"தகவல் தொடர்பு கலை".
டாக்டர். அ .விநாயகமூர்த்தி பொற்கொடி புத்தகம் நிலையம்.
முதல் பதிப்பு 2006 மொத்த பக்கங்கள் 320 விலை ₹125.
# இது ஒரு துறை சார் நூல் .
தகவல் தொடர்புத்துறை சார்ந்த புத்தகம்.தகவல் தொடர்புத்துறை என்று சொன்னால் பலவித துறையில் இதிலே அடக்கம் .எல்லாவற்றையும் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்தமாக தொடர்புகளை தகவல் தொடர்புகலை என்று இந்த புத்தகம் அமைந்திருக்கிறது.
பொறியியலின் பல்வேறு பிரிவுகளில் தகவல் தொழில்
நுட்பவியல் சிறப்பிடம் பெறுவதாகும். பொறியியல்
கல்லூரிகளில் இவ்வியலைப் படித்துப் பட்டம் பெறுவோர்
பலர். அவர்களுக்கான இத்துறை நூல்கள் பல ஆங்கிலத்தில்
உள்ளன. தமிழிலும் இவை எழுதப் பெறல் வேண்டும்.
தகவல்தொடர்பின் தொடக்க நாள் முதலாக இன்று வரையில் பெற்றுள்ள வளர்ச்சி எண்ணிப் பார்க்கத் தக்கது.
தமது கருத்தை அடுத்தவருக்குப் புலப்படுத்துவதாகிய தொடர்பும் அதற்கான சாதனங்களும் தகவல் பழங்காலத்திலிருந்தே சிந்தனை வளர்ச்சியால் விரிவடைந்து வந்துள்ளன. குறிப்பாகக் கடந்த சில நூற்றாண்டுகளில் இத்துறை பெற்றுள்ள முன்னேற்றம் பிரமிப்பூட்டுவது.
புத்தம் புதிய கலைகள் தமிழில் எளிமையாகச் சொல்லப்பட வேண்டும்; இன்றைய தலைமுறையினரும் எதிர்காலத் தலைமுறையினரும் மேலும் ஓரடி முன்னெடுத்து வைக்க உதவ வேண்டும் என்ற கருத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.
**
இந்தப் புத்தகம் கீழ்க்கண்ட 9 தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கிறது.
1. அறிமுகம் : சில தகவல்கள்
2. தகவல் தொடர்பின் பழமை
3. புத்தகமும் பத்திரிகையும்
4. தபால், தந்தி, தொலைபேசி, செல்போன்
கயம் 5. வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம்
தகவல் தொடர்பும் விளம்பரங்களும்
7. தகவல் தொடர்பில் எழுத்தும் பேச்சும்
8. தகவல் தொழில் நுட்பம்
9. தகவல் தொடர்பும் சட்டங்களும்
***
"சென்றிடு வீர்எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்"
என்ற பாரதியின் ஆசையினை இந்நூலாசிரியர் திரு.அ.விநாயகமூர்த்தி அவர்கள் தம் அரிய இப்புத்தகத்தின் வாயிலாக நம் மக்களுக்குத் தந்திருக்கிறார்.
ஒரு கிராமத்தில் பிறந்த இவர், கிராமபோன், கணினி ஆகிய தொழில் நுட்ப வளர்ச்சியைப் பற்றித் தம் நூலுள் அழகாகக் கூறியுள்ளார்.
தொழில்நுட்ப வளர்ச்சிகளுள் ஒன்றான தகவலியல் அனைத்து வகையான மக்கள் சமூகத்திற்கும் சென்று சேரவேண்டும் என்ற ஒப்பற்ற குறிக்கோள் இந்நூலின் ஒவ்வோர் எழுத்திலும் வெளிப்படுகிறது.
'தகவல்' என்பது பற்றிக் கூறும்போது, முதன்முதலில் மனிதன் தன் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளச் 'சைகை' செய்தான். அப்போது ஆரம்பித்த தகவல் இன்று தன் விஸ்வரூபத்தைக் காட்டுகிறது. இப்போது 'உள்ளங்கைக்குள் உலகம்' என மனித எண்ணங்களின் வளர்ச்சியைக் காட்டுகிறது. மனிதன் தன் எண்ணங்களை மற்றவருக்கும் பரிமாறிக்கொண்டு, அவர்களையும் தன்னையும் உயர்த்திக்கொள்ள ஒரு சிறந்த ஊடகமாக இருப்பதனை ஆசிரியர் சிறப்பாக விரித்துச் செல்கிறார். மனிதஇனம் முன்னேற்றமடைந்ததற்கு இத்தகவல் ஊடகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை ஆசிரியர் தம் தேடல் உணர்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
சங்க காலத்தில், தூது மூலம் மன்னர்கள் தங்கள் தகவலைப் பரிமாற்றம் செய்தனர். மக்களுக்கு அதனைப் பறையறைந்து அறிவிப்பதன் மூலம் தெரிவித்தனர் இன்று உலகத்தின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் வீட்டின் மூலையில் உட்கார்ந்து இருப்பவனுக்குத் தெரிகிறது அதற்குக் காரணம் தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியே என்பதனை ஆசிரியர் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறார்.
பழங்காலப் புலவர்கள், மருத்துவர்கள் தங்களின் எண்ணங்களை ஓலைச்சுவடியில் எழுதிவிட்டுச்சென்றனர். அவை கறையான்களுக்கு இரையாகி விட்டன. அச்சுஇயந்திரம் வந்த பிறகு புத்தகங்களின் வளர்ச்சி அசுர வேகத்தில் முன்னேற்றம் பெற்றது இதன் மூலம் மக்களின் அறிவு விரிவடைந்தது. அதனால், இந்த உலகத்தினைத் தன் கைக்குள் அடக்கப் பற்பல சாதனங்களைக் கண்டுபிடித்தான் மனிதன்.
தகவல் மேன்மேலும் வளர்ச்சி பெறுவதற்குக் காரணம் ஊடகங்களே. மக்கள் இந்த ஊடகங்களால் ஊக்கமடைந்து, அதனைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர்.
கருத்துக்களைத் தாம் கற்ற கல்வியின் மூலம், திரம். எழுத்துக்களாக்க... மேடைச்சொற்பொழிவுகளாக்க...
மனிதனின் மூளை ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தது கண்டுபிடிப்புக்களைநோக்கி
எனும் உயரிய கருத்தினை ஆசிரியர் தமது பாணியில் வெளிப்படுத்தியுள்ளார்.
'விளம்பரம்' எனும் ஓர் உன்னதமான ஊடகத்தைப் பற்றித் தாம் தேடியவற்றை அரியதொரு கருவூலமாக்கியிருக்கிறார்.
தாம் கண்டுபிடித்ததைப் பிரபலமாக்கப் பயன்படும் மிகச்சிறந்த ஊடகம் விளம்பரம் என்பதனை ஆசிரியர் விளம்பரமாகவே விவரிக்கிறார். விளம்பரத்தின் நன்மையும் தீமையும் பற்றித் தெளிவாகக் கூறியிருப்பது போற்றத்தக்கது.
தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி, மனிதனின் மூளையைக் கசக்க ஆரம்பித்தது.
"காசி நகர்ப்புலவர் பேசும்உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய்வோம்"
என்ற பாரதியின் கனவு இன்று நனவாகியிருக்கிறது என்பதனை ஆசிரியர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
வானொலி, பின் கணிப்பொறி, அதன்பின் மின்னஞ்சல் என மிக விரிந்து பரந்த தொழில்நுட்ப வளர்ச்சியினைப் பற்றிச் சிறந்ததொரு கருத்துக் கருவூலமாக்கியுள்ளார்.
"வருங்காலத்தில், மொழிச்செம்மையே தகளியாக, இலக்கியச்சுவையே நெய்யாக, எளிமைப்பண்பே இடுதிரியாக, சிந்தனையே சுடராகக் கொண்டு தமிழ்க்கட்டுரை விளக்கு ஏற்றப்படுதல் திண்ணம்" எனக்கூறிய அறிஞர் ந.சஞ்சீவி அவர்களின் கூற்றிற்கேற்ப, ஆசிரியரின் இந்நூல் தகவல் தொடர்புக் கலைக்குச் சிறந்ததொரு சான்றாகக் குன்றிலிட்ட விளக்காகத்திகழும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக