4 மார்., 2009

நலக்குறிப்புகள்-36: "பிணி அணுகா விதி"

பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர்களில் ஒருவரான தேரையர் 'பிணி அணுகா விதி' என்று வழிமுறைகளைப் பாடல்களாக எழுதியுள்ளார்.

"நீர் சுருக்கி, மோர் பெருக்கி, நெய்யுருக்கி உண்டால் தம் பேருரைக்கில் போமே பிணி" என்பது அவ்விதிகளில் ஒன்று. நீரைக் காய்ச்சிக் குடிக்கவேண்டும். தயிரை உண்ணாமல் நீர்மோர் போல் அருந்துங்கள். உருக்கிய நெய்யை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்படிச் செய்தால் நோயே வராமல் தடுத்துக் கொள்ளலாம் என்பது இதன் பொருள்.

தினமணி 'கொண்டாட்டம்' இணைப்பில் சாருகேசி எழுதிய 'பிணி அணுகா விதி தெரியுமா?" என்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.

நன்றி: திரு சாருகேசி & தினமணி.

1 கருத்து:

nellaiappan சொன்னது…

அருமை. "பிணி அணுகா விதி" இல்
மீதி இருக்கும் விதிகளையும்
இந்தப் பகுதியில் பதிந்தால்
பயனுள்ளதாக இருக்கும்.
-நெல்லை.