13 ஜூன், 2009

இன்றைய சிந்தனைக்கு-47: "காண்பது கேடு!"

"சும்மா இருப்பதே சுகம்" என்று சிலர் யாதொரு வேலையும் செய்யாமல் பிறர் சோற்றை உண்டு காலந்தள்ளுகின்றனர். நம்மவர்களுள் ஒருவன் சம்பாதித்தால் ஒன்பது பேர்கள் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கமாய் இருக்கிறது. இதுதான் நமது தேசம் தரித்திரத்தை அடைவதற்கு முக்கிய காரணம். ஒவ்வொரு மனிதனும் உழைப்பதற்காகவே பிறந்திருக்கிறான். சீட்டாடுவதும், இராப்பகலின்றித் தூங்குவதும், வம்பு பேசுவதும் உழைப்பாகாது. தனக்கும், தன் குடும்பத்திற்கும் உபயோகமான தொழிலைச் செய்வதே உழைப்பாகும். வேலை செய்வதானது, கேவலம் சம்பாத்தியத்தை உத்தேசித்து மட்டுமல்ல; பல ஜனங்களுக்கும் உபயோககரமான ஓர் காரியத்தைச் செய்தலாம். எவன் வேலையின்றித் தூங்குகிறானோ அவனைக் காண்பது கெடுதல்; தீண்டுவது தீது."

"மனிதன் வேலை செய்யப் பிறந்தான்" என்ற தலைப்பில் 'இந்தியா' பத்திரிகையில் (5.1.1907) மகாகவி பாரதியார் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.

நன்றி: "பாரதி ஞானம்", மே 2003 (தனிச்சுற்று மாத இதழ்).

கருத்துகள் இல்லை: