3 மே, 2010

யோக சித்தி-24: கடவுள் தன்மை-5

உள்ளப் பொதுவெளியில் ஓங்கும் மணிவிளக்கை
உள்ளலற உள்ளுறவிற் காண்.

உள்ளம் பொதுவெளி, அம்பலம், தகராகாய நிலையம். அதில் ஓங்கி ஒளிரும் ஆடமணி விளக்குள்ளது. அது சுத்தான்ம ஜோதி. அதை ஒவ்வொருவரும் காண்பது பிறப்புரிமை. எப்படிக் காண்பது? முதலில் உள்ளல் அரவேண்டும். அதாவது பிற நினைப்புகளை விலக்க வேண்டும். "வலிவுள்ள சங்கற்ப விகற்பங்களை அறவே ஒதுக்கி மனத்தை இந்திரியங்களிலிருந்து மீட்டு, சம நிலைப்படுத்தி, உள்ளே ஆன்மாவில் நிலைக்கொள்" என்று கீதை உபதேசிக்கிறது. இதுவே உள்ளல் அறுவது; சித்த சலனங்களையும், சங்கற்பக் குழாங்களையும் நீக்குவது. அதனால் திரையற்ற ஒளிக்கடல் போல மனம் சாந்தமாகும். இது முதற் பயிற்சி. இரண்டாவது, உள்ளுறவு. வெளியுரவினால் பற்றுண்டாகும். உள்ளுரவினால் விடுதலை உண்டாகும். உள்ளே எதனுடன் உறவு செய்வது? சுத்த மனம். அந்த உறவினால் என்ன பயன்? சுத்தான்மவைக் காண்பதே, உணர்வதே, 'அது நான்' என்று அறிவதே பயன்.

கருத்துகள் இல்லை: