12 பிப்., 2010

சூரியின் டைரி-3: "காரைக்குடி புத்தகத் திருவிழா"


எட்டாவது காரைக்குடி புத்தகத் திருவிழா இன்று மாலை ஐந்தரை மணியளவில் கம்பன் மணிமண்டபத்தில் தொடங்குகிறது.

நிகழ் முறை
----------------

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை: Rtn.PHF.முத்து பழனியப்பன், அமைப்புச் செயலர், புத்தகத் திருவிழா

தலைமையுரை: பேராசிரியர் முனைவர் அய்க்கண், தலைவர், புத்தகத் திருவிழா

தொடக்கவுரை: மாண்பமை என்.சுந்தரம், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்

திறப்புரை: கலைப்புரவலர் எல்.சபாரத்தினம்

இலக்கியவுரை: கலைமாமணி முனைவர் சாரதா நம்பி ஆரூரன்

சிறப்புரை: பேராசிரியர் முனைவர் சுப.வீரபாண்டியன்

வாழ்த்துரை: திருமிகு சேது.சொக்கலிங்கம், தலைவர், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் & பதிப்பாளர் சங்கம்

நன்றியுரை: திரு ஸ்ரீவித்யாராஜகோபாலன், துணைத்தலைவர், புத்தகத் திருவிழாக் குழு

நாட்டுப்பண்
--------
இணைப்புரை: முனைவர் .கலைச்செல்வி, விஞ்ஞானி, மைய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்

புத்தகத் திருவிழா இம்மாதம் இருபத்து ஒன்றாம் தேதி, ஞாயிற்றுக் கிழமை இரவு நிறைவு பெறும்.

இறையருளால் இவ்வாண்டும் விழா சிறப்புற நடைபெற வேண்டும். அமைப்பாளர்களுக்கு எனது மனமுவந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

வாய்ப்புள்ள அன்பர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுகிறேன். (உடல்நிலை காரணமாக என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும் கண்காட்சி நிறைவு பெறுமுன் ஒருநாள் பகற்பொழுதில் சென்று பார்த்து - மகிழ்ந்து - வேண்டிய புத்தகங்களை வாங்கி வரவேண்டும். மேலும் நண்பர்களைக் கண்டு-அளவளாவி மகிழவேண்டும்.)

கருத்துகள் இல்லை: