ்ச நேரம். முதலில் அர்ஜுனன் காவல் காத்தான். எல்லோரும் தூங்குகிறார்கள். அவன் மட்டும் முழித்துக் கொண்டிருக்கிறான். அப்போது எதிரில் ஏதோ ஒரு உருவம் தெரிந்தது. உற்றுப் பார்த்தான் அது ஒரு பூதம். அது எதிரில் கொஞ்ச தூரத்தில் நின்று கொண்டிருந்தது.
இவன் நேரம் முடிந்தது.
அடுத்தபடியாக நகுலன் காவல் காக்க வந்தான். இப்போதும் அந்த பூதம் கண்ணில் பட்டது.ஆனால் அது முதல் இருந்ததை விட கொஞ்சம் பெரிதாக தெரிகிறது. இவனுக்கு அடுத்தபடியாக சகாதேவன், பீமன், தருமன் இப்படி மாறி மாறி காவல் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். வர வர பூதத்தின் வடிவம் பெரிதாகிக் கொண்டே வந்தது. ஒவ்வொருவரும் அதை கொல்ல முயற்சி செய்தார்கள்.
இரவு காவல் பணியிலே பாண்டவர்கள் மாறி மாறி ஈடுபடுவதை பார்த்தார் கிருஷ்ணர். தர்மரைப் பார்த்து கேட்டார் இந்த காவல் பணியில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க கூடாதா? நானும் கூட சிறிது நேரம் கண் விழித்து காவல் காக்கிறேன் என்றார்.
செய்யுங்களேன். இந்த உலகத்தையே பாதுகாப்பதும் நீங்கள் தான். பாண்டவர்களை பாதுகாப்பது நீங்கள் தான். இந்த பாதுகாவல் பணியில் ஈடுபட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதை வேண்டாம் என்று சொல்ல நாங்கள் யார் என்றார்.
ஒவ்வொருவராக காவல் காத்து முடிந்ததும் இப்போது கிருஷ்ணர் வர வேண்டிய முறை காவலுக்கு கிருஷ்ணர் புறப்பட்டார்.
இப்போது தருமர் சொன்னார் கிருஷ்ணா காட்டில் ஒரு பெரிய பூதம் இருக்கிறது. அது வரவர பெரிதாகிக் கொண்டிருக்கிறது. அது உங்களுக்கு ஏதாவது இடைஞ்சல் கொடுக்கும் அதனால் நீங்கள் போகாமல் இருப்பது நல்லது என்றார்.
அதற்கு கிருஷ்ணர் சொன்னார் இப்படி என் மேல் உனக்குச் சந்தேகம் வரலாமா? ஏன் இப்படிப்பட்ட சந்தேகம். அது உன்னுடைய பலவீனம். நான் நிச்சயமாக காவல் செய்யத்தான் போகிறேன் என்றார்.
நடு இரவு இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரைக்கும் அவருடைய நேரம். 3 மணிக்கு மேல் அர்ஜுனன் வரவேண்டும் அதனால் மூன்று மணிக்கு அர்ஜுனன் வந்து பார்க்கிறான் கிருஷ்ணர் சிரித்துக் கொண்டு இருக்கிறார். அவன் எதிரில் பார்க்கிறான். பூதத்தையும் காணவில்லை. பிசாசையும் காணவில்லை.
அர்ஜூனன் கேட்கிறான் கிருஷ்ணா நீ அந்த பூத அரக்கனை அழித்து விட்டாயா?
இப்போது கிருஷ்ணர் சொல்கிறார். அர்ஜுனா நான் எந்த பூதத்தையும் பிசாசையும் அழிக்கவில்லை.
என் கண்ணுக்கு அப்படி எதுவுமே தெரியவில்லை. எல்லாமே நம்முடைய பிரதிபலிப்புதான். நம்முடைய கோபம் தான் நமக்கு முன் அரக்கத்தனமாக காட்சியளிக்கிறது.எவ்வளவுக்கு எவ்வளவு கோபம் அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு சமமாக அதுவும் வளர்கிறது. எனக்கு யார் மீதும் கோபமோ வெறுப்போ இல்லை.
உண்மையிலே நமக்கென்று யாரும் எதிரிகள் கிடையாது நம்முடைய குணங்கள் தான் நமக்கு எதிரிகள். உள்ளே இருக்கிற உணர்வுகள் தான் நமக்கு பிரதிபம்பமாக வெளியே தெரிகிறது. வெறுப்பே இல்லாமல் எல்லாத்தையும் அன்பால் நிரப்பும்போது நம் கண் முன்னால் அன்புதான் தெரியும். அரக்கன் தெரிய மாட்டான் என்கிறார் கிருஷ்ணர். இதை எல்லாம் சரியாக புரிந்து கொண்டால் எல்லோரும் இன்பமாக வாழலாம்.

26 டிச., 2022
25 டிச., 2022
24 டிச., 2022
MGR நினைவுகள்
M.G.R நினைவு தினம்!
ஒரு சம்பவம் !
எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது சென்னை
"கன்னிமாரா ஹோட்டல்" என்ற நட்சத்திர ஹோட்டலில் அடிக்கடி விருந்து நடக்கும்.
ஹோட்டலில் இருந்து வெளியே அண்ணாசாலை வரை
சுமார் 200 மீட்டர் தூரம்
மிக மெதுவாக "எம்ஜிஆர்
கார் செல்லும்!
எல்லோரும் அவரை பார்ப்பதற்கு வசதியாக
ஒரு பிரகாசமான சிறு
விளக்கும் உண்டு.
எல்லாரையும் கை கூப்பி
வணங்கியபடியே செல்வார்.
ஹோட்டலின் எதிர்ப்புறம்
பெண்கள் கலைக்கல்லூரி
இருக்கிறது !
ஒருநாள் விருந்து முடிந்து
மூன்று மணி இருக்கும்!
கலைக்கல்லூரி முன் திடீரெனவண்டி நின்றது.
வண்டியிலிருந்து இறங்கிய "எம்ஜிஆர் "
சாலையை எதிர்ப்புறமாக
கடந்தார்.
உயரதிகாரிகள் பதறியடித்து ஓடோடி வந்தனர்!
எம்ஜிஆரோ நேராக சாலையில் நின்றிருந்த
போக்குவரத்து
காவலரிடம் சென்றார்.
தோளில் கை வைத்தார்.
எம்ஜிஆரை பார்த்தாலே
போதும் என்றிருந்த காலகட்டம்.
தோளில் கை வைத்தவுடன் ஏட்டையாவுக்கு உடம்பெல்லாம் புல்லரிக்க ஆரம்பித்து விட்டது.
எம்ஜிஆர் அவரிடம்
சாப்பிட்டீர்களா ?என்று
கேட்டவுடன்
"இல்லை ஐயா நீங்கள் போனபிறகுதான் சாப்பிட
வேண்டும்" என்று உத்தரவு
என்று ஆனந்த கண்ணீருடன் சொன்னார்.
"மணி மூன்று ஆகப்போகிறது இன்னும்
சாப்பிடவில்லையா?" என்று
கேட்ட முதல்வர்
"கன்னிமாரா ஹோட்டல் "
மேனேஜரை அழைத்து
இங்கிருக்கும் அத்தனை
காவலர்களுக்கும்
ஹோட்டலில் உணவு வழங்க வேண்டும்.
அதுவும் நான் சாப்பிட்ட அதே போன்ற உணவை வழங்க
வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இன்றும் அது தொடர்வதாக
கேள்வி!
ஆயிரம் விமர்சனம் அவர்மேல் இருக்கலாம்
ஆனால் மக்களின்
நாடித்துடிப்பை அறிந்த
ஒருவர் என்றால் அது "எம்ஜிஆர் "மட்டுமே!
வஉசி நினைவுகள்
*24.12.1912*
*இந்த நாளில் ஆங்கிலேய அரசால் ராஜ துரோக வழக்கு தொடுக்கப்பட்டு 12.03.1908. தேதியில் கைது செய்யப்பட்ட கப்பலோட்டிய தமிழர் தியாகச்செம்மல் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சிறையில் செக்கிழுத்து கல்லுடைத்து எண்ணிலடாங்கா துயரங்களை அனுபவித்து 5. ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையான ( 24.12.1912) இந்நாளை நினைவு கூறுவோம்*
*ஐயா அவர்களின் தியாகங்களை நித்தம் நித்தம் நினைவு கூர்ந்து ஐயா அவர்களை போற்றி வணங்குவோம்*
ஒங்கட்டும் செக்கிழுத்த செம்மல் ஐயா.வ.உ.சி. அவர்கள் புகழ்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)