"என்னை நான் சந்தித்தேன் ."
ராஜேஷ்குமார் எழுதியது .
அமராவதி பதிப்பகம் .முதற்பதிப்பு 2017. விலை ரூபாய் 390 .மொத்த பக்கங்கள் 504.
என்னுடைய பதின்ம வயதில் இவருடைய 12 நூல்களை மட்டுமே படித்திருக்கிறேன் .இவரோ இரண்டாயிரத்துக்கும் அதிகமான சிறுகதைகள் எழுதி,1500 அதிகமான நாவல்களை எழுதியிருக்கிறார்.
2010இல் கலைமாமணி விருது பெற்றவர் .கிரைம் நாவல்கள் மட்டுமல்லாமல் சமுதாய அவலங்களை சாடும் சமூக நாவல்களையும் 1500 எண்ணிக்கையை தாண்டி இன்னமும் எழுதிக் கொண்டிருப்பவர் .
45 ஆண்டுகளில் நான்கு தலைமுறை வாசகர்களை பார்த்துக் கொண்டிருப்பவர். தமிழில் வெளிவந்த ,வெளிவந்து கொண்டிருக்கும் அனைத்து மாத வார நாளிதழ்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர்.
எழுத்துலகில் அவருக்கு நேர்ந்த அவமானங்களையும்,கிடைத்த வெகுமானங்களையும் தனக்கே உரித்தான விறுவிறுப்பான பரபரப்பான நடையில் இந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார் .
எந்தத் துறையில் பணிபுரிவதாக இருந்தாலும் இந்தப் புத்தகத்தை படித்தால் அவர் சாதனையாளராக மாற 100 சதம் உத்திரவாதம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
######
முன்னுரையில் ராஜேஷ்குமார் அவர்களின் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கிறார் .
"என்னை நான் சந்தித்தேன் "என்கிற இந்த புத்தகம் என்னுடைய இதயம் என்று தெரிவிக்கிறார் .
இது என் வாழ்க்கையின் சுயசரிதை இல்லை .நான் ஒரு எழுத்தாளராக எப்படி பரிமாணத்துடன் உருவானேன் என்பதை சொல்லும் முயற்சிதான் இது .
ஏற்கனவே ,"எவரெஸ்ட் எட்டி விடும் உயரம்தான்," என்ற புத்தகத்தில் பல விஷயங்களைச் சொல்லாமல் தவிர்த்து விட்டேன் .ஆனால் இந்த ,"என்னை நான் சந்தித்தேன் ",புத்தகத்தில் எந்த ஒரு விஷயத்தையும் மறைக்காமல் உள்ளதை உள்ளபடியே சொல்லியிருக்கிறேன் .
நான் என் வாழ்க்கையில் சந்தித்த நபர்கள் ஒரு முக்கிய பிரமுகராக இருந்தாலும், சரி ஏதாவது ஒரு கிராமத்தில் இருக்கும் வாசகராக இருந்தாலும் சரி நான் அவர்கள் அவரிடமிருந்து ஏதாவது ஒரு வகையில் பயன் தரத்தக்க அளவுக்கு கற்றுக்கொள்வதை கடமையாக வைத்திருக்கிறேன் .
அப்படி நான் கற்றுக் கொண்ட பல விஷயங்களை இதில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் .அந்த விஷயங்களில் பெரும்பாலானவை கசப்பானவை .அந்த கசப்பான சம்பவங்கள் எல்லாம் எப்படி இனிப்பாக மாறின என்பதையும் அதற்காக நான் என்னென்ன முயற்சிகள் எடுத்தேன் என்பதையும் இந்த நூலில் சொல்லியிருக்கிறேன் என்று ஆசிரியர் தனது முன்னுரையில் கூறியிருக்கிறார்.
######
34 அத்தியாயங்களில் நான் முகம் பார்த்த கண்ணாடிகள் என்று தலைப்பிட்டு ஆசிரியர் எழுதி இருக்கிறார்.
1 என் முதல் பிரசவம்.
2) ஹார்மோன் கலாட்டா
3)ஆகஸ்ட் 15-ம் நானும்
4) நானும் கடவுளும் .
5)நானும் முள் நிலவும் .
6)குமுதத்தில் என் பிரவேசம் .
