"சிதைந்த கோடு".
ரவீந்திரநாத் தாகூர். தமிழில் த நா குமாரசாமி. சரவணா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு முதல் பதிப்பு 2007 விலை ரூபாய் 65 மொத்த பக்கங்கள் 150.
#இது சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு புத்தகம்.
அந்த காலத்தில் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் எழுதிய சிறுகதைகள். இதுகுறித்து ஏராளமான பிரச்சனைகள் வதந்திகள் அவதூறுகள் எல்லாம் பரப்பப்பட்ட போதும் இந்த தடத்திலே அருமையாக பதிவு செய்திருக்கிறார் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள்.
இது ஒரு சிறுகதை தொகுப்பு வங்காள விரிகுடா ஓரத்தில் அமைந்த வங்காள தேசத்தில் சிறுகதைகள்.
***
த.நா. குமாரசாமி
பழமையைப் போற்றி, புதுமையைக் கையாண்ட வங்க இலக்கியங்கள் தமிழில் வரக் காரணமாகி, தமிழ் இலக்கிய உலகில் தனக்கென் முத்திரையைப் பதித்தவர் த.நா. குமாரசாமி.
இவரது சிந்தனையின் வேகம், எழுத்தில் தெரியும்;
இவரது கற்பனை வளம், கதைகளில் ஜொலிக்கும்;
இவரது மொழித்திறன், பிற மொழி இலக்கியங்களைத் தமிழாக்கியதில் தெரியும்;
இவரது பன்மொழி ஆற்றல் எல்லா நூல்களிலும் புலப்படும்.
**
இந்த புத்தகத்தில் மொத்தம் 20 சிறுகதைகள் இடம் பெற்று இருக்கிறது கீழ்க்கண்ட தலைப்புகளில்
1. இலக்கிய இன்சுவை
2. இலக்கிய விருந்து
3.ஆடித் திங்கள்
4.மட்டி மந்தா
5. மாய வலை
6.அமலா
7. குருவை மிஞ்சின சிஷ்யை
8. சந்தேக சங்கடம்
9. நம்பிக்கைத் துரோகம்?
10.அமாவாசை ஒளி"
11. விவாகம்
12. மன வேதனை
13. பிரிந்த மனம்
14. பூபதியின் பாடு
15. சாருவின் சஞ்சலம்
16. அபூர்வ உணர்ச்சி
17. தபால் ஏக்கம்
18. சீமைத் தந்தி
19. தம்பதிகளின் தவிப்பு
20.நிம்மதி எங்கே!
***
அப்போது பங்கிம் யுகம்; வீரமும் விறுவிறுப்பும் கலந்து மனத்தைக் கவரும்படி நவீனங்கள் வெளியான காலம். பங்கிம் பாபு நடத்தி வந்த 'வங்கதர்சனம்' என்ற பத்திரிகையை 1901- ஏப்ரலில் ரவீந்திரர் மீண்டும் புதுப்பித்துத் தாமே அதன் ஆசிரியர் ஆனார். அதுவரை பங்கிமின் தோரணையில் கதை எழுதி வந்த கவியரசர், முதல் முதலாக மனோ தத்துவத்தைத் தம் கதைகளில் எடுத்தாளத் தொடங்கினார்.
வங்க நாட்டு வாசகர்களுக்கு இது ஒரு புதுமையாக இருந்தது. அக்காலத்தில் ஆங்கிலம் முதலிய ஐரோப்பிய மொழிகளில் கூட இம்மாதிரியான கதைகள் அபூர்வம்.
பழைய பத்ததியை விட்டு, இப்படி ஒரு மாறுதல் கொண்டு வந்தது சிலருக்குப் பிடிக்கவில்லை.
'இலக்கியத் தில் ஆண் பெண்களின் உள்ளத்தில் புதைந்து கிடக்கும் உணர்ச்சிகளைப் புகுத்துவது தவறு' என்ற கண்டித்தனர் ஒரு சாரார். அவர்கள் ஆழ்ந்து கவனித்திருந்தால் தங்கள் கொள்கை சரியானதன்று. எந்த இடத்திலும் கவியரசர் வரம்பை மீறிச் செல்லவில்லை என்று உணர்ந்திருப்பார்கள்.
மற்றொரு சாரார், 'இது உள்ளத்தை உள்ளபடி உரைப்பதாக (Realistic) இல்லை. உண்மையை வெளிப்படையாகச் சொல்ல தாகூர் கூச்சப்படுகிறார். சம்பவங்களைக் கோத்து எழுதவும் திறமை போதவில்லை அவருக்கு. அதனால்தான் இப்படி வறட்டுக் கதை அளக்கிறார்' என்றனர்.
இத்தகைய ஆட்சேபங்களுக்குகிடையே வெளியான 'சிதைந்த கூடு' முதலிய கதைகளை வாசகர்கள் ரசித்துத்தான் வந்தனர். மேலும் 'மனித சுபாவமே விசித்திரமானது; எந்தச்சமயத்தில் எப்படி மாறுமோ சொல்ல முடியாது. அவர் அநாவசியமாகக் கதையை வளர்த்தவில்லை என்று பலர் அறிந்து வரவேற்றனர்.
'சிதைந்த கூட்டி'ல் (நஷ்ட நீட) புதவித மனோ தத்துவத்தைக் காண்கிறோம்.
மதனிக்கும் மைத்துனனுக்கும் உள்ள உறவை வருணிக்கும்போது தாகூர், வெகு ஜாக்கிரதையாக விஷயத்தைக் கூறுகிறார். அது நட்பா, காதலா என்று சில சமயம் ஐயுறவேண்டி வரும். ஆனாலும் கணவனிடம் சாரு நடந்துகொள்ளும் விதத்தைக் கடைசி வரையில் கவனித்தால் சந்தேகம் கொள்வது தவறு என்று புலப்படும்.
மைத்துனன் மேல் அவள் வைத்த அன்பு, சகோதர வாஞ்சையும் சிரத்தையும் கலந்த ஒரு மனநிலையாகும். பூபதி தன் மனைவியை அறியாது சந்தேகிக்கவும் முற்படுகிறான். சாருவோடு நெருங்கிப் பழகாமல், வெளி விஷயங்களில் ஈடுபட்டிருந்தவனுக்கு அவள் மனோபாவம் எப்படி விளங்கும்?
'கதைக்கு முடிவு ஏற்படவில்லையே; திடீரென்று நின்று விடுகிறதே' ஏன்.?இறுதியில் சாருவின் நிலையைப் பார்த்ததும், பூபதியின் மனம் இளகி விடுகிறதல்லவா? 'சரி, என்னோடு வா!' என்கிறான்.
அத்தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை ஏற்படும் என்பதற்கு இதை ஒரு சூசகமாகக் கொள்ள வேண்டும்.
உடனே 'வருகிறேன்' என்று சொல்வது ஊடலுக்கு அழகன்று. அங்ஙனமே சாரு, என்கிறாள். 'இருக்கட்டும். பரவாயில்லை'என்கிறாள்.
பல கதைகள் சிறுகதைகள் அடங்கிய புத்தகம் என்றாலும் ஒவ்வொரு கதையும் அருமையாக வடிக்கப்பட்டு இருக்கிறது.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக