13 பிப்., 2010

யோக சித்தி-3: "கடவுளியல்-3"

எண்குணத்தான், ஏகனே, எல்லாம் அடங்கவுளான்
புண்ணியனாம் போதப் பொருள்.

அருட்சோதி இன்பக் கடவுளின் தன்மைகள் எட்டு: மாசறு தூய்மை, பேராற்றல், பேரறிவு, பேரின்பம், முற்றுணர்வு, சுதந்திரம், கட்டின்மை, இயல்பு திரியாது இருந்தவாரிருத்தல். அத்தகைய பெருமை சான்ற இறைவன் ஒப்பற்ற ஒருவனே; அவனன்றி எதுவுமில்லை, அவனில் எல்லாம் அடங்கும், அவன் யாதிலும் அடங்காச் சுதந்திரன், சுத்தன், தருமா மூர்த்தி, கொடை வள்ளல். அறிஞர் அறியும் அறிவுப் பொருள் அவனே!

கருத்துகள் இல்லை: