24 அக்., 2009

இன்று படித்தவை-5: அக்டோபர் 24, 2009

5. The Message of the Upanisads: An Exposition of the Upanisads in the light of Modern Thought and Modern Needs by Swami Ranganathananda - Published by Bharatiya Vidya Bhavan, Mumbai.

இந்த நூல் கொல்கத்தாவிலுள்ள 'ராமகிருஷ்ணா மிஷன் இன்ஸ்டிடுட் ஆஃப் கல்ச்சரில்' (Ramakrishna Mission Institute of Culture) சுவாமி ரங்கநாதானந்தர் அவர்கள் வழங்கிய அற்புதமான சொற்பொழிவுகளின் தொகுப்பு. இந்நூலில் ஈசோபநிடதம், கேனோபநிடதம், கதோபநிடதம் ஆகிய முக்கிய மூன்று உபநிடதங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

ஏற்கனவே முழுமையாக வாசித்து இன்புற்ற மற்றொரு நூல் இது. தற்போது தினமும் சில பக்கங்கள் என்று வாசித்து வருகிறேன். இன்று வாசித்தது முதல் மூன்று பக்கங்கள். அதில் நான் புரிந்துகொண்டது, என் மனதில் பதிந்தது:

ஈசோபநிடதம், கேனோபநிடதம், கதோபநிடதம், ப்ரஸ்னோ உபநிடதம், முண்டக உபநிடதம், மாண்டூக்ய உபநிடதம், தைத்திரிய உபநிடதம், ஐத்ரேய உபநிடதம், சாந்தோக்ய உபநிடதம் மற்றும் ப்ருஹதாரண்யக உபநிடதம் ஆகியவற்றை முக்கிய உபநிடதங்களாகக் கருதி ஆதிசங்கரர் அவற்றிற்கு உரை வழங்கியுள்ளார்.

ஈசோபநிடதம் ஆன்மீக ஒருமைப்பாடு மற்றும் அனைத்து உயிர்களின் ஒருமைப்பாடு பற்றி விளக்குவது.

கேனோபநிடதம் வாழ்வின் இறுதியான முடிவான உண்மை, அழிவற்ற ஆன்மா பற்றி விளக்குகிறது.

கதோபநிடதம் ஒப்பற்ற கவிதை, மேன்மையான தத்துவம், மற்றும் ஆழ்ந்த ஆன்மீக உணர்வுகள் ஆகியவற்றின் இணையற்ற தொகுப்பு. உபநிடதங்களில் இதற்கென ஒரு தனி இடம் உண்டு. வேதாந்தத்தின் மறை பொருளை இதைபோல் விளக்க வேறு உபநிடதம் இல்லை.

நான்கு மகா வாக்கியங்கள்:

'அயம் ஆத்மா பிரம்மா' - நம் ஆன்மாவே பிரம்மம். (This Atman (Self of man) is Brahman. (மாண்டூக்ய உபநிடதம்)

'பிரக்ஞானம் பிரம்மா' - பரிபூரண உணர்வே பிரம்மம். (Brahman is Pure Consciousness) (ஐத்ரேய உபநிடதம்)

'தத் துவம் அசி' - நீ அதுவாகவே இருக்கிறாய். (Thou art That) (சாந்தோக்ய உபநிடதம்)

'அஹம் பிரம்மாஸ்மி' - நானே பிரம்மம் (I am Brahman) (ப்ருஹதாரண்யக உபநிடதம்)

அடுத்து...?

2 கருத்துகள்:

kovai sathish சொன்னது…

Brahman என்பதை....brahmmam என திருத்தவும்....Brahman என்றால் குறிப்பிட்ட ஜாதியை குறிக்கும்..ஆனால் brahmmam என்றால் 'உலகம் அல்லது..கடவுள் என பொருள் கொள்ளலாம்..!!ஆனால் நீங்கள் வெளியிட்டிருக்கும் இந்த வார்த்தைகள் சத்தியமானவை..!! நல்ல கருத்து..!!

SURI சொன்னது…

முழு முதற்பொருளை தமிழில் 'பிரம்மம்' என்றும் ஆங்கிலத்தில் 'Brahman' என்றும் வழங்குவர். ஆங்கில அகராதியைப் புரட்டினால் தங்களுக்குப் புரியும். "Brahmin" என்பதுதான் ஜாதியைக் குறிக்கும் சொல். (தமிழில் பிராமணன்). தங்களது வருகைக்கும் ஆர்வத்திற்கும் நன்றி!