7)குமுதம் ஆசிரியர் எஸ் ஏ.பியும் நானும் 8)ஆனந்த விகடனில் நான் எழுதிய புதுமை தொடர் .
9)நானும் என் வாசகர்களும் .
10)அதிசயம் ஆனால் உண்மை .
11)நினைக்காதது நடந்தது .
12)கேட்காமலேயே கிடைக்கும் பதவி உயர்வுகள் .
13)எண்கள் நம்மை ஆளுகின்ற தா நானும் நியூமராலஜியும்.
14)எண்கள் மனிதர்களும் .
15)உண்டென்றால் அது உண்டு .16)கதவைத் திறந்தேன் புயல் அடித்தது 17நான் பார்த்த மினி இந்தியா
18)இருக்கு ...ஆனா இல்லை .
19)இன்னார்க்கு இன்னாரென்று 20.மனைவி ஒரு மகா மந்திரி .
21பல நேரங்களில் பல மனிதர்கள்.
22ஒரு சின்ன தீப்பொறியும் காட்டுத் தீயும் .
23)சரி + சரி = தப்பு
24.ஒரு மில்லியன் டாலர் கேள்வி.
25)விடை இல்லா விடுகதை கள் 26)அக்கறையாய் ஒரு அக்கிரமம்.
27)அவமானங்களும் உரமாகும் .
28)தெரிந்த வார்த்தைகளும்
தெரியாத உண்மைகளும்.
29)மனித மனம் ஒரு கிரைம் நாவல் .
30அந்த ஆறு நாட்கள் .
31)என் கைக்கு சிக்கிய வைரங்கள் .
32எது சத்தியம் ..
33)ஒரு உண்மைச்சம்பவம் .
34இப்படியும் சிலர் .
35) 24 கேரட் துரோகம் எச்சரிக்கை இது கதை அல்ல ...
என்று தலைப்பிட்டு ஆசிரியர் தனது சுயசரிதையை எழுதி இருக்கிறார்.
சுகமான அனுபவங்கள் .படிக்கப் படிக்க பவளம் போல் இருக்கிறது.
என்னைப்போல கோவை விவசாய கல்லூரியில் படிக்க ஆசைப்பட ,குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் படிக்க இயலாமல் போகவே,வன அலுவலகத்தில் பணிக்கு நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் பொழுது உரிய ஆவணங்கள் தொலைந்து போய் , பணி கிடைக்காமல் போய்விடுகிறது .பிறகு ஆசிரியர் பயிற்சி பெற்று பவானிசாகரில் பணிக்கு செல்கிறார் .
நா பார்த்தசாரதி போல ,அகிலன் போல ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர் உள்ளம் குமுறி கொண்டே இருந்தது.
தினமணி கதிருக்கு ஒரு கதையை அனுப்புகிறார் .*நானும் ஹீரோ தான்* என்கிற கதை .சாவி அவர்கள் ஆசிரியர். தேர்வு செய்யப்பட்டு பிரசுரம் செய்யப்படுகிறது.
"கிரைம் மன்னன் " என்று புகழ் பெறுவதற்கு அட்டகாசமான ஆரம்பம் ஆகிவிட்டது..
அடுத்த கதை ,"அவன் அவள் அவர்கள்", கல்கியில் பிரசுரமானது.
படிப்படியாகத்தான் வளர்ந்து விதம் அதை எழுதிய விதம் எல்லாம் தெரிவிக்கிறார்
சுய சரிதை போல எதையும் மறைக்காமல் தவிர்க்காமல்.
குமுதம் ஆசிரியர் எஸ் .ஏ .பி .அவர்கள் தன்னை வளர்த்ததாகவும் ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ் .பாலசுப்ரமணியம் அவர்கள் தன்னை செதுக்கியதாகவும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்..
நேற்று எழுதினேன் .
இன்று எழுதுகிறேன் .
நாளையும் எழுதுவேன் .
இதைவிட சுவையான நிகழ்வுகளோடு மீண்டும் சந்திப்போம் இரண்டாம் பாகத்தில் என்கிறார் ஆசிரியர் ராஜேஷ் குமார். அவர்கள்.
நன்றி :
திரு கருணா மூர்த்தி
மற்றும்
முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக