இரண்டாவது முறையாக நெல்லையப்பனுடன் அவனது பைக்கில் மாமல்லபுரம் சென்று திரும்பும்போது வழியில் ஒரு உருக்குலைந்த வாகனத்தைக் கண்டேன் (மேலே படம்). காலைப் பொழுதில் அந்த இனிய சூழலில் சற்றும் பொருத்தமில்லாத அந்தக் காட்சி மனதை வருத்துவதாக இருந்தது. அந்த விபத்து முதல் நாள் மதியமோ, மாலையோ நிகழ்ந்திருக்க வேண்டும். உருக்குலைந்த அந்த வாகனத்தை அருகிலிருந்த ஒரு பொறியியல் கல்லூரியை ஓட்டினார்போல் நிறுத்தியிருந்தார்கள். மற்றபடி அங்கு யாரும் இல்லை. விபத்து எப்படி நடந்தது, யார் தவறால் நிகழ்ந்தது என்று தெரியவில்லை. கிழக்குக் கடற்கரைச் சாலையில் அடிக்கடி விபத்து என்று கேள்விப்பட்டிருந்தேன். அன்றுதான் கண்ணால் கண்டேன்.
பிறகு செய்தித்தாளிலிருந்து அதில் பயணம் செய்த ஒரு தாயும் மகனும் பலியாயினர் என்றும், தந்தை மருத்துவ மனையில் அனுமதி என்றும் தெரிந்துகொண்டேன். யாரோ எவரோ எனினும் அன்று அந்தக் காட்சி திரும்பத் திரும்ப மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. இவ்வளவு நாளாகியும் அதை என்னால் மறக்கமுடியவில்லை. எனவே அதை இங்கே பதிவு செய்கிறேன்.
பொதுவாக விபத்துக்கள் பற்றி சிந்திக்கிறேன்:
காலையில் செய்தித்தாட்களைப் பிரித்தால் அச்சமூட்டும் விபத்துகளின் படங்கள், செய்திகள். நாளுக்கு நாள் விபத்துக்கள் கூடிக்கொண்டே போகிறதே தவிர குறையக் காணோம்.
விபத்தில் ஒன்று நம் தவறால் நிகழ்வது. அடுத்தது மற்றவர் தவறால் நிகழ்வது. மற்றவர் தவறால் நிகழ்வதை பெரும்பாலும் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. நாம் ஒழுங்காகச் சென்றுகொண்டிருக்கும்போது நம் மீது எதிர்பாராதவிதமாக மோதினால் நாம் என்ன செய்யமுடியும்? வாகனம் ஓட்டும்போது நாம் எச்சரிக்கையாக, கவனமாக ஓட்டுவது மட்டுமல்லாமல் அடுத்துவர் தவறையும் ஓரளவுக்கு எதிர்பார்த்து எச்சரிக்கையாக ஓட்டலாம். எல்லாவற்றிற்கும் மேலாக பிரார்த்தனை. என் தந்தையார் அடிக்கடி கூறுவார் "More things are Wrought by Prayer".
ஒருமுறை என் கிறித்துவ நண்பரின் குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தவுடன் அனைவருமாகச் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். சாதாரணமாக நாம் ஒருவொருக்கொருவர் பேசிக்கொள்வதுபோல இருந்தது: "ஆண்டவரே, இன்று நாங்கள் தொடங்கும் இந்தப் பயணம் இனிதாக வேண்டும்; அனைவரும் நல்லபடியாக வீடு திரும்பவேண்டும்; எந்த ஆபத்தோ பிரச்சினையோ நேர்ந்துவிடாமல் தாங்கள்தான் அனைவரையும் காத்து ரட்சித்து அருள் புரியவேண்டும்" அது மட்டுமல்ல, ஒவ்வொரு செயலுக்கு முன்னரும் ஒரு பிரார்த்தனை. உணவு உண்ணும் முன்னரும். நான் அதை பெரிதும் ரசித்தேன். நம் குடும்பங்களில் இதுபோல் செய்வதில்லையே ஏன் என்று எண்ணிக் கொண்டேன்.
இருக்கட்டும். மீண்டும் விபத்துக்கள் பற்றி. நம்மால் விபத்து நேராமலிருக்க என்ன செய்யலாம்?
வாகனத்தை ஓட்டுபவர் மது அருந்தக்கூடாது.
மூளையை மந்தமாக்கும் (Drowsy) மருந்துகள் (Cough Syrup , anti-histamines போன்றவை) சாப்பிட்டபின் ஒட்டாதிருத்தல். (வேறு யாரைவது ஓட்டச் சொல்லலாம்).
மொபைல் ஃபோனில் பேசாதிருத்தல்.
சாலையிலுள்ள விளம்பரங்களையோ, சாலையில் செல்வோரையோ வேடிக்கை பார்க்கக் கூடாது.
இயன்றவரை அகால நேரங்களில் வாஹனம் ஓட்டுவதைத் தவிர்த்தல்; தவிர்க்கமுடியாதபோது, பகலில் நல்ல ஓய்வெடுத்துவிட்டு, இரவில் ஒட்டுதல்.
கவனத்தைக் குறைக்கும் வகையில் உடன் பயணிப்போரிடம் பேசுவதோ, சண்டையிடுவதோ கூடாது.
கட்டுப்படுத்த முடியாத அதிவேகம் கூடவே கூடாது.
உடல் நலம் சரியாக இல்லாதபோது ஓட்டக்கூடாது.
போக்குவரத்து விதிகளை முற்றிலுமாக மதித்து நடத்தல்.
எவ்வளவுதான் திறமைசாலியாக, அனுபவமிக்கவராக இருந்தாலும் சரி, அலட்சியம் கூடவே கூடாது.
இப்படி நமக்கு நாமே கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு, அதை அட்சரம் பிசகாமல் பின்பற்றுதல் அவசியம்.
அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்: நமக்காக நம் வீட்டில் காத்திருக்கும் நம் அன்புக்குரியவர்களை எண்ணிப்பாருங்கள். ஒரு வினாடி கவனக்குறைவால் எத்தனை குடும்பங்கள் சிதறிப்போயிருக்கின்றன, எத்தனை கனவுகள் களைந்து போயிருக்கின்றன! உருக்குலைந்து போவது உங்கள் வாஹனம் மட்டுமல்ல, உங்கள் குடும்பமும் கூடத்தான். இதை எப்போதும் மறவாதீர்!
அனைவருக்கும் விழிப்புணர்வைத் தாருங்கள், விவேகத்தைத் தாருங்கள், தெளிவான சிந்தனையைத் தாருங்கள் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக