என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
30 மே, 2024
இன்று ஒரு தகவல்
#அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் போகிறது. "#Blood_On_Call" என்பது, சேவையின் பெயர். இந்த எண்ணை அழைத்த பிறகு, 40 kms சுற்றளவில், நான்கு மணி நேரத்திற்குள், #இரத்தம் டெலிவரி செய்யப்படும்.. ஒரு பாட்டிலுக்கு ரூ.450/- மற்றும் போக்குவரத்துக்கு ரூ.100/-. தயவுசெய்து இந்த செய்தியை மற்ற நண்பர்கள், உறவினர் ஆகியோருக்கும் மற்றும் நீங்கள் தொடர்பில் இருக்கும் குழுவிற்கும் அனுப்பவும். இந்த வசதி மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும்.🇮🇳🙏🙏🙏
சிறுகதைப் போட்டி
காரைக்குடி புத்தகத் திருவிழா நடத்தும்
மாநில அளவிலான சிறுகதைப்போட்டி
காரைக்குடி புத்தகத் திருவிழாக் குழுவின் சார்பில், அதன் மேனாள் தலைவர் அய்க்கண் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் பேராசிரியர் டாக்டர் அய்க்கண் – அருளரசி வசந்தா நினைவு மாநில அளவிலான சிறுகதைப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சிறுகதைப் போட்டிக்கு முதல் பரிசாக ரூபாய் 10,000, இரண்டாம் பரிசாக ரூபாய் 7500, மூன்றாம் பரிசாக ரூபாய் 5000 என வழங்கப்படும். சமூக முன்னேற்றத்தைக் கருப்பொருளாகக் கொண்ட சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன. கதைகள் 10 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
கதை எழுதிப் போட்டியில் பங்கேற்பவர்கள் இது எனது சொந்தக் கற்பனையே என்ற உறுதிமொழிக் கையெழுத்திட்டு கதையுடன் இணைக்கவேண்டும். வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பியிருக்கும் கதைகளையோ அல்லது வெளிவந்த கதைகளையோ அனுப்பக்கூடாது. கதைகளை அனுப்புபவர்கள் பிரதிகளை வைத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது. போட்டி முடிவுகள் நடுவர் குழுவின் தீர்ப்புக்கு உட்பட்டவையாகும். சிறுகதைகளை 23.06.2024 ஆம் தேதிக்குள்
கவிஞர் இரவிச்சந்திரன்,
குறளகம்,
24/1 தெய்வராயன் தெரு,
நா.புதூர், காரைக்குடி-1 ,
சிவகங்கை மாவட்டம்.
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதற்குரிய பரிசுகள் காரைக்குடியில் ஜுன் 28 முதல் ஜூலை 7 வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில் பேராசிரியர் டாக்டர் அய்க்கண் குடும்பத்தாரால் வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு 9443099770, 9360736735 ஆகிய செல்லிடப்பேசி எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் nravi31272@gmail.com
இன்றைய புத்தகம்
விரல்கள் செய்யும் விந்தை
Author : மருத்துவர் கல்பனாதேவி
Print book
₹250
Ebook
₹140
₹200
30% off
மனிதனுக்கு வரும் நோய்களைக் குணமாக்கும் மருந்து நம் விரல்களிலேயே இருக்கிறது என்றால் விந்தையாக இருக்கிறதல்லவா? ஆம், விரல்களைக் கொண்டு செய்யும் முத்திரைகளால் நோய் விலகிவிடும் என்பதை கடவுளர்களின் விக்கிரகங்களைப் பார்த்தாலே புரியும். இயற்கையிலேயே சில முத்திரைகள் நம் வாழ்வோடு இணைந்திருக்கிறது. தாயின் வயிற்றில் இருக்கும் சிசு தன் இரண்டு கைகளையும் அழுத்தமாக மூடிப் பிடித்திருக்கும் முத்திரை, ஆதி முத்திரை. வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச் சிதறல்களிலிருந்து விடுபட இந்த முத்திரை உதவுகிறது. இதுபோன்று ஒவ்வொரு முத்திரைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. உடல், மனம் சார்ந்த அனைத்து நோய்களையும் நமது விரல்களால் செய்யும் முத்திரைகளால் சரிசெய்யலாம். முத்திரைகள் நமது விரல்கள் வழியே, ஐம்பெரும் சக்திகள் மற்றும் உயிர் ஆதாரங்களையும் தூண்டி நோய் நிலைகளைச் சரிசெய்கிறது. முத்திரை என்பது ஓர் உயர் யோகக்கலை, யோகாசனப் பயிற்சிகளின் உச்சம். முத்திரைக்கான பயிற்சியை முறையாகச் செய்து அதன்படி முத்திரைகளைச் செய்து வந்தால் நோய்களில் இருந்து விடுபடலாம் என்பதை விளக்கும் நூல் இது! டாக்டர் விகடன் மற்றும் சக்தி விகடனில் வெளிவந்தவை இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. விரல் செய்யும் விந்தைகளைப் பாருங்கள், பலன் பெறுங்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)