7 மார்., 2023

நூல் நயம்

"மாறவர்மன் காதலி ".
கலைமாமணி விக்கிரமன். யாழினி பதிப்பகம் முதல் பரிசு 2018.மொத்த பக்கங்கள் 256.விலை ரூபாய்.160.

        சரித்திர கதை என்றாலே சாண்டில்யன் தான் அதிகம் வாசகர்களுக்கு அறிமுகம் .விக்கிரமன் அவர்கள் நிறைய சரித்திரக் கதைகளில் எழுதியிருக்கிறார் .நிறைய இளம் எழுத்தாளர்களை ஊககுவித்த்தும்
 இருக்கிறார்.

ஆசிரியர் குறிப்பு:

விக்ரமன் அவர்கள் குறித்து அறிமுகம் தேவையில்லை .மாபெரும் கலைஞர் மாபெரும் எழுத்தாளர் .கலைமாமணி விருது பெற்ற அருந்தமிழ்ப் புதல்வர்.
கலைமாமணி விக்கிரமன் அவர்கள் எல்லோரும் அறிந்த தமிழ் எழுத்தாளர். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தமிழன்னை விருது பெற்ற நாவல் இது .
வரலாற்று புதினங்கள் இப்படி இருக்க வேண்டும் என்னும் வரையறை இலக்கணம்  வகுக்கப்பட்ட பேராசிரியர் கல்கி போன்றோரின் சமகால எழுத்தாளர்களில் ஒருவர் கலைமாமணி டாக்டர் விக்கிரமன் அவர்கள். அமுதசுரபி இலக்கிய இதழில் பல வரலாற்றுக் கதைகளை எழுதி எழுதியதோடு சாண்டிலியன் போன்ற பிறரையும் எழுத வைத்து ,கல்கி அவர்களுக்குப்பின் வரலாற்றுக் கதைகளை எழுதுபவர் என ஒரு நீண்ட வரிசை எழுத்தாளர்களின் பெயர்கள் பதிவாக தளம் அமைத்து கொடுத்த பண்பாளர் விக்கிரமன்.
       இலக்கியப் பத்திரிகை ஆசிரியர். சிறந்த வரலாற்று கதைகள் பல எழுதிய எழுத்தாளர் என 60 ஆண்டுகளுக்கு மேல் அழுத்தமான தடம் பதித்த கலைமாமணி விக்கிரமன் எழுத்துலகில் வளர்த்துவிட்ட  இளம் குருத்துக்கள் ஏராளம்..
#########

வீரபாண்டியனால் சோழ அரசகுமாரர்களுள் ஒருவன் கொல்லப்பட்டான்' என்ற சரித்திரச்சான்றின் சிறு துரும்பு ஒன்றைப் பற்றிக்கொண்டு" மாறவர்மன் காதலி"எழுதப்பட்டுள்ளது.

    சரித்திரக் கதை எழுதுவது என்றாலே கற்பனை குதிரை இல்லாமல் பறக்க முடியாது.

சோழர்கள் பாண்டிய நாட்டை அடிமைப்படுத்தியிருந்த காலம். அடிமைத்தளையிலிருந்து சுதந்திர வேட்கை உடையவர்கள் கிளர்ந்து எழுவது இயற்கைதானே. நாட்டின் விடுதலைக்காகத் தங்களைத் தியாகம் செய்துகொள்ள முன் வந்த நால்வரின் சாகசங்களைக் கற்பனை வண்ணத்தால் தீட்டி எழுதப்பட்ட ஓவியமே மாறவர்மன் காதலி.

31 வாரங்கள் 'அலிபாபா' வாரப்பதிப்பில் தொடர்கதையாக வெளிவந்த சரித்திரத் தொடர்கதை 'மாறவர்மன்காதலி'முற்போக்குக் கருத்தினைக் கொண்ட 'அலிபாபா' வார இதழில், நாட்டு விடுதலையை உயிரெனக் கருதிய கதாபாத்திரங்களைக் கொண்ட கதை ஒன்று வெளி வந்தது மிகச்சிறந்ததே! 

   இறுதிப் போர் முடிந்த பிறகு மாறனின் கண்கள் வல்லபனை நோக்கின. "தலைவரே! கையெடுத்துக் கும்பிட ஒரே ஒரு கரம்தான் இருக்கிறது! 
         இந்த வெற்றிக்குத் தாங்கள்தான் காரணம்... என்கடமையைத் தான் நான் செய்தேன்" என்று பேசி வந்த மாறனுக்குச் சொல் தடுமாறியது.

       குமுதம் அவனது மார்பிலே தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். மாறன் மீண்டும் மெல்ல விழி திறந்தான்.

"பிறந்த நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமையைச் செய்தேன்...வீரபாண்டியர் அரியணை ஏறிய பிறகுதான் என் காதல், கல்யாணம் எல்லாம்...'' என்று கூறிய மாறனின் இதழ்களில் மெல்லிய புன்னகை மலர்ந்தது. வல்லபனும் காங்கேயனும் குனிந்து அவன் கூறுவதைக் கேட்க முயன்றனர்.மாறன் ஏதும் பேசவில்லை. அவன் விழிகள் மெல்ல மெல்ல மூடின. இடது கரம் பூமியிலே சரிந்தது. குமுதத்தின் மடியின் மீதிருந்த அவனுடைய தலை, மண்ணிலே சாய்ந்தது.
.        மாறன் இந்த வெற்றியுடன் அவன் கலபதிபுரத்திற்குத் திரும்பினால்... அவனுக்காக ஆற்றங் கரையிலேயே காத்திருக்கும் ரங்கதேவி மாலையிடுவாளா?

          மாறன் வெற்றி பெற்றுவிட்டான். ஒரு கரம் போனாலும் அவனுடைய வலது கரமாக இருக்க நினைக்கின்ற குமுதத்தை மாலையிட மாறன் வருவானா?

அவன் தெளிவாகச் சொல்லியிருக்கலாம். இவளைத்தான் காதலிக்கிறேன் என்று. அவன் தன் காதலைக் கடைசி வரை வெளிப்படுத்தாதது தவறா?

அவன் தவறு செய்யவில்லை. மாறன் ரங்கதேவியைக் காதலிக்கவில்லை. குமுதத்தையும் காதலிக்கவில்லை.

பாண்டிய மண்ணின் மீது அவன் நேசங்கொண்டான். அதற்காகப் புனித யாத்திரையைத் தொடங்கினான். போரிட்டான். சோழர் படைகளைப் புறமுதுகிட்டோடச் செய்தான்.

அதோ! மாறவர்மன் காதலி, மாறவர்மனை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறாள்.

பாண்டிய மன்னனைக் காதலித்தாள். அதோ! அவன் காதலியுடன் சேர்ந்து என்றும் அழியாத நித்திய இன்பம் அனுபவிக்கச் சென்று கொண்டே இருக்கிறான்.

####

இந்தச் சரித்திரக் கதை எழுதக் காரணமாயிருந்தவர் பேராசிரியர் திரு. 'சாண்டில்யன்' அவர்கள்.
அவர் கொடுத்த ஊக்கமும் ஆக்கமும் தான் இந்த கதை எழுத காரணம் என்று சொல்லப்படுகிறது.

நடை, கற்பனை, கவிதை, சரித்திர நோக்கு எல்லாம் கொண்ட விசித்திரச் சித்தராக விளங்குகிறார் விக்கிரமன். அவர் பாண்டியருக்கு வைத்த மகுடம். நமக்கே வைத்துக் கொண்ட மகுடம்.

'விசித்திரச் சித்தன்' அவர் புனை பெயர்களுள் ஒன்று. மகேந்திரவர்மப் பல்லவருக்கு 'விசித்திரச் சித்தன்' என்னும் பெயரும் உண்டு.

     எடுத்ததும் படித்ததும் முடித்ததும் இரு மணி நேரம்.

நன்றி :
திரு கருணா மூர்த்தி 
மற்றும் 
முகநூல்

கருத்துகள் இல்லை: