இன்று அக்ஷய திரிதியை. சந்திரனின் மூன்றாம் பிறை நாள் திரிதியை. சித்திரை மாதம் அமாவாசைக்குப்பின் வரும் திரிதியை, அக்ஷய திரிதியை என்று போற்றப்படுகிறது. அக்ஷயம் என்றால் வளர்வது என்று பொருள். இந்த நாளில்தான் பூலோகம் தோன்றியது என்று புராணங்கள் கூறுகின்றன. மேலும் பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது சூரிய பகவான் அவர்களுக்கு ஒரு அக்ஷய பாத்திரத்தை வழங்கி அவர்களுக்கு எந்நிலையிலும் உணவு கிடைக்க வழிசெய்தார் என்றும் புராணங்கள் கூறுகின்றன. அந்த நாள் அக்ஷய திரிதியை. பரசுராமர் அவதரித்த நாளும் அக்ஷய திரிதியைதான். இப்படி இந்த நாளுக்கு பல சிறப்புகள்.
இந்த நாளில் மேற்கொள்ளப்படும் சுப காரியங்கள் அனைத்தும் மேன்மை பெறும் என்று நம்பப் படுகிறது. தான தர்மங்கள் செய்வது, புத்தாடை, ஆபரணங்கள் வாங்குவது வாழ்வில் செழிப்பைத் தரும் என்றும் நம்பப் படுகிறது. (தகவல்கள் அனைத்தும் தினத்தாட்களிளிருந்து சுட்டவை).
எக்கச்சக்கமான நகைக்கடை விளமபரங்கள்! எப்படியாவது கஷ்டங்கள் தீராதா, விடியல் பிறக்காதா என்ற நடுத்தர மக்களின் ஏக்கத்தைப் புரிந்துகொண்டு அதைக் காசாகும் வியாபாரிகளின் திறமை!! (நானும் விதிவிலக்கில்லை. ரூபாய் ஆயிரத்து எந்நூறு கொடுத்து ஒரு கிராம் தங்க நாணயத்தை (இருபத்திரண்டு காரட்) வாங்கினேன்.)
இன்று காலை பால், தூளுப்பு, கல்லுப்பு, பச்சரிசி, மைதாமாவு, கோதுமை மாவு, அரிசி மாவு போன்ற வெண்மையான பொருட்களை வாங்கி, வீட்டில் வைத்து வழிபட்டேன்: கள்ளம் கபடமற்ற வெள்ளை மனதைத் தாருங்கள்; கஷ்டமெல்லாம் நீங்கி, நல்ல காலம் பிறக்கட்டும்; வீடு செழிக்கட்டும் என்று வேண்டிக்கொண்டேன். மூன்று தயிர் சாதா பொட்டலங்கள் வாங்கி ஏழைகளுக்கு வழங்கினேன். வாழைப்பழங்கள் வாங்கி மாடுகளுக்குக் கொடுத்தேன்.
காலை நண்பர் செந்திலுடன் அவரது பைக்கில் குன்றக்குடி சென்று அருள்மிகு முருகப்பெருமானி வழிபட்டேன். அக்கோயிலில் இன்று பதினைந்து-இருபது திருமணங்கள்! கோவிலுக்குள் ஒரே கூட்டம்! அதன் பின், நான் மட்டும் பிள்ளையார்பட்டி சென்று அருள்மிகு கற்பகவினாயகரை வழிபட்டேன்.
காரைக்குடியில் அருள்மிகு கொப்புடையம்மன் கோவிலுக்குச் சென்று வழிபட்டேன். அதன் பின் நகர சிவன் கோவில். அங்கு வழிபட்டுவிட்டு, மதிய உணவை முடித்தபின், வீடு திரும்பினேன்.
மதியம் ஒரு குட்டித்தூக்கத்திற்குப் பின், மாலை கோட்டையூரிலுள்ள, அருள்மிகு சொற்கேட்ட விநாயகர் கோவிலுக்குச் சென்று வழிபட்டேன்.
ஆக இன்று முழுவதுமே வழிபாட்டில் கழிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.
இந்த நன்னாளில் நாடு செழிக்க, மக்கள் அனைவரும் இன்புற்று வாழ, எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மேலே குன்றக்குடியில் எடுத்த சில படங்களைப் பதிவு செய்துள்ளேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக