இன்று செப்டம்பர் இருபத்து
ஐந்தாம் நாள். இந்த வருடத்தின் 268 வது நாள். இந்த ஆண்டில் இன்னும் 97
நாட்கள் எஞ்சியுள்ளன.
சில முக்கிய நிகழ்வுகள்
------------------------------------------
§ 275 -ஆம் ஆண்டில் இந்த நாளில் ரோமாபுரி செனட்
சபை பேரரசர் அரேலியனின் (Aurelian) படுகொலையைத் தொடர்ந்து, மார்க்கஸ் கிளாடியஸ் டெசிட்டசை
(Marcus Claudius Tacitus) பேரரசராக அறிவித்தல்.
§ 1066-ல் இந்த நாளில் நடந்த ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ்
யுத்தத்தோடு வைக்கிங்குகளின் இங்கிலாந்துப் படையெடுப்பு முடிவுக்கு வருதல்.
§ 1396-ல் இந்த நாளில் நிக்கொபோலிஸ் யுத்தத்தில் (Battle
of Niccopolis) ஆட்டோமான் பேரரசர் முதலாம் பாயசிட் (Ottoman Emperor Bayezid I) கிறிஸ்துவப் படைகளை
தோற்கடித்தல்.
§ 1690-ல் இந்த நாளில் அமெரிக்காவில் முதல் செய்தித்தாள்
பிரசுரிக்கப்படுதல். (Publick Occurrences Both Foreign and Domestick
§ 1789-ல் இந்த நாளில் அமெரிக்க காங்கிரஸ் அரசியல்
அமைப்புச் சட்டங்களுக்கு பன்னிரண்டு திருத்தங்களை ஏற்றுக்கொள்ளுதல். இந்தத் திருத்தங்கள்
"Bill of Rights" என்ற பெயரைப் பெறுகின்றன. .
§ 1846-ல் இந்த நாளில் அமெரிக்கப் படைகள் ஜெனெரல்
சக்காரி டைலரின் (General Zacchary Taylor) தலைமையில் மெக்சிகோவின் மாண்டிரே
(Monterrey) நகரைப் கைப்பற்றுதல்.
§ 1890-ல் இந்த நாளின் அமெரிக்க காங்கிரஸ் செகுயா
தேசிய பூங்காவை உருவாக்க ஒப்புதல்.
§ 1906 –
In the presence of the king and before a great crowd, Leonardo Torres Quevedo successfully
demonstrates the invention of the Telekino in
§ 1906-ல் இந்த நாளில், அரசர் மற்றும் போது மக்கள்
முன்னிலையில், லியனார்டோ டோரஸ் க்வேடோ ரிமோட்
§ 1911-ல் இந்த நாளில் நடந்த ஒரு வெடி விபத்தில் பிரெஞ்சுப்
போர்க்கப்பலான லிபர்டி முற்றிலுமாக அழிதல்.
§ 1926-ல் இந்த நாளில் அடிமைத்தனத்தையும், அடிமை வர்த்தகத்தையும்
தடை செய்யும் சர்வதேச உடன்படிக்கை கையெழுத்தாதல்.
§ 1956-ல் இந்த நாளில் TAT-1 எனப்படும்
உலகில் முதல் முறையாக கடலுக்கடியில் தொலைபேசி கேபிள் அமைக்கப்படுதல்.
§ 1959-ல் இந்த நாளில் இலங்கைப் பிரதமர் சாலமன் பண்டாரநாயக்கே,
தலுதுவ சோமராம எனும் புத்த பிக்குவால் தாக்கப்பட்டு, மறுநாள் உயிரிழத்தல். (பின்னாளில்
இவரது மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்கேவும்,
அதன் பின்னர் அவரது புதல்வி சந்திரிகா குமாரதுங்கவும் இலங்கை அதிபராயினர்)
§ 1962-ல் இந்த நாளில் அல்ஜீரிய மக்கள் குடியரசு முறைப்படி
அறிவிக்கப்படுதல். பர்ஹத் அப்பாஸ் இடைக்கால அரசின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுதல்.
§ 1962-ல் இந்த நாளில் உள்நாட்டுப் புரட்சி.
புதிதாக முடிசூட்டப்பட்ட இமாம் அல் பதரை (Imam al-Badr ) நீக்கிவிட்டு, தன்
தலைமையில் ஏமன் நாட்டை ஒரு குடியரசாக அப்துல்லா அஸ் சல்லல் (Abdullah
as-Sallal ) அறிவித்தல்.
§ 1972-ல் இந்த நாளில் நடந்த ஒரு வாக்கெடுப்பில் (Referendum) நார்வே மக்கள் ஐரோப்பியக்
குடும்பத்தின் (European Community) உறுப்பினராக
மறுத்தல்.
§ 1992-ல் இந்த நாளில் அமெரிக்காவின் நாசா நிறுவனம்
௫௧௧ லட்சம் டாலர் செலவில் செவ்வாய் கிரகத்திற்கு "மார்ஸ் அப்சர்வர்"
விண்கோளை ஏவுதல். பதினோரு மாதங்களுக்குப்பின் இந்த முயற்சி தோல்வி அடைதல்.
§ 2003-ல் இந்த நாளில் ஜப்பானின் ஹொக்கைடோ தீவுக்கருகில்
ரிக்டர் அளவுகோலில் எட்டு என்ற அளவிற்கு ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படுதல்.
§ 2008-ல் இந்த நாளில் ஏழாம் செஞ்சு (Shenzhou)
என்ற விண்கோளை சீனா விண்ணில் செலுத்துதல்.
சில பிறப்புக்கள்
----------------------------
§ 1694-ல் இந்த நாளில் பிரிட்டிஷ் பிரதமர் ஹென்றி
பெல்ஹாம் (Henry Pelham) பிறந்தார்.
§ 1711-ல் இந்த நாளில் சீனப் பேரரசர் க்வின்லாங் (Qinlong)
பிறந்தார்.
§ 1744-ல் இந்த நாளில் பிரஷ்ய அதிபர் இரண்டாம்
ஃபிரடெரிக் வில்லியம் பிறந்தார்.
§ 1862 -ல்
இந்த நாளில் ஆஸ்திரேலியாவின் ஏழாவது பிரதமர் பில்லி ஹ்யூஸ் (Billy Hughes) பிறந்தார்.
§ 1897-ல் இந்த நாளில் புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளரும்,
நோபல் பரிசு பெற்றவருமான வில்லியம் ஃபாக்னர் (William Faulkner) பிறந்தார்.
§ 1920-ல் இந்த நாளில் இந்தியாவின் புகழ் பெற்ற விண்வெளி
ஆராய்ச்சி நிபுணரான சதீஷ் தவான் (Satish Dhavan) பிறந்தார்.
§ 1921-ல் இந்த நாளில் நியூசிலாந்துப்
பிரதமர் சர் ராபர்ட் மல்டூன் (Sir Robert Muldoon) பிறந்தார்.
§ 1932 -ல்
இந்த நாளில் ஸ்பானியப் பிரதமர் அடோல்ஃபோ சுவாரஸ் பிறந்தார்.
சில மறைவுகள்
-----------------------------
§ 1534-ல் இந்த நாளின் போப்பாண்டவர் ஏழாம் கிளமன்ட்
மறைந்தார்.
§ 1986-ல் இந்த நாளில் நோபல் பரிசு பெற்ற ருஷ்ய வேதியல்
நிபுணர் நிக்கொலோய் நிக்கொலேயேவிச் செம்யநோவ் (Nikkolai Nikkolaeyevich Semyanov) மறைந்தார்.
சில விடுமுறை நாட்களும், கொண்டாட்டங்களும்
-------------------------------------------------------------------------------------
§ மொசாம்பிக் நாட்டில் புரட்சி தினம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவிற்கு எனது உளமார்ந்த நன்றிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக