பெண்ணின்றி ஆணில்லை; ஆணின்றிப் பெண்ணில்லை;
எண்ணிருவர் சேர்ந்தே இகம்.
இறை இயற்கை, சிவம் சக்தி, முதல்வன் ஆணை, பரம்பொருள் பராசக்தி என்று தெய்வத் தத்துவங்கள் இனிபிரியாத இரண்டாயிருக்கின்றன. அதுபோலவே, உலகிலும் எல்லாத் தோற்றங்களும் ஆண்-பெண்ணாக விளங்குகின்றன. ஆண்பெண் என்னும் இரண்டு தத்துவங்களும் கூடித்தான் இவ்வுலக வாழ்வு நடக்கிறது. பென்னில்லாவது ஆணாவது, ஆணில்லாது பெண்ணாவது உண்டாவதில்லை. இரண்டும் பிரிந்தால் வாழ்வுமில்லை; உலகுமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக