30 டிச., 2015

எனக்குப் பிடித்த கவிதை-77: கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பூகோளம் மாறிப்போன கதை


கிராமம் வளர்ந்துதானிருக்கிறது.
முகத்தை மூடி
தாடி வளர்ந்த மாதிரி
ஆளிருக்கும் வீடுகளில்
திண்ணையில்லை
திண்ணையுள்ள வீடுகளில்
ஆட்களில்லை
முன்னொரு காலத்தில்
இலவசமாய்க் கிடைத்த
பேச்சுத் தோழமை
இன்று
கட்டணங்களுக்குட்பட்டது
அல்லது
தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பது
...
வீட்டுக்குள் எல்லோரும்
கதவடைத்துக் கொண்டதால்
வந்து வந்து தேய்கிறது
ரசிகர்கள் இல்லாத ராத்திரி நிலா.


-    (ஒரு பகுதி மட்டும்)

சூரியின் டைரி-66: CREATE PUBLIC AWARNESS Group in my Facebook

எனது முகனூல் பக்கத்தில் புதிதாக ஒரு குழுவை ஆரம்பித்துள்ளேன். இதன் நோக்கம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பது. எனவே இதற்கு CREATE  PUBLIC  AWARNESS  என்று பெயர் சூட்டி நிறைய அரசு, அரசு அலுவலர்களின் மெத்தனப்போக்கினால், அலட்சியப்போக்கினால், மக்களின் அறியாமையால் நடைபெறும் கொடுமைகள் பற்றி பதிந்துவருகிறேன்

நல்லதொரு மாற்றம் நிகழ, முதற்படி விழிப்புணர்வு. விழிப்புணர்வு ஏற்பட்டபின் செயல்படும் உத்வேகம் பிறக்கவேண்டும். செயல்படாமல் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை.  

சென்னை  நகரம் வெள்ளத்தில் மூழ்கி பட்ட அவஸ்தையை நேரடியாகவோ, டிவி மூலமாகவே, செய்தித்தாட்கள் மூலமாகவோ அனைவரும் பார்த்திருக்கலாம்

வருடாவருடம்  நிகழும் இந்த அவஸ்தை பற்றி போதிய ஏரி குளங்களை தூர்வாறி, கரைகளை உயர்த்தி, மழை நீர் வடிகால்களை சீரமைக்காததாலும் மக்கள் பட்ட துயர், வீணான குடிநீர், பொதுச் சொத்து மற்றும் தனிப்பட்ட இழப்பு சொல்லிமுடியாது

தனிப்பட்ட நபர்களை தாக்காமலும், அரசியல் வாடை வீசாமலும், எச்சரிக்கையுடன் செயல்படுகிறேன். அது மட்டுமல்ல, ஒரேயடியாக எதிர்மறையாக இல்லாமல், சில மக்களுக்குப் பயன்படும் நல்ல செய்திகளையும் பகிரிந்து கொள்கிறேன்.

நலக்குறிப்புகள்-94: அவரைக்காய் பற்றி சில பயனுள்ள தகவல்கள்


வைட்டமிங்கள் , சி, மற்றும் புரதம்,. நீர்ச்சத்து நிறைந்தது.
கர்ப்பகாலத்தில் சாப்பிட்டால், சிசுவின் மூளை வளர்ச்சிக்கு பெரித்தும் துணை புரியும்.

இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்தசோகைக்கு சிறந்த மருந்தாகும்.

நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் குணமாகும்.
கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்பு வளர்ச்சியை சீராக்கும்.
கெட்ட கொழுப்பைக் குறைத்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு துணைபுரியும்.


சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது.

அன்றாட வாழ்வில் அபாயங்கள்-1: குளோரின் நச்சுவாயுவால் ஏற்படும் பாதிப்புக்கள்




சென்னை வெள்ளம் குப்பைகூளங்களையும், சாக்கடைகளையும் வீட்டினுள்ளும், நடமாடும் தெருக்களிலும் கொண்டு குவித்துள்ளது. எனவே சகட்டுமேனிக்கும் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்படுகிறது. அதனால் குளோரின் என்ற நச்சுவாயு வெளியாவதால் சுவாசக் கோளாறுகள், ஜீரணக் கோளாறுகள், தோலில் ஒவ்வாமை, குறிப்பாக குழந்தைகளுக்கு பாதிப்பு போன்ற பல பாதிப்புகள்  நேர்கின்றனமேலும் இந்த வாயு நம் நாசியில் புகுந்து, நம் உடலிலுள்ள பயனுள்ள நுண்ணுயிர்களையும் அழிக்கிறது. இதற்கு மாற்றாக நல்ல நுண்ணுயிர்க்கரைசலைப் (Good Micro-organisms) பரிந்துரைக்கின்றனர். இதுபற்றி விரிவான கட்டுரை தி இந்து தமிழ் நாளிதழில் (டிசம்பர் 19, 2015), “ஆரோக்கியத்தைப் பாதிக்கும் குளோரினிலிருந்து விடுதலைஎன்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. தி இந்து தளத்திற்குச் சென்றால் இக்கட்டுரையை வாசிக்க முடியும்.

எனக்குப் பிடித்த இணையதளம்/வலைப்பூ-1: க்ரியா

க்ரியா இணையதளத்தை www.crea.in என்ற முகவரியில் காணலாம்.


க்ரியாவின் இணையதளத்தில் உள்ள சொல்வங்கியில்  450,000 சொற்கள் இடம்பெற்றுள்ளன. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) 1992 பதிப்பை இலவசமாக இந்த இணையதளத்தில் புரட்டிப்பார்க்கலாம்

இன்றைய சிந்தனைக்கு-191: வேதாத்ரி மகரிஷி

உருவாகி  உடல்வளர்ந்து  வாழ்கின்றேன் என்
   உடலை வளர்த்து அறிவூட்டி  வாழ்தற்கென்னை
ஒரு  மனிதனாக்கி வைத்தும்இன்றும் கூட
   உணவு உடை, மற்றும் பல  வசதி எல்லாம்
தருகின்ற மனித இனம் தனக்கு என் சக்தி
   தக்கபடி  பயன்படுத்துகின்றேன்;ல்  என்ற
பெருநோக்குச் செய்கையே, நிஷ்காம்ய  கர்மப்
   பேரறமாம்மனிதனுடைய கடமை ஈதே.

-           வேதாத்ரி மகரிஷி

இன்று ஒரு தகவல்-49: ரேஷன் அட்டை விண்ணப்பம் தொடர்பாக

ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து 80 நாட்களுக்குள் வழங்கவேண்டும்
.
விண்ணப்ப மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்.

புகார் தெரிவிக்க:

குறுஞ்செய்தி – 9445484748


தொலைபேசி – 7299008002

ஆன்மீக சிந்தனை-65: அன்னை சாரதாதேவி

இறைவனிடத்தில் செலுத்தும் அன்பின் ஆழத்தைப் பொறுத்தே 

இறைவனை அடைய முடியும் – அன்னை சாரதாதேவி