28 ஆக., 2023

நூல் நயம்

"ஆண்ட்ராய்டு அற்புதங்கள் ". ராஜவேல். அனிருத் பதிப்பகம்.
 முதல் பதிப்பு  2012 மொத்த பக்கங்கள் 80. விலை  ரூபாய் 60.

      ஃபோன் உலகில் அற்புதமான ஆண்ட்ராய்டு போன் குறித்த விபரங்கள் அடங்கிய புத்தகம் இது.

         நான் முதல் முதலில் சோனி போன் வாங்கினேன் .அதன் பிறகு நோக்கியா; அதன் பிறகு சாம்சங் :அதன் பிறகு ஆப்பிள் போன் வாங்கினேன். நமது குழுவில் இணைந்த பிறகு நிறைய படிக்கவும் நிறைய எழுதவும் ஆரம்பித்த பிறகு ஆண்ட்ராய்டு போன் வசதியுள்ள விவோ போன் வாங்கினேன் .எனது பயன்பாட்டுக்கு vivo 20 தாக்குப் பிடிக்க முடியாத காரணத்தினால் இரண்டு அரை வருடங்களுக்கு ஒரு முறை புதிய போன்களாக வாங்கி குவித்துக் கொண்டிருக்கிறேன் ,ஆண்ட்ராய்டு வசதி உள்ளவை.

**

1. ஸ்மார்ட் போன் என்பது என்ன?.........

2.ஆண்ட்ராய் மொபைல் எப்படி செயல்படுகிறது?..

3)ஸ்மார்ட் போன் வாங்கும் முன்....

4.ஆண்ட்ராய்டு அருமையான ஆறு இணையதளங்கள்....

5.ஆன்ட்ராய்டு போனில் உங்களுக்கே தெரியாத சில வசதிகள்........

6.ஸ்மார்ட்போன் பேட்டரியை சேமிக்க 10 வழிகள்.......

7.ஆண்ட்ராய்ட் போனில் வைரஸ் ஜாக்கிரதை..

8.ஆண்ட்ராய்ட்: தவறுகள் தவிர்க்க..

9.ஸ்மார்ட்போன்: தகவல் திருடும் போலி ஆப்ஸ்கள்!.. 10.ஸ்மார்ட்போன்: கட்டாயம் வேண்டிய பாதுகாப்பு விஷயங்கள்...

11.மொபைல் போன் தொலைந்து போனால்...

12.ஆண்ட்ராய்டு செயலிகளை பயன்படுத்தி பார்ப்பது எப்படி?..........

13.ஆண்ட்ராய்டில் தமிழ் - எழுத & படிக்க.......

14.ஆண்ட்ராய்டில் யூ-ட்யூப் விடியோக்களை டவுன்லோட் செய்ய

15.தண்ணீரில் விழுந்த போனை மீட்டெடுக்க.

16. ஆண்ட்ராய்டு போனில் ஸ்கிப்ரின் ஷாட் எடுக்க.

. 17.ஆண்ட்ராய்டு செயலிகளை கணினியில் டவுன்லோட் செய்வது எப்படி?....

18.ஆன்ட்ராய்ட் போன் ஃடேப்லேட்டில் ஃபைல் மறைப்பது எப்படி ?...

19.WhatsApp-இல் 'Last Seen' நேரத்தை மறைப்பது எப்படி?........

      இந்த தலைப்புகளை பார்த்தாலே என்ன விஷயம் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை சுமாராக புரிந்து கொண்டு விடலாம்.

***

ஸ்மார்ட் போன் என்பது என்ன?

ஸ்மார்ட் ஆக இருப்பது என்றால் திறமையாக இருப்பது, கெட்டிக்காரத்தனமாக இருப்பது என்றெல்லாம் பொருள்படும். சமத்து என்று சொல்கிறார்கள் இல்லையா? அதுவேதான். நல்ல தமிழில் இதைத் திறன் என்று சொல்கிறார்கள். நீங்கள் எப்படி ஸ்மார்ட் ஆனவராக இருக்கிறீர்களோ அதைப் போலவே உங்கள் வீடும் ஸ்மார்ட் ஆக இருக்க வழி செய்வது. சிந்திக்கும் ஆற்றல் மனிதர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இயந்திரங்களையும் கருவிகளையும் சிந்திக்க வைத்தால் என்ன என்றும் பலபேர் சிந்திக்கிறார்கள். இதன் விளைவுகள் எப்படி இருக்கும்? இயந்திரங்களும் கருவிகளும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் மனிதர்களை அவை பின்னுக்குத் தள்ளிவிடக் கூடுமே என்றும் பலரும் யோசிக்க முற்படுவார்கள்.

இண்டெர்நெட் வசதி பரவலாக்கப்பட்டபிறகு, செல்பேசிகள் வெறுமனே நீ நல்லா இருக்கியா? என்ற குசலம் விசாரிப்புகளுக்கும், குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் என்ற அதிமுக்கிய தகவல் பறிமாற்ற எஸ் எம் எஸ் குறுஞ்செய்திகளையும் தாண்டி அருமையான எஃப் எம் ரேடியோவாகவும், எம்பி3 ப்ளேயராகவும் மெதுவாக அடைந்த பரிணாம வளர்ச்சியிலிருந்து ஒரேயடியாக, சாட்டிலைட் மேப், அட்டகாசமான ஸ்டில்ஃவீடியோ கேமரா, ஹை டெபினிஷன் வீடியோ, ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங், நேரடி 3ஜி வீடியோ கான்ப்ரன்ஸ், இண்டெர்நெட் ப்ரவ்ஸிங் என்று உள்ளங்கையளவு கம்ப்யூட்டராகவே ஆகிவிட்டது. இதற்கு ஒரு பெயர் வைக்கவேண்டாமா? அதுதான் ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்ட் என்பது ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மென்பொருள். விண்டோஸ் மென்பொருளில் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ்7. போல இதற்கும் வெர்ஷன்கள் உண்டு. ஆனால் கட்டுப்பாடுகள் இல்லை. அதாவது ஆண்ட்ராய்ட் பற்றிய ஞானம் உங்களுக்கு இருந்தால் உங்களுக்கு அவசியமான ஒரு அப்ளிகேஷனை நீங்களே உருவாக்கி உங்கள் போனில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஏப்ரல் 30, 2009 ல் கப் கேக் 1.5 என்ற பெயரில் ஆரம்பித்து டோனட், எக்லேய்ர், ஜிஞ்சர் ப்ரெட், ஹனிகோம்ப், ஐஸ் க்ரீம் சாண்ட்விச், ஜெல்லிபீன் என்று நாக்கைச் சப்புகொட்டும் பெயர்களை தன்னுடைய ஒவ்வொரு வெர்ஷனுக்கும் கொண்டு பல விதமான முன்னேற்றங்களுடன் சக்கைப்போடு போட்டுக்கொண்டு இருக்கிறது. ஆண்ட்ராய்ட்.போன்களின் ஹார்ட்வேரை குறுகக் குறள் போன்று குறுக்கிச் செய்து பல ஜால வித்தைகளை ஏற்ற ஏற்ற இந்த ஆண்ட்ராய்ட் மென்பொருளின் பெயரும் வெர்ஷனும் மாறிக்கொண்டே இருக்கிறது.

8 மெகாபிக்ஸல் கேமரா (பின் பக்கம்) 1.2 மெகாபிக்ஸல் கேமரா முன்புறம் வீடியோ காலிங்கிற்காக) 5இன்ச் அளவிற்கான கண்ணைப் பறிக்கும் தொடுதிரை (டச் ஸ்க்ரீன்), மெமரி கார்ட் பொருத்தும் வசதி, இரண்டு சிம்கார்டுகள் பயன் படுத்தும் வசதி, ஜிபிஎஸ், அருமையான மைக், தெளிவான ஸ்பீக்கர், ஹெச்டி வீடியோ சினிமாவை தங்கு தடையில்லாமல் பார்க்கும் வசதி. நீங்கள் பேசுவதை அப்படியே புரிந்துகொண்டு திரையில் டைப் பண்ணும் வசதி, ஓரிடத்தில் நீங்கள் எடுத்த போட்டோவை வீடியோவை உடனே யு ட்யூபிலோ. உங்கள் ப்ளாக்கிலோ, ஜி மெயில், கூகிள் ப்ளஸ்ஸிலோ, ட்விட்டரிலோ இன்ன பிற சமூக தளத்திலோ உடனே அப்லோட் செய்யும் வசதி.

ஆண்ட்ராய்டு போன் எப்படி செயல்படுகிறது என்று சுருக்கமாக
சொல்லப்பட்டிருக்கிறது.

**
ஆண்ட்ராய்ட் மார்க்கெட்: (Android Market)

ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்யப் பயனுள்ள சந்தை இதுவாகும். நாம் காய்கறி மார்க்கெட்டில் காய்கள் வாங்குவதைப்போல Android market - ல் லட்சக்கணக்கான இலவச பயன்பாடுகள் கொட்டிகிடக்கின்றன.சில ஆன்ட்ராய்ட் பயன்பாடுகளை (Android applications) பணம் கொடுத்துப் பெற முடியும்.

    இந்த ஆன்ட்ராய்ட் இயங்குதளம் கீழ்க்கண்ட பதிப்புகளைக் கண்டிருக்கிறது.

1. cupcake (Android 1.5)
2. Donut (Android 1.6)

3. Eclair (Android 2.0/2.1)
4. Gingerbread (Android 2.3)
5. HoneyComb (Android 3.0)

6. Ice Cream Sandwich (Android 4.0)

     இப்போது ஜெல்லி பீன் என்ற புதிய பதிப்பு வந்திருக்கிறது. ஆண்ட்ராய்ட் மொபைலின் சிறப்பம்சங்களை கொஞ்சும்
பார்ப்போம்!

1. Mobile-ன் முகப்புப் பக்கத்தை
விருப்பப்படி வைத்துக்கொள்ளலாம். அதாவது நமக்குத் தேவையான விட்ஜெட்கள் முகப்பு பக்கத்தில் வைத்துக்கொள்ள முடியும். (Customize home screen)

2. நமக்கு வரும் எஸ்.எம்.எஸ்.கள் threaded sms முறையில் இருக்கும். ஒருவர் அனுப்பும் எஸ்.எம்.எஸ் ஆனது தொடர்ந்து சங்கிலி முறையில் இணைக்கப்பட்டிருக்கும்.

3. இதிலுள்ள சிறப்பு பயன் Screenshot தான். மொபைல் திரையில் உள்ளதை கணினியில் screen shot எடுப்பதைப் போன்றே Screen Shot எடுக்கலாம்.

4 மற்றொரு அதிசய அப்ளிகேஷன் வாய்ஸ் (Voice Action) ஆகும். இந்த அப்ளிகேஷன் மூலம் உங்கள் வாய்ஸ் ஆக்சன் மூலமே மொபைலை கையாள முடியும். தமிழுக்கு இது ஏற்றதல்ல. ஆங்கில மொழி பேசுபவர்களுக்கு ஏற்ற அப்ளிகேஷன் இது. பொதுவாக ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் உள்ளது.

5. எல்லா google aps நிறுவப்பட்டிருக்கும். 6.கணினியில் நாம் பயன்படுத்தும் பிரௌசர் போலவே இதிலுள்ள பிரௌசர் செயலாற்றுகிறது. You tube video க்களை காண பிளாஷ் வசதி இதில் அடங்கியிருக்கிறது.
ஸ்மார்ட் போன் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய செலவு செய்துகளையும் அற்புதமாக பட்டியல் இருக்கிறது இந்த புத்தகம்.

ஸ்மார்ட் போன் பேட்டரியை சேமிக்க பத்து வழிகளை இந்த புத்தகம் முத்தாக தந்து இருக்கிறது.

ஆண்ட்ராய்ட் போனில் வைரஸ் தொற்று வருகின்ற விதமும் அதை எப்படி கையாள வேண்டும் என்கிற பக்குவமும் பரிமாறப்பட்டிருக்கிறது.

ஸ்மார்ட் போன் தகவல் திருடும் போலி ஆப்ஸ்கள் என்பது குறித்து விளக்கமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஸ்மார்ட் போன்கள் வைத்திருப்போர் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் இன்று சில பட்டியல் தரப்பட்டு இருக்கிறது அதனை படித்து தெரிந்து கொள்ளலாம்.

நமது மொபைல் போன் தொலைந்து போனால் அதனை கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும் என்கிற ரகசியம் கூட சொல்லப்பட்டு இருக்கிறது இந்த புத்தகத்தில்.

ஆண்ட்ராய்டு செய்திகளை பயன்படுத்தி பார்ப்பது எப்படி என்கிற ஒழுக்கம் தமுக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றையும் முக்கியம் ஆக ஆண்ட்ராய்டில் தமிழ் எழுத படிக்க நமக்கு டிப்ஸ் தந்திருக்கிறது.

ஆண்ட்ராய்ட் மொபைலில் youtube வீடியோக்களை டவுன்லோட் செய்து எப்படி பார்ப்பது என்றும் தண்ணீரில் விழுந்து விட்ட ஃபோனை உடனடியாக சரி செய்வது எப்படி என்கிற நுணுக்கமும் சொல்லப்பட்டிருக்கிறது ஆண்ட்ராய்டு போனில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எப்படி என்று விவரமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

      ஒரு போனை வாங்கி உபயோகிக்கின்ற திறன் நமக்கு இல்லாமல் போனாலும் கூட இந்த புத்தகத்தை படிப்பதன் வாயிலாக அந்த திறனை நாம் கைக்கொள்ள முடியும் என்று நம்பிக்கை வருகிறது எனக்கு.

நன்றி :

கருத்துகள் இல்லை: