22 செப்., 2009

இயற்கை உணவுக் குறிப்பு-10: "முடக்கத்தான்"

உடல் வலி, மூட்டுவலி, மூட்டுப் பிடிப்பு, இடுப்புப் பிடிப்பு, கைகால் மூட்டுக்களில் ஏற்படும் வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவற்றைப் போக்க எளிய, சிறந்த முறை முடக்கத்தானைப் பயன்படுத்துவதே.

இதனுடைய இலைகளையும், கைகளையும் துண்டுகளாக்கி, நீரில் போட்டு வேக வைத்து, அந்த நீருடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து அருந்தலாம். இந்த முடக்கத்தான் சூப்பை அதிகாலை அரை டம்ளர் அளவு பருகினால் நாட்பட்ட பாரிச வாயு குணமாகும்.

இரசம் செய்யும்போது புளி, தக்காளி, காய்ந்த மிளகாய் வற்றல், கொத்தமல்லி இலை போன்றவற்றை முடக்கத்தான் சூப்புடன் கலந்து இரசம் தயாரித்து உணவுடன் கலந்து உண்ணலாம்.

அரிசி, கஞ்சி அல்லது மாற்ற தானியக் கஞ்சி தயாரிக்கும்போது, அதனுடன் முடக்கத்தான் இலைகள், தண்டுகளை வெட்டிப்போட்டு தாயாரித்துக் குடிக்கலாம்.

வீட்டில் வைக்கும் குழம்புகளிலும். முடக்கத்தான் இலைகள், தண்டு போன்றவற்றை வெட்டிப்போட்டு தயார் செய்து சாதத்துடன் கலந்து உண்ணலாம்.

நன்றி: அருள்நிதி எம்.பி.பாலா அவர்கள் "இயற்கை மருத்துவம்" மாத இதழில் (ஆகஸ்ட் 2009) எழுதிய "முடக்கத்தான் கீரை" என்ற கட்டுரையின் அடிப்படையில்.

கருத்துகள் இல்லை